32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

நயன்தாரா

36 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 3
செய்திகள் வரிசை (பக்கம் 2)
சை ரா நரசிம்ம ரெட்டி விமர்சனம் மற்றவை

சை ரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்

சை ரா நரசிம்ம ரெட்டி படத்திற்கான பட்ஜெட் 275 கோடி. பருச்சுரி சகோதரர்கள் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் சொன்ன இக்கதை, சீரஞ்சிவியின்  மனதில் ஓடிக் கொண்டே இருந்ததாம். ஆனால், படமாக எடுக்கும் தைரியம் பாகுபலி பார்த்ததும் தான் உருவானதெனக் கூறினார் சிரஞ்சீவி. பாகுபலியின் வெற்றிக்கு அதன் பிரம்மாண்டம் மட்டும் காரணமன்று, K.V.ராஜேந்திர பிரசாதின் சுவாரசியமான திரைக்கதை முக்கிய காரணம்.  ஸ்பாய்லர் என்றால் அலர்ஜி என்பவர்களுக்கு இந்தப் படம் பெரும் பதற்றத்தை உண்டு பண்ணிவிடும். ஏனெனில், நிழலுக்கு மட்டுமே […]

03/10/2019 Dinesh R
கொலையுதிர் காலம் விமர்சனம் சினிமா

கொலையுதிர் காலம் விமர்சனம்

ஒருவழியாக எண்ணற்ற இடைஞ்சல்களைக் கடந்து படம் வெளியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாக எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டதோ அதே அளவு சிக்கல்கள் படத்தின் மேக்கிங்கிலும் உள்ளது. ஒரு ஹாலிவுட் படம் போல் ரம்மியமாக ஓப்பன் ஆகிறது. அரண்மனைக்கு நிகரான அழகான பெரிய மாளிகை, மிக அற்புதமான புல்வெளியும் உயரமான மதில் சுவர்கள், வெள்ளைக்கார வேலைக்காரப் பெண்மணி, ரசனையான ஒளிப்பதிவு என மிக அட்டகாசமாகப் படம் தொடங்குகிறது. பின் வாய்ஸ்-ஒவரில், நயன்தாரா யார், அவர் ஏன் இங்கிலாந்து வருகிறார் என […]

11/08/2019 Dinesh R
Mr. லோக்கல் விமர்சனம் சினிமா

Mr. லோக்கல் விமர்சனம்

நயன்தாரா, சிவகார்த்திகேயன், யோகி பாபு, ரோபோ ஷங்கர், சதீஷ், தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் என முன்னணி நடிகர்கள் பட்டாளத்தை தன் படத்துக்குள் கொண்டு வந்துவிட்டார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்திற்கு அத்தியாவசியமான கதையும் திரைக்கதையும் மட்டும், சென்னையின் நீர்ப்பஞ்சத்திற்கு நிகராய் வறண்டு போயுள்ளன. ராஜேஷ் படத்தில் கதையா முக்கியம்? நிச்சயமாக இல்லை தான். ஜாலியான வசனங்கள், தட்டுத்தடுமாறி நாயகியின் கடைக்கண் பார்வையைப் பெறத் துடிக்கும் நாயகனின் அலம்பல்கள், சின்னதாய் ஒரு ஃபேமிலி சென்ட்டிமென்ட் என தனது முதல் […]

19/05/2019 Dinesh R
ஐரா விமர்சனம் மற்றவை

ஐரா விமர்சனம்

‘ஐரா’ என்றால் யானையின் குறியீடு என்கிறார் இயக்குநர் சர்ஜுன். ‘என்னது ஐரான்னா யானையா?’ என வாய் பிளந்தால் ஐராவதம் என்கிறார். இதென்ன இந்திரனின் வெள்ளையான வாகனத்துக்கு வந்த சோதனை எனக் குழம்பி, யானையின் ஞாபகச்சக்திக்கும், பழிவாங்கும் குணத்திற்குமான குறியீடாகத் தலைப்பை உருவகப்படுத்திக்க வேண்டியுள்ளது. விபத்தில் இறந்துவிடும் கருப்பு நயன்தாராவான பவானியின் பழிவாங்கும் படலம் தான் ஐரா படத்தின் ஒரு வரிக் கதை. பட்டாம்பூச்சி எனப் படத்திற்குப் பெயர் வைத்திருந்தால் மிகப் பொருத்தமானதாய் இருந்திருக்கும். படத்தின் தொடக்கம் முதலே […]

28/03/2019 Dinesh R
மிஸ்டர் லோக்கல் – தரமான நகைச்சுவை சம்பவம் சினிமா

மிஸ்டர் லோக்கல் – தரமான நகைச்சுவை சம்பவம்

தரமான நகைச்சுவை ரகளை நிச்சயம் என்ற நம்பிக்கயை ஏற்படுத்தியுள்ளது மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் டீசர். ஒரு டீசரை உருவாக்குவதற்கு நிறைய திறமையும் பொறுப்பும் தேவை. ஏனெனில் படத்தில் என்ன இருக்கிறது என்பதை ரசிகர்களுக்குச் சரியாகச் சொல்ல வேண்டும். இந்த மிஸ்டர் லோக்கல் டீஸரில் பிரதான கதாபாத்திரங்களான மனோகர் (சிவகார்த்திகேயன்) மற்றும் கீர்த்தனா (நயன்தாரா) ஆகியோரிடையே உள்ள மோதல்கள் மிகத் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் அவரது நகைச்சுவை உணர்வும், மாஸ் தருணங்களும் மிகச் சரியாக காட்டப்பட்டுள்ளன. […]

19/02/2019 Dinesh R
விஸ்வாசம் விமர்சனம் சினிமா

விஸ்வாசம் விமர்சனம்

எவருக்கு எவர் மீது விசுவாசம் எனத் தெரியவில்லை. நான்காவது முறையாகத் தொடர்ந்து இணைகின்றனர் இயக்குநர் சிவாவும், அஜித்குமாரும். தனது மனைவி நிரஞ்சனா சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, 10 வருடங்களாக தன் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து வாழ்கிறார் தூக்குதுரை. மகளின் உயிருக்கு ஆபத்தெனத் தெரிந்து, அதிலிருந்து மகள் ஸ்வேதாவைப் பாதுகாக்க களமிறங்குகிறார் தூக்குதுரை. ஸ்வேதாவிற்கு யாரால் ஏன் ஆபத்து என்பதும், அதிலிருந்து எப்படி தன் மகளை மீட்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. வீரம் படத்தின் 2.0 என்றே […]

10/01/2019 Dinesh R
ஐரா – இரட்டை வேடத்தில் நயன் சினிமா

ஐரா – இரட்டை வேடத்தில் நயன்

தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையைச் செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான “ஐரா” படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அறம் படத்தைத் தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். […]

10/10/2018 Dinesh R
இமைக்கா நொடிகள் விமர்சனம் சினிமா

இமைக்கா நொடிகள் விமர்சனம்

கொலையை ரசித்துச் செய்யும் ஒரு கொலைக்காரன், அவனைப் பிடிக்க நினைக்கும் ஒரு பெண் சி.பி.ஐ. அதிகாரி என இருவருக்கு இடையில் நடக்கும் ஆடுபுலியாட்டம்தான் இமைக்கா நொடிகள் படத்தின் கதை. ருத்ராவெனும் சைக்கோவாக அனுராக் கஷ்யப் அதகளப்படுத்தியுள்ளார். அனுராகின் அட்டகாசமான உடற்மொழியுடன், மிரட்டும் முகபாவனையுடன், மகிழ் திருமேனியின் கம்பீரமான குரல் செம்புலப் பெயல் நீர் போல் ஒன்றிக் கொள்கிறது. ட்ரெய்லரிலேயே அந்த ரசவாதத்தினை உணரலாம். படத்திலேயோ, அது தொடக்கம் முதல் கவ்விக் கொள்கிறது. வில்லனாக அனுராக் கஷ்யபையும், அவருக்கு […]

31/08/2018 Dinesh R
கோலமாவு கோகிலா விமர்சனம் சினிமா

கோலமாவு கோகிலா விமர்சனம்

கோகிலாவின் அம்மா வடிவுக்கு நுரையீரல் புற்றுநோய் இரண்டாம் நிலையில் உள்ளது. தனது அம்மாவைக் குணபடுத்த 15 லட்சம் செலவாகும் என மருத்துவர் சொல்லிவிட, அப்பணத்திற்காகக் கோகிலா எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை. ஒப்புக்குச் சப்பாணியாகக் கூட ஒரு நாயகன் இல்லாத முழு நீள ஹீரோயின் ஓரியன்டட் படம். நயன்தாராவை நம்பி மட்டுமே இத்தகைய முயற்சி சாத்தியம். பாவாடை சட்டையில் அப்பாவியான முகத்துடன் படம் முழுவதும் நயன்தாரா மட்டுமே! இடைவேளைக் காட்சியில் நயன்தாரா காட்டும் மனப்பாங்கு (ஆட்டிட்யூட்) நகைச்சுவையாகச் […]

18/08/2018 Dinesh R
பாக்ஸ் ஆஃபீஸ் குயின் – கோலமாவு நயன் சினிமா

பாக்ஸ் ஆஃபீஸ் குயின் – கோலமாவு நயன்

ஒரு நடிகைக்கான மிகப் பெரிய சாதனை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுவதோ, ‘பாக்ஸ் ஆஃபீஸ் குயின்’ ஆக இருப்பதோ இல்லை. ‘நாயகி மையப்படுத்திய படங்கள்’ என்ற வரையறையை அழிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாகவே ஒரு படத்தில் ஆண் நாயகன் இல்லாத போது, எளிதாக அதை நாயகி படம் என்ற வரையறைக்குள் கொண்டு வந்து விடுகிறோம். அந்தத் தடைகளை உடைத்து, உலகளாவிய பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வரும் வழிமுறை கடினமானதாக இருக்கிறது. நிச்சயமாக, நயன்தாரா இந்தச் சூழ்நிலையை […]

26/07/2018 Dinesh R
அறம் விமர்சனம் சினிமா

அறம் விமர்சனம்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் ஆந்திர எல்லையில் இருக்கும் காட்டூர் எனும் கிராமத்தில், தன்ஷிகா எனும் நான்கு வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகிறாள். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மதிவதனி, எப்பாடுபட்டாவது சிறுமியை மீட்டு விட வேண்டுமெனப் போராடுகிறார். கண் கலங்காமல், இப்படத்தைப் பார்த்து விடுவது இயலாததொரு காரியம். சுபமான முடிவு தானெனினும், ஒரு சிறுமியை மீட்க கலெக்டர் தலைமையிலான அரசாங்க ஊழியர்கள் திணறுவதைப் பார்க்கப் படபடப்பாக உள்ளது. இது படமாக […]

11/11/2017 Dinesh R
டோரா விமர்சனம் சினிமா

டோரா விமர்சனம்

கால் டேக்சி நிறுவனம் தொடங்குவதற்காக நயன்தாரா பழைய மாடல் கார் ஒன்றை வாங்குகிறார். அக்காரினுள் குடி கொண்டிருக்கும் டோரா எனும் நாயின் ஆவி சிலரைப் பழிவாங்குகிறது. அவர்கள் யார், அவர்களை நாய் ஏன் எப்படிப் பழிவாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை. பவளக்கொடியாக நயன்தாரா நடித்துள்ளார். தூங்கி எழுந்தாலும் சரி, கொலையைப் பார்த்து மிரண்டு ஓடி வந்தாலும் சரி, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை, பளீச்சோ பளீச்சென இருக்கிறார். நாயகன் இல்லாததால் டூயட்டும் இல்லை ஆடைக்குறைப்பும் இல்லை. […]

01/04/2017 Dinesh R
காஷ்மோரா விமர்சனம் சினிமா

காஷ்மோரா விமர்சனம்

காஷ்மோரா என்றால் எல்லாப் பூதங்களையும் அடக்க வல்ல பூதவித்தையின் பெயர் என படத்தில் ஒரு வசனம் வருகிறது. அந்த வித்தை பிறவிலேயே கை கூடுவதால் நாயகனுக்கு அந்தப் பெயர் அவரது தந்தையால் சூட்டப்படுகிறது (காஷ்மோரா என்பது எவராலும் வெல்ல முடியாத ஒரு துர்தேவதை; அதை எழுப்பி ஏவி விட்டால் எதிரியை 21 நாளில் கொன்று விடும்; பில்லி, சூனியத்தை விட ஆபத்தான ஏவல் வித்தை காஷ்மோரா என்கிறார் ‘துளசி தளம்’ எனும் நாவலில் தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி […]

29/10/2016 Dinesh R
இமைக்க விடாப் படம் சினிமா

இமைக்க விடாப் படம்

சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும். சில திரைப்படங்கள் அவர்களுக்கு காதலை ஏற்படுத்தும். இன்னும் சில திரைப்படங்கள் அவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்யும். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்து, அவர்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட விடாமல், சுவாரசியத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும். அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து வருவது தான் அதர்வா – நயன்தாரா – ராசி கண்ணா – பிரபல வில்லன் […]

20/10/2016 Dinesh R
இருமுகன் விமர்சனம் சினிமா

இருமுகன் விமர்சனம்

லவ் எனும் தீவிரவாதி அன்பே இல்லாமல், தனது ‘ஸ்பீட்’ எனும் அண்ணீர் (adrenaline) ஊக்கி மருந்தை, உலகின் பயங்கரவாதக் குழுக்களுக்கு வினியோகம் செய்யத் திட்டமிடுகிறான். அதை உளவுத்துறை ரா (RAW) அதிகாரியான அகிலன் வினோத் முறியடிக்க முனைகிறார். நல்லவன் தீயவன் ஆகிய இந்த இரண்டு முகத்துக்கு (பேர்) இடையே நிகழும் சண்டை தான் படத்தின் கதை. ஸ்டைலிஷான ஹீரோ, மிக ஸ்டைலிஷான வில்லன் என இரண்டு வேடங்களில் வருகிறார் விக்ரம். லவ் எனும் பாத்திரத்தில் அவர் காட்டும் […]

10/09/2016 Dinesh R