Shadow

Tag: Lucifer 2

L2: எம்புரான் | Anamorphic format 1:2.8

L2: எம்புரான் | Anamorphic format 1:2.8

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்கப் பல இடங்களில் படத்தின் விளம்பரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையிலும், இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சிக்காகப் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.நடிகர் டோவினோ தாமஸ், “இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை. இப்படி ஒரு படத்தில் நான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், ப்ரித்திவிராஜ் உடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஆசீர்வாதம். லூசிஃபர் படத்தில் நான் சின்ன ரோலில் வந்தாலும், அது என் வாழ்வில் கொடுத்த இம்பேக்ட் மிகப்பெரிது. இந்தப் படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். மலையாள சினிமாவி...