Shadow

Tag: கவிதாலயா கிருஷ்ணன்

கார்கி விமர்சனம்

கார்கி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடும் இயக்குநர் கெளதம் ராமசந்திரன், கடைசி ஃப்ரேம் வரை நம் கவனம் கலையாமல் பார்த்துக் கொள்கிறார். இந்த வருடத்தின் மிகச் சிறப்பான படங்களில் ஒன்றாகக் கார்கி புகழடையும்.  பள்ளி ஆசிரியையான கார்கியின் தந்தையைக் காவல் துறை கைது செய்துவிடுகிறது. சிறுமி மீதான பாலியல் வன்முறை வழக்கு என்பதால், காவல்துறையினர் ரகசியமாகவும் கவனமாகவும் இருக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், பத்திரிகைத் துறையைச் சேர்ந்த பெண் ஒருவரால், விஷயம் கசிந்து, கார்கியின் குடும்பம் கடும் இன்னல்களுக்கு ஆளாகிறது. தன் தந்தை குற்றமற்றவரென நிரூபிக்கத் தனியாளாகப் போராடுகிறார் கார்கி. ஈ மொய்ப்பது போல் சூழும் பத்திரிகையாளர்கள், தந்தையைச் சந்திக்க விடாத நுண்ணியமான அதிகார பலம், வேலையிழப்பு, அவமானம், சமூகத்தின் கோபம் என கார்கி எதிர்கொள்ளும் அனைத்துமே கனமானவை. உண்மையில், படத்தின் கனத்தைக் கூட்டுவது, ...