இது தமிழ் ⚡ AMP

சாம் C.S. இசையில் பாடும் யுவன் ஷங்கர் ராஜா

By Dinesh R | Jul 28, 2018

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் ஒரு சிலரே!

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அந்த வரிசையில் சாம் C.S. மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களைத் தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம். வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவரவிருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார்.

யுவனும் ஓகே சொல்ல அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனைp பாட வைத்துள்ளார். இப்பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.