சினிமாதிருநாள் விமர்சனம்
யாருமற்ற அடியாளான பிளேடிற்கு சாக்கு மண்டி முதலாளி மகள் வித்யா மீது காதல் மலர்கிறது. அக்காதல் வெளியில் தெரிய வர, அனைவருக்கும் குழப்பமும் சங்கடமும் மேலிடுகிறது. அவர்கள் காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. தாதாவாக சரத் லோகிதஸ்வா மிரட்டியுள்ளார். ஆஜானுபாகுவான தோற்றமும், கூரிய பார்வையும் கொண்ட அவர் தோன்றும் முதல் ஃப்ரேமில் இருந்தே மனிதன் அசத்துகிறார். அவருடன் ஃப்ரேமில் யார் தோன்றினாலும் பொலிவிழந்து போகின்றனர். இவர் சரீரத்தால் மிரட்டினால், கரடு முரடான சாரீரத்தாலும் பெரிய விழிகளாலும் […]






