32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சண்டக்காரி – ஜீத்து ஜோசப் கதையில் விமல், ஸ்ரேயா, சத்யன்

Dinesh R சேலம் Published: 08/09/2026 2 நிமிட வாசிப்பு Updated: 09/09/2026 சினிமா
எழுத்து அளவு:

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’ ஆகும். பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமையும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இயங்கி வரும் முன்னணி மென்பொருள் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் மென்பொருள் ஊழியராக விமல் நடித்துள்ளார்.

அதிகாரி, ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும் மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையைச் சுவாரசியமான பாதையில் நகர்த்துகின்றன. காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையேயான ‘சண்டை’தான் படத்தின் மிகப்பெரிய சுவாரசியமாக அமையவுள்ளது.

இந்த இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் விமல், ஸ்ரேயா இடையேயான மோதலில் சிக்கிக்கொள்ளும் அவரது கதாபாத்திரம், படத்தின் காமெடி ஹைலைட்டுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமல் – ஸ்ரேயா – சத்யன் கூட்டணி திரையில் மிகப்பெரிய காமெடி கலாட்டாவை உருவாக்கியுள்ளதாகப் படக்குழுவினர் கூறுகின்றனர்.

மேலும், குணச்சித்திர வேடத்தில் பிரபு சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படத்திற்குக் கூடுதல் சிறப்பைச் சேர்த்துள்ளனர். கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் கலக்கியுள்ளார்.

இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பையும், ஐயப்பன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக்காட்சிகளுக்குக் கனல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ஹபீப் நடனங்களை வடிவமைத்துள்ளார்.

காதலில் ஆரம்பித்து, சண்டையில் சிக்கி, நகைச்சுவையில் கலக்கவுள்ளது ‘சண்டக்காரி’ திரைப்படம். குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள ‘சண்டக்காரி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. விமல், ஸ்ரேயா இணைந்து நடிக்கும் புதிய கூட்டணி, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.