Shadow

சினிமா

ஆலன் விமர்சனம்

ஆலன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆலன் என்பது சிவனின் நாமங்களில் ஒன்றாகும். காசியில் இருந்து கொண்டு தன்னை அறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தியாகுவைக் குறிக்கும் காரணப் பெயராக ஆலனைக் கொள்ளலாம். 3S பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு லோகோவே, சிவனின் ரூபங்களில் இருந்து சமஸ்கிருத ஓம் வடிவத்திற்கு மாறுகிறது.இறைவனைத் தன்னுள் தேடும் முயற்சியில் இருக்கும் வெற்றி, அதில் தோற்றாலும், அவரது தாத்தா விதைக்கும் எழுத்துக் கனவு மட்டும் சுடர் விட்டு எழுகிறது. மக்களோடு மக்களாய் வாழ காசியினின்று கிளம்பும் தியாகு, இருத்தலையும் இருத்தலின்மையையும் மட்டும் ஞானமாகக் கொண்டு செல்கிறான். தனக்கு மிகவும் பிடித்த எழுத்தைக் கங்கையில் விட்டுவிடுகிறான்.ஜெர்மனைச் சேர்ந்த ஜனனியை ட்ரெயினில் சந்திக்கிறான். அவளது விருப்பத்திற்கிணங்க, மீண்டும் எழுதத் தொடங்குகிறான் தியாகு. அந்த எழுத்து, தியாகுவை அவன் சந்திக்கத் தயங்கும் பால்யத்திற்கு அவனை இட்டுச் செல்வதே படத்...
SIR விமர்சனம்

SIR விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாத்தியார் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானத்தின் தாத்தாவும் அப்பாவும் ஆசிரியராக இருந்தவர்கள். கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும், கல்வியே எல்லாத் தளைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும் என உயர்ந்த லட்சியத்துடன் 1950 களில், ஒரு பள்ளியைத் தொடங்குகிறார் சிவஞானத்தின் தாத்தா. அவர் விட்ட வேலையைச் சிரமேற்கொண்டு ஆத்மார்த்தமாக ஆசிரியப் பணியைச் செய்கிறார் சிவஞானத்தின் அப்பா. உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வியர்த்தமாகிறது. தந்தை மற்றும் தாத்தாவின் கனவை அறியாத சிவஞானம், ஊரை விட்டு மாற்றலாகிச் சென்றுவிட நினைக்கிறார். தன் குடும்பம் எதற்காகப் போராடுகிறது என உணரும் சிவஞானம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் அடிநாதம். ஒருவரை ஒடுக்கித் தங்கள் ஆளுகைக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால், அவர்கள் மனதில் மூடநம்பிக்கைகளை விதைத்து, அவர்களுக்குக் கல்வியறிவு கிடைக்காமல் பார்த்துக் ...
வேட்டையன் விமர்சனம்

வேட்டையன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"மன்னிக்கிறவன் மனுஷன். மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்."- அன்னலட்சுமி, சின்ன கோளாறுபட்டி விரைவான நீதியை அளிக்கும் அவசரத்தில், நிரபராதியை என்கவுன்ட்டர் செய்து விடுகிறார் காவல்துறை கண்காணிப்பாளர் அதியன். நீதிபதி சத்யதேவால், கொலை செய்யப்பட்டவன் நிரபராதி எனத் தெரிந்ததும், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் அதியன். ரஜினியிசத்தை மிக கிரேஸ்ஃபுல்லாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் த.செ.ஞானவேல். எனினும் ஜெயிலரின் நீட்டித்த பதிப்போ எனும் தோற்றத்தை எழுப்புகிறது. படத்தை ரசிக்கும்படியாக மாற்றுவது 'பேட்டரி' பேட்ரிக்காக நடித்திருக்கும் ஃபஹத் ஃபாசில் மட்டுமே! ரஜினி போன்ற கரீஸ்மாட்டிக் ஹீரோவையும் சுலபமாக ஓரங்கட்டி விடுகிறார். 'அறிவு திருடனாகுறதுக்குத்தான் வேணும்; போலீஸாக வேணாம்' என அவர் எந்த வசனத்தைப் பேசினாலும் ரசிக்க வைக்கிறது. நீதிபதி சத்யதேவாக அமிதாப் பச்சனைப் படம் நெடுகே வரும் பாத்திரம...
ஆலன் – ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை

ஆலன் – ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை

சினிமா, திரைச் செய்தி
3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட, தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார். தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர். சிவா, '' இது என்னுடைய இரண்டாவது திரைப்படம்....
நீல நிறச் சூரியன் விமர்சனம்

நீல நிறச் சூரியன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில், தகிப்பையும் தவிப்பையும் ஒரு கணமேனும் மனிதராகப்பட்ட ஒருவரும் அனுபவித்திருப்பார்கள். செய்யாத குற்றத்துக்குத் தண்டனை ஏற்கும் பொழுது, தனது உழைப்பைப் பிறர் திருடி ஆதாயம் அடையும் பொழுது, தகுதியற்றவர் முன் கைகட்டி நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் பொழுது என தகிப்பும் தவிப்பும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி ஏற்பட்டிருக்கும். அதில், உடலால் ஒரு பாலினமாகவும், மனதால் வேறு பாலினமாகவும் உணரும் ஒருவரது தகிப்பும் தவிப்பும் அடங்கும். ஒப்பீட்டளவில் இது மிகக் கொடுமையானது. அக்கொடுமை ஆண்டுக்கணக்காக, சில சமயம் மரணம் வரையிலுமே கூட நீளும். தகிப்பைத் தணிக்க நீரில் இறங்கினால், மீண்டும் நீரில் இருந்து எழ முடியாதபடிக்குத் தலையைப் பிடித்து நீரிலேயே அமிழ்த்துவிடப் பார்க்கும் இந்தச் சமூகம், சமூக ஏளனம், குடும்ப மானம், உறவுகள், இத்யாதிகள். நாகரீக பாவனைக்குக் கீழ், இந்தச் சமூகம் ஒளித்து வைத...
ஹிட்லர் விமர்சனம்

ஹிட்லர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படைவீரன் (2018), வானம் கொட்டட்டும் (2020) ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் SA தனாவின் மூன்றாவது படம். 'வானம் கொட்டட்டும்' எனக் கதைக்குப் பொருந்தும் கவித்துவமான தலைப்பை வைத்தவர், இப்படத்திற்கு 'ஹிட்லர்' எனும் பொருந்தாத தலைப்பை வைத்திருக்கும் வாய்ப்புக் குறைவாகவுள்ளது. 'பிச்சைக்காரன்' எனும் எதிர் தலைப்பு ஈட்டிக் கொடுத்த வெற்றியினால் உந்தி, 'சைத்தான் (2016)', 'எமன் (2016)', 'திமிரு பிடிச்சவன் (2018)', 'கொலைகாரன் (2019)' என எதிர் தலைப்புகள் வைப்பதில் ஆர்வம் காட்டினார் விஜய் ஆண்டனி. அதன் தொடர்ச்சியாக 'ஹிட்லர்' எனும் தலைப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார் எனப் படுகிறது. மற்ற தலைப்புகளில் இல்லாத அரசியல் பிழைத்தனம் 'ஹிட்லர்' எனும் தலைப்பில் உள்ளது. நாயகனை ஹிட்லர் என அழைத்து, அம்மனிதகுல விரோதியை மகிமைப்படுத்துவது பெருங்குற்றத்தில் வரும். இயக்குநர், வில்லனின் சர்வாதிகாரத்தன போக்கைக் குறிக்கும் ...
தில் ராஜா – எந்தப் பிரச்சனை என்றாலும் எதிர்கொள்பவன்

தில் ராஜா – எந்தப் பிரச்சனை என்றாலும் எதிர்கொள்பவன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம் “தில் ராஜா” ஆகும். வருகிற 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய அம்ரீஷ், "தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் ப்ரோமோஷனுக்கு மாஸாகப் பாடல் கேட்டார்கள். ஹ்யூமரா காமெடியாக இருக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள். ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள். ஏ. வெங்கடேஷ் சார் படத்தில் இசையமைக்க எவ்வளவோ ஆசைப்பட்டிருக்கிறேன். விஜய் சார் ஃபேன் நான், அவரையும் அம்மாவையும் வைத்து படம் எடுத்திருக்கிறார். அவருடன் படம் கிடைத்தது மகிழ்ச்சி. விஜய்...
கடைசி உலகப்போர் விமர்சனம்

கடைசி உலகப்போர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஐ.நா.வில் இருந்து பிரியும் சீனாவும் ரஷ்யாவும், 'ரிபப்ளிக் (O.N.O.R.)' எனும் கூட்டமைப்பை உருவாக்கி, அமீரகம், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் முதலிய எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கிறது. ரிபப்ளிக்கில் இணையாத அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மீது போர் தொடுக்கப்படுகிறது. இந்தியாவுடனான தொடர்பில் இருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டு அல்லலுகிறது. இலங்கையின் தனிப்படையினர் உதவியோடு, தமிழ்நாட்டை தன்வசத்திற்குக் கொண்டு வருகிறான் சீனன் ஒருவன். தமிழ்நாட்டு முதல்வர் நாசரை மிரட்டி தமிழ்நாட்டை ரிபப்ளிக்கில் சேர்த்துவிடுகிறான். நாயகன் தமிழ் எப்படித் திட்டமிட்டு தமிழ்நாட்டை சீன ரிபப்ளிக் ஆதிக்கத்தில் இருந்து மீட்கிறான் என்பதே கதை. கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம், தயாரிப்பு என இந்தப் படத்தின் ஆல்-இன்-ஆல் ஹிப்ஹாப் தமிழா ஆதிதான். ஆசையும் அனுபவமின்மையும் சேரும் புள்ளிதான் இப்படத்தின் மையக்கரு....
கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்

கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாமனிதன் படத்தின் நீட்சியாகவே உள்ளது. ஒரு ஆண், தன் குடும்பத்துக்காக எந்த எல்லைக்குச் செல்வான் என்று மீண்டுமொரு முறை அழுத்தமாகப் பதிந்துள்ளார் சீனு ராமசாமி. செல்லதுரையும், அவன் தங்கையும் நிராதரவாக ஆண்டிபட்டிக்கு வருகின்றனர். கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமியின் ஆதரவில் வளர்கின்றனர். தன் தங்கைக்காகவே வாழுகிறான் செல்லதுரை. வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பமாக, செல்லதுரையின் தங்கை ஒருவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்; சிறு வயதில் தன்னை விட்டுச் சென்ற தாயைப் பார்க்கின்றான்; வேறொரு மணம் புரிந்து கொள்ளும் தந்தையும் அவனைத் தேடி வருகிறார். இவற்றை செல்லதுரை எப்பசி எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. கதையின் மாந்தர்களைத் துரிதமாக அறிமுகப்படுத்திவிட்டு, முதல் பாதி முழுவதும் கோர்வையற்ற காட்சிகளாலும் வசனங்களாலும் ஒப்பேற்றியுள்ளார். இடைவேளைக்குப் பிறகே படம் தொடங்குகிறது. முதற்பாதியை ஒப்பேற்ற நாய...
லப்பர் பந்து விமர்சனம்

லப்பர் பந்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வெற்றி என்பது இலக்குகளைத் தீர்மானித்து ஓடுவது அல்ல நான்கு பேருக்கு நன்மை பயக்கும் விதமான மாற்றத்துக்கு முன்னுரிமை தருவதென்ற மிக மெச்சூர்டான விஷயத்தைப் பேசியுள்ளது படம். கிரிக்கெட் மீதான ஈடுபாடு, ஈகோ, காதல், குடும்பம், உறவுகளுக்குள் உண்டான பிணைப்பு, ஈகோவைத் துறத்தல்,மென்னுணர்ச்சி (Sentiment), எமோஷன்ஸ், நட்பு, சாதி, சமூக நீதி என இப்படம் கலந்து கட்டி ஒரு பக்கா கமர்ஷியல் படமாக ரசிக்க வைக்கிறது. "கெத்து" என அழைக்கப்படும் 39 வயது நட்சத்திர பேட்ஸ்மேனை ஆஃப் சைடில் பந்து போட்டுத் தன்னால் அவுட்டாக்க முடியுமெனத் தன் நண்பனிடம் சொல்கிறான் நட்சத்திர ஆல்-ரவுண்டரான அன்பு. அதைக் கேட்டுவிடுகிறார் கெத்தின் நண்பன். சின்னதாய்த் தொடங்கும் இந்த மோதல், கெத்து - அன்புக்கிடையே பலமான ஈகோவாக வளர்ந்து விடுகிறது. கெத்தின் மகளைத்தான் தான் காதலிக்கிறோம் என அன்புவிற்குத் தெரிய வருகிறது. காதலா, மோதலா, கிரிக்கெட்டா, குடு...
நந்தன் விமர்சனம்

நந்தன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆண்டை கோப்புலிங்கத்திற்குப் பரம விசுவாசியாக உள்ளார் கூழ்பானை என்றழைக்கப்படும் அம்பேத்குமார். ஆதலால், தனித்தொகுதியாக்கப்படும் வணங்கான்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குக் கூழ்பானையைத் தேர்வு செய்கிறார். தான் ஆட்டுவிக்கும் பாவையாகக் கூழ் பானை இருப்பான் என்ற நம்பிக்கை சிதையும் வண்ணம், தங்களுக்கென ஒரு தனிச் சுடுகாட்டைத் தன்னிச்சையாக அரசாங்கத்திடம் கேட்டுப் பெறுகிறார் அம்பேத்குமார். அதனால் கோபமுறும் கோப்புலிங்கத்தின் எதிர்வினையும், அதை அம்பேத்குமார் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும்தான் படத்தின் முடிவு. தனித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர்களை, சமூகத்தில் ஆழ வேரூன்றிவிட்ட சாதியக் கட்டமைப்பு எப்படி நடத்துகிறது என்பதுதான் படத்தின் மையக்கரு. படத்தின் ஆகப் பெரிய பலவீனம் படத்தின் கதாபாத்திர வார்ப்புகளே ஆகும். என்ன சொல்லப் போகிறோம் என இயக்குநர் இரா. சரவணனுக்கு இருந்த தெளிவு, முதன...
லப்பர் பந்து: நகைச்சுவை – குணச்சித்திரம் | டி எஸ் கே

லப்பர் பந்து: நகைச்சுவை – குணச்சித்திரம் | டி எஸ் கே

சினிமா, திரைத் துளி
சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் டி.எஸ் கே. சின்னத்திரையின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான நகைச்சுவை நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ளார். செப்டம்பர் 20 ஆம் தேதி ‘லப்பர் பந்து’ வெளியாகவுள்ள நிலையில் அந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், தனது அடுத்த படங்கள், வெப்சீரிஸ் குறித்தும், “’லப்பர் பந்து’ நான் நடிக்கும் 18 ஆவது படம். ஆனாலும் இந்தப் படத்தில் நடித்த போது இதுதான் எனது முதல் படம் என்பது போல உணர்ந்தேன். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். மிகப்பெரிய அனுபவங்கள் கிடைத்தன. இயக்குநர் தமிழரசன் நடிப்பு குறித்து மெனக்கெட்டு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு?' ரியாலிட்டி ஷோவில் ஒரு டைட்டில் வின...
சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’

சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’

Movie Posters, கேலரி, சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'அரண்மனை 4' படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' படம் உருவாகிறது. தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழுவினர் தெளிவாகத் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். டிவைன் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ஸ் ஃபிலிம...
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த காவிய கதையாக உருவாகும் திரைப்படத்திற்கு 'லவ் அண்ட் வார்' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
ஹிட் 3 – புதிய லுக்கில் நானி

ஹிட் 3 – புதிய லுக்கில் நானி

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் சைலேஷ் கொலானு - வால்போஸ்டர் சினிமா + யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும் 'ஹிட் : மூன்றாவது வழக்கு' ( HIT : 3rd Case) எனும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. 'நேச்சுரல் ஸ்டார்' நானி தனது 32 ஆவது படமாக 'ஹிட்: மூன்றாவது வழக்கு ( HIT : 3rd Case)' எனும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். யுனானிமஸ் புரொடக்ஷன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது. இந்தத் திரைப்படத்தில் அபாயகரமான ஹிட் அதிகாரியாக நடிக்கும் நானியின் கதாபாத்திரம் பற்றிய ஒரு ப்ரோமோ அசைவொளி வெளியாகியிருந்தது. தற்போது அப்படத்தின் படப்படிப்பு தைதராபாதில் தொடங்கியுள்ளது. அதில் நானி கலந்...