
சிறப்புச் செய்திகள்
சினிமா

ஐ ஆம் கேம் | I’m Game விமர்சனம்
பெரிய முதலீட்டில் இப்படத்தைத் தயாரித்துள்ளார் துல்கர் சல்மான். சூதாட்டத்தில் தன் வயமிழக்கும் டேன் ஜானிற்கு விபத்து நேரிட்டு வலது…

Immortal விமர்சனம்
இம்மார்ட்டல் என்றால் இறப்பற்றவர் எனப் பொருள் கொள்ளலாம். மஹி எனும் இளைஞனுக்கு, தனது வீட்டில் ஓர் அறையைக் குறைந்த…

ரோமியோ பிக்சர்ஸும், ஏவியேட் பிக்சர்ஸும் இணையும் புதுப்படம்
பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது புதிய…

“இலக்கை விட பயணமே முக்கியம்” – கவின் | Hi 🙂 movie
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ஹாய் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில்…

கமல் ஹாசன் – வைரலாகும் புதிய லுக்
கமல்ஹாசனின் புதிய திரைப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் ஒருமுறை பெரும் உற்சாக…
சமூகம்

Zee 5 இல் FIFA 2026 உலகக் கோப்பை காற்பந்து | Bhaichung Bhutia
ஜீ5 தனது தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பைக் கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து…

“மனம் திறந்த உரையாடலுக்கு அழைப்பு” – கமல் ஹாசன்
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி…

ரவீந்திர சங்கீதம் – என்றும் புதுமை | Sur O Lohori
கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 165 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ‘Sur O Lohori (இசையும் தாளகதியும்)’, கலை…

The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல்
யாரோ ஒருவர் யாருக்கோ அழைத்த சில நொடி தொலைபேசி உரையாடல், உங்கள் மனதைக் கனக்கச் செய்துவிடும் என்று சொன்னால்…

நாங்க இருக்கோம் – தேர்தல் விழிப்புணர்வுக் குறும்படம்
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்…
சமீபத்திய செய்திகள்

ஐ ஆம் கேம் | I’m Game விமர்சனம்
பெரிய முதலீட்டில் இப்படத்தைத் தயாரித்துள்ளார் துல்கர் சல்மான். சூதாட்டத்தில் தன் வயமிழக்கும் டேன் ஜானிற்கு விபத்து நேரிட்டு வலது கையை இழக்க வேண்டி வருகிறது. அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து ஒரு நன்கொடையாளரின் கையைப் பொருத்துகின்றனர். அதன் பின் டேன் ஜானிற்கு விசித்திரமான பிரச்சனை எழுகிறது. டேன் எப்படி அப்பிரச்சனையை எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் முடிவு. இரண்டாவது நாயகனாக, விக்னேஷ் தாஸ் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்டனி வர்கீஸ். முதற்பாதியில் பார்வையாளர்களை முழுவதுமாக துல்கர் சல்மான் […]

ஏன் என்னை ஏதோ செய்தாய் | Yen Ennai Edho Seidhai review
படத்தின் தலைப்புத்தான் படத்தின் கருவும் கூட! நாயகியைப் பார்க்கும் நாயகனுக்கு, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ எனத் தோன்றுகிறது. மது எனும் பாலியல் தொழிலாளியைச் சந்திக்கும் கார்த்திக்கிற்கு, அவள் மீது காதல் வருகிறது. மதுவும் கார்த்திக்கை விரும்ப, இருவரும் லிவிங் டுகெதரில் இணைகின்றனர். இவ்வுறவு கல்யாணத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்க, குடிப்பழக்கமுடைய கார்த்திக்கோ போதையில், மதுவிடம் கோபத்தில் வார்த்தையை விட்டுவிட, மனதுடையும் மது கார்த்திக்கை விட்டுச் சென்று விடுகிறாள். அந்தப் பிரிவாற்றாமை கார்த்திக்கை என்ன செய்கிறது […]

Immortal விமர்சனம்
இம்மார்ட்டல் என்றால் இறப்பற்றவர் எனப் பொருள் கொள்ளலாம். மஹி எனும் இளைஞனுக்கு, தனது வீட்டில் ஓர் அறையைக் குறைந்த விலையில் உள்வாடகைக்கு விடுகிறார் அழகான யுவதியான சிந்து. சிந்துவால் மிகவும் கவரப்படும் மஹி, சிந்துவைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால், அந்த வீட்டை விட்டுத் தன்னால் என்றைக்கும் வெளியேற முடியாதபடி சிந்துவால் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற விபரீத உண்மை மெல்ல மஹிக்குப் புரியத் தொடங்குகிறது. சிந்து யார், அவர் ஏன் மஹியைச் சிறைப்பிடித்து வைக்கிறார் என்பதே படத்தின் கதை. மஹிக்கு […]

ரோமியோ பிக்சர்ஸும், ஏவியேட் பிக்சர்ஸும் இணையும் புதுப்படம்
பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது புதிய படத்தினை ஏவியேட் பிக்சர்ஸ் கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ரைட்டர் பட இயக்குநரும், DC படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் […]

“இலக்கை விட பயணமே முக்கியம்” – கவின் | Hi 🙂 movie
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ஹாய் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், “இயக்குநர் விஷ்ணுவுடனும், நடிகர் கவினுடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு இது நான்காவது படம். கவின் எனக்கு பள்ளிக் […]
சிறப்புத் தலைப்புகள்

ஐ ஆம் கேம் | I’m Game விமர்சனம்
பெரிய முதலீட்டில் இப்படத்தைத் தயாரித்துள்ளார் துல்கர் சல்மான். சூதாட்டத்தில் தன் வயமிழக்கும் டேன் ஜானிற்கு விபத்து நேரிட்டு வலது கையை இழக்க வேண்டி வருகிறது. அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து ஒரு நன்கொடையாளரின் கையைப் பொருத்துகின்றனர். அதன் பின் டேன் ஜானிற்கு விசித்திரமான பிரச்சனை எழுகிறது. டேன் எப்படி அப்பிரச்சனையை எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் முடிவு. இரண்டாவது நாயகனாக, விக்னேஷ் தாஸ் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்டனி வர்கீஸ். முதற்பாதியில் பார்வையாளர்களை முழுவதுமாக துல்கர் சல்மான் […]

Immortal விமர்சனம்
இம்மார்ட்டல் என்றால் இறப்பற்றவர் எனப் பொருள் கொள்ளலாம். மஹி எனும் இளைஞனுக்கு, தனது வீட்டில் ஓர் அறையைக் குறைந்த விலையில் உள்வாடகைக்கு விடுகிறார் அழகான யுவதியான சிந்து. சிந்துவால் மிகவும் கவரப்படும் மஹி, சிந்துவைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால், அந்த வீட்டை விட்டுத் தன்னால் என்றைக்கும் வெளியேற முடியாதபடி சிந்துவால் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற விபரீத உண்மை மெல்ல மஹிக்குப் புரியத் தொடங்குகிறது. சிந்து யார், அவர் ஏன் மஹியைச் சிறைப்பிடித்து வைக்கிறார் என்பதே படத்தின் கதை. மஹிக்கு […]

7 ஸ்டார் பாய்ஸ் | 7 Star Boys review
‘ஆணப்பரம்பிலே வேர்ல்ட் கப் (Aanaparambile World Cup)’ எனும் மலையாளப் படம் 2022 இல் வெளியானது. அப்படத்தைச் சிறப்பாக மொழிமாற்றம் செய்துள்ளனர். கால்பந்து உலகக் கோப்பை 2018 இன் முதல் போட்டியில் தொடங்கும் கதை, கடைசிப் போட்டியில் நிறைவுறுகிறது. பன்னிரெண்டு வயது ஆகவில்லை என்று சொல்லி மைதானத்திற்குள் சிறுவர்களை அனுமதிக்க மறுக்கிறார் பயிற்சியாளர். அவர் பயிற்சியளிப்பதும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கே! பயிற்சியாளரால் துரத்தப்படும் ஏழு சிறுவர்களிலேயே இளையவனான 9 வயது உமர், ‘7 ஸ்டார் ஆத்தங்கரை […]

பெத்லகேம் குடும்ப யூனிட் | Bethlehem Kudumba Unit review
பிரேமலு படத்து இயக்குநர், மீண்டும் மமிதாவுடன் இணைந்து, ஒரு ஜாலியான நகைச்சுவையான ஃபீல்-குட் காதல் படத்தைக் கொடுத்துள்ளார். கேரளத்தின் சில சர்ச்களில், பிரார்த்தனை கூட்டங்கள், தான தர்மங்கள், சமூக தொண்டுகள் மற்றும் சர்ச்சின் நிர்வாகம் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்க, தேவாலயத்தில் கூடும் குடும்பங்களைப் பிரிவுகளாகப் பிரித்து, அப்பிரிவுக்குப் புனிதர்களின் பெயரையோ அல்லது புனித இடத்தின் பெயரையோ சூட்டிக் குடும்ப யூனிட்களை உருவாக்குவார்கள். அது போன்ற ஒரு யூனிட்டான பெத்லகேம் எனும் குடும்ப யூனிட்டைச் சேர்ந்த ஜஸ்டினின் பக்கத்து […]

Once More review | ஒன்ஸ் மோர் விமர்சனம்
முதல் காதல் கைக்கூடாத விரக்தியிலும் கோபத்திலும் உள்ள ஒருவனது வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவனுக்கு இரண்டாவது காதல் மலரும்போது, முதல் காதல், ‘மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும்’ எனக் கோரி நிற்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை. மிகவும் இறுக்கமாகவும், பிரபஞ்சத்தின் மீது கடுங்கோபத்துடனும் இருக்கும் ரகுவரனை, மிக அதிகமாகக் காதலிக்கிறார் அவரது கல்லூரி ஜூனியரான அஞ்சலி. கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் ரகுவரன், அஞ்சலியை ஏற்றுக் கொள்வதில் மிகுந்த மனத்தடையுடன் தவிக்கிறார். ஆனால் அஞ்சலியின் உறுதி ரகுவரனின் இறுக்கத்தைத் […]

Hi 🙂 விமர்சனம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘யாரடி நீ மோகினி’ படப்பாணியில் ஒரு படம் தர முயற்சி செய்துள்ளது தயாரிப்பாளர் மற்றும் நடிகை நயன்தாராவின் குழு. ரஜினி ரசிகனாகவும், கமல் ரசிகையாகவும் நிறைய முரண்களோடு இருக்கும் கவினும் நயன்தாராவும் ஒன்று சேர்வது தான் கதையின் ஒருவரிக்கதை. காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ள கவின் ஊரைவிட்டு ஓடி வந்துவிடுகிறார். இன்னொரு புறம் தன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவருகிறார் நயன். […]

டாக்ஸிக் விமர்சனம் | Toxic review
கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட படம். இந்தியாவே எதிர்பார்ப்போடு இருந்த ஒரு படம். இது, பான்-இந்தியப் படம் இல்லை; பான்-உலகப்படம் என்றளவுக்கு எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியிருந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தும், கோவா அந்த சுதந்திர எல்லைக்குள் 1947 ஆம் ஆண்டு வரவில்லை. அங்கு வெளிநாட்டவர் கோலோச்சுகிறார்கள். கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. கோவாவைக் கட்டியாளும் ஒரு பெரிய டான் சால்வடாரின் அடியாட்கள் போல் வலம் வருகிறார்கள் ராயாவும், அவரின் அக்கா கங்காவும்! ராயாவிற்கும், டானின் […]

Buddhi Clinic: முழுமையான மனநலம் – ஒரு தேசிய உரையாடல்
ஒருங்கிணைந்த மனநல பராமரிப்பு குறித்த இரண்டாவது தேசிய பட்டறையை ஏற்பாடு செய்திருந்தது புத்தி கிளினிக். இந்த அமர்வில், மனநல பராமரிப்பின் எதிர்காலம் குறித்த பரந்த பொது உரையாடலுக்காக இந்தியா முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ஒன்றுகூடினர். இரண்டு நாள் பட்டறையின் போது, மனநல மருத்துவம், நரம்பியல் அறிவியல், ஒருங்கிணைந்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா, சமூக மற்றும் தாய்வழி மனநலம், மற்றும் சுகாதார தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், மனநல பராமரிப்பு எவ்வாறு […]
IConS XII – மனநல மேம்பாட்டில் புதுமைகள் | SCARF India
ஸ்கிட்சோஃப்ரீனியா ஆராய்ச்சி அறக்கட்டளை (SCARF), ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 22 வரை, சென்னையில் உள்ள தி சவேரா ஹோட்டலில், ஸ்கிdசோஃப்ரீனியா (மனச்சிதைவு) பற்றிய சர்வதேச மாநாட்டின் (IConS XII) 12வது பதிப்பின் நிகழ்வை நடத்தியது. இம்மாநாடு தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் கொண்டாடினர். ஸ்கிட்சோஃப்ரீனியா ஆராய்ச்சி அறக்கட்டளையால் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் IConS, ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் மற்றும் வல்லுநர்களை ஒன்றிணைத்து, ஸ்கிட்சோஃப்ரீனியா மற்றும் மனநல ஆராய்ச்சி மற்றும் நடைமுறையில் ஏற்படும் புதிய […]

Insidious: Out of the Further விமர்சனம்
இன்சிடியஸ் என்றால் கண்ணுக்குப் புலப்படாமல் பரவித் தீங்கு விளைவிக்கும் எனப் பொருள் கொள்ளலாம். இன்சிடியஸ் படத்தொடரில் மொத்தம் ஐந்து பாகங்கள் வெளியாகியுள்ளன. ஆறாவது பாகமான இப்படம், 2023 இல் வெளிவந்த தி ரெட் டோர் படத்தின் தொடர்ச்சி என்றாலும், தனிப்படமாகப் பாவிக்கும்படியே கதை அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆவி வாழும் இடத்திற்கு ‘தி ஃபர்தர்’ எனப் பெயர். அமானுஷ்யமான ஒரு சிவப்புக் கதவினைத் திறந்தால், பூமியில் இருந்து ‘தி ஃபர்தர்’க்குச் சென்றுவிட முடியும். முந்தைய பாகத்து நாயகனுக்கு அத்தகைய […]

ONE MAN விமர்சனம்
சினிமா மீது ஒப்பற்ற காதலும், தன் மீது அசாத்திய நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய மகத்தானதொரு முயற்சியை மேற்கொண்டு சாதித்துள்ளார் இயக்குநர் ராச்குமார். சினிமா என்பது பலரின் கூட்டு முயற்சியைக் கோரும் தொழிலாகும். ஆனால், சங்ககிரி ராச்குமார் தனி ஒருவராக, ஒப்பனை, VFX, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு என சுமார் 78 துறை சார்ந்த வேலையைக் கையாண்டுள்ளார். கற்பனைக்கு மிஞ்சியதொரு அசுரத்தனமான உழைப்பைச் செலுத்தியுள்ளார். அவரே ஒப்பனை போட்டுக் கொண்டு, கேமராவை இயக்கி, நான்கு வேடங்களில் […]

மகுடம் விமர்சனம் | Magudam review
ஊருக்கு நல்லது செய்யும் ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவ்வொருவரைத் தவறாக நினைத்து ஒதுங்கி வாழும் அவரது மகன்தான் அடுத்து தலைமையேற்று ஊருக்குக் காவலாக இருக்கவேண்டுமென மகுடம் சூட்டுகின்றனர் மக்கள். கிருபாவின் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்க வேண்டும் என்பது ஆசை. பொருளாதாரச் சூழல் உவப்பாக இல்லாத சூழலிலும், ஒரு பயன்படுத்தப்பட்ட BMW காரை வாங்குகிறார் கிருபா. அந்தக் கார், கிருபா மறக்க விரும்பும் அவரது பால்யத்துடன் மீண்டும் தொடர்பை உருவாக்கிப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏற்படும் […]

