32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

மாயலோகத்தில்

22 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
இறுதியாகச் சிலர் கட்டுரை முக்கியச் செய்தி
15/06/2016 Dinesh R 6 நிமிட வாசிப்பு

இறுதியாகச் சிலர்

மாயலோகத்தில் தொடரின் இறுதிப் பகுதிக்கு இப்போது வந்திருக்கிறோம். இதுவரை 21 பழம்பெரும் இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் வெளிவந்தன. இவர்கள் அனைவரும் நமது நினைவில் வாழ்பவர்கள். இவர்களைத் தவிர மேலும் சிலரும் இலக்கியத்தோடு, திரைத்துறைக்கும் பங்களித்துள்ளனர். இந்தப் பகுதியில் அவர்களில் சிலரைப் பற்றிய மிகச் சிறிய குறிப்புக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சாண்டில்யன் பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். இவர் ஒரு தீவிர வைஷ்ணவ பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர். கதைக்கும், கதை […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
ஜெயகாந்தன் சினிமா

ஜெயகாந்தன்

மாயலோகத்தில்.. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை ஜெயகாந்தன். 1950 – 60 கால கட்டத்தில் தமிழில் தோன்றிய இரண்டு மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர்.இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு ஜெயகாந்தன் பற்றிய அறிமுகம் அனேகமாகத் தேவைப்படாது என்றுதான் தோன்றுகிறது.  பாரதியாரையும் புதுமைப்பித்தனையும் ஆதர்சமாகக் கொண்டு ஐம்பதுகளில் ஆரம்பத்திலிருந்து பல எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ஜெயகாந்தனும் அப்படித்தான்.ஒரு கால கட்டத்தில் ஜெய காந்தனை ஆதர்சமாகக் கொண்டு எழுதத் தலைப் பட்டவர்களும் உண்டு. ஜெய காந்தனின் இயற்பெயர் டி.முருகேசன். […]

25/05/2016 Dinesh R
சங்கு சுப்ரமணியம் சினிமா

சங்கு சுப்ரமணியம்

மாயலோகத்தில்.. “சுதந்திரச்சங்கு” என்றொரு பத்திரிகை அக்காலத்தில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்தியர் அடிமைப்பட்டுக் கிடந்த காலம். சுதந்திரப் போராட்டங்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. மக்களின் சுதந்திர வேட்கையை, அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் தூண்டிவிட்ட பெருமை பல பத்திரிகைகளையே சாரும். இவைகள் தாம் இங்கு சுதந்திரப் போராட்டத்தை முன் எடுத்துச் சென்றன. அம்மாதிரியான பத்திரிகைகள் அக்கால ரூபாயின் மதிப்பிற்கேற்ப ஓரணா, இரண்டணா என்று விலை வைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த கால கட்டத்தில், காலணாவுக்கு ஒரு […]

09/03/2016 Dinesh R
தி. ஜானகிராமன் சினிமா

தி. ஜானகிராமன்

மாயலோகத்தில்.. நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் தி. ஜானகிராமனின் இடம் மிகவும் முக்கியமானது. அபூர்வமான சொற்கட்டுகளும், அலாதியான வடிவமும், தஞ்சைத்தமிழும் அதன் அழகுகளும் இவரின் நாவல்கள், சிறுகதைகளில் பின்னிப் பிணைந்து காணப்படும். தஞ்சைப் பிரதேசத்தைச் சேர்ந்த மொழியையும், வழக்குகளையும் உள்ளடக்கியதுதான் இவரது கதைகள் என்றாலும், அவைகள் பிரதேச எல்லைகளையும் தாண்டி தீவிர இலக்கியவாசகன், ஜனரஞ்சக வாசகர்கள் என அனைவரது மனதையும் கவ்வி இழுத்தது என்பது மிகையல்ல. ஜானகிராமன் தனது இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார் எனத் தோன்றுகிறது. தனது […]

02/03/2016 Dinesh R
அகிலன் சினிமா

அகிலன்

மாயலோகத்தில்.. கல்கி கிருஷ்ணமூர்த்தி அடுத்தபடியாக வெகுஜன வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருந்த எழுத்தாளர் அகிலன். இவரது இயற்பெயர் அகிலாண்டம். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையிலுள்ள பெருங்களுர் இவர் பிறந்த ஊர். 1922 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்தார். சொத்து சம்பந்தமான குடும்ப வழக்கு ஒன்றன் தொடர்பாக இவரது தந்தை கரூருக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. எனவே இவரது ஆரம்பக் கல்வி கரூரில் தொடங்கியது. ஆறாம் வகுப்பிலிருந்து தான் கல்வியை புதுக்கோட்டை மகாராஜா கிளைக் கல்லூரியிலும், உயர் […]

24/02/2016 Dinesh R
அரு.ராமநாதன் சினிமா

அரு.ராமநாதன்

மாயலோகத்தில்.. ‘காதல்’ புனிதமானது, பவித்திரமானது என்றெல்லாம் திரைப்படங்களில் வசனம் பேசுவார்கள் அறிவோம். எடுக்கப்படும் படங்களில் 99 விழுக்காடும் காதலை மையமாக வைத்தே திரைக்கதை அமைக்கப்படும். இது ஒரு நியதிபோல் காலம் காலமாக நடந்து வருகிறது. ‘காதல்’ இல்லாமல் உலகில் வேறு எதுவுமே கிடையாது என்றும் நிலை நிறுத்தியாகிவிட்டது. எனவே ‘காதல்’ வாழ்க. ‘காதல்’ என்கிற வார்த்தையை ஒரு கெட்ட வார்த்தையைப்போல் கருதிய காலமும் ஒன்று உண்டு. காதல் வயப்படுவார்கள், ஆனால் காதல் என்கிற வார்த்தையைப் பிரயோகித்தால் அவனை […]

17/02/2016 Dinesh R
விந்தன் சினிமா

விந்தன்

மாயலோகத்தில்.. விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். இவர் 1916இல் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் என்கிற சிறிய ஊரில் பிறந்தார். வறுமையான குடும்பச் சூழ்நிலை. நடுநிலைப் பள்ளியைக் கூடத் தாண்டாத பருவத்தில், பிழைப்புக்காகத் தனது தந்தையுடன் சிறியச் சிறிய வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில காலம் சென்ற பின், இரவுப் பள்ளியிலும், தொடர்ந்து ஓவியக் கல்லூரியிலும் சேர்ந்து ஓவியமும் கற்கத் தலைப்பட்டார். ஆனால் வறுமை அவரைத் துரத்தியது. பாதியிலேயே விட்டுவிடும்படியாகவும் ஆகிவிட்டது. ஓர் அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் […]

03/02/2016 Dinesh R
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை சினிமா

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

மாயலோகத்தில்.. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! மிகவும் புகழ் பெற்ற இப்பாடலை விடுதலைப் போரில் ஈடுபட்டவர்கள் மிகவும் உற்சாகமாகப் பாடுவார்களாம். இந்த வீரமிக்க பாடலை இயற்றி தேசியக் கவிஞர் என்ற பட்டத்தைப் பெற்றவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள். கோவை மாவட்டம் மோகனூர் என்கிற கிராமத்தில் 1888 ஆண்டு பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே ஓவியம், கவிதை போன்ற கலை வடிவங்களில் நாட்டமுடையவராக இருந்தார். ஆரம்பத்தில் கவிதையைவிட ஓவியம் […]

27/01/2016 Dinesh R
சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) சினிமா

சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)

மாயலோகத்தில்.. அறிஞர் அண்ணாவைப் பற்றி சுருக்கமாக எழுதுவது மிகவும் சிரமமான காரியம். அவரைப் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு புத்தகம் தான் போட வேண்டும். மேலும், அவரைப் பற்றி தமிழ்கூறும் நல்லுலகில் அறியாதவர் யார்? எனவே மிகச் சுருக்கமாகச் சில. காஞ்சிபுரம் என்றால் பட்டு மாத்திரமல்ல; அண்ணாவும் உடனேயே நினைவுக்கு வந்து விடுகிறார். 1909 செப்டம்பர் மாதம் பிறந்தார். நூறாண்டு கடந்து விட்டது. அண்ணா, ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு சுயமரியாதைக்காரராகவே வெளிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். எனவே அவர் […]

20/01/2016 Dinesh R
புதுமைப் பித்தன் சினிமா

புதுமைப் பித்தன்

மாயலோகத்தில்.. இயற்பெயர் சொ. விருத்தாசலம். இவரது பெற்றோர்களின் பூர்வீகம் திருநெல்வேலி. ஆனால் இவர் பிறந்தது கடலூர் அருகே உள்ள திருப்பாதிரிப்புலியூர் எனும் ஊர். இவரது தந்தை அப்போது இந்த ஊரில் தாசில்தாராக வேலை பார்த்து வந்தார். ஆரம்பக் கல்வியை திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் கற்றார். 1918இல் தகப்பனார் ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார்கள். படிப்பைத் தொடர்ந்தவர் 1931இல் திருநெல்வெலி இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். அதே ஆண்டு (1931) இவருக்குத் […]

13/01/2016 Dinesh R
கவியோகி சுத்தானந்த பாரதியார் சினிமா

கவியோகி சுத்தானந்த பாரதியார்

மாயலோகத்தில்.. 1958இல் நாகர்கோவிலில் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. எழுத்தாளர்கள் பதாகையெல்லாம் பிடித்துக் கொண்டு, கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் மத்தியில் காவி உடையணிந்து, தலையில் காவித்துணி முண்டாசுடன் கூடிய, நரைத்த தாடியுடன் கூடிய தோற்றத்தில் ஒருவரும் நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும் இவருக்கு இங்கு என்ன வேலை என்று தான் தோன்றிற்று. அவர் யார் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நல்ல வேளையாக எனதருகிலேயே ஒரு தமிழ் எழுத்தாளர் வசித்து வந்தார். அவரிடம் இவரைப் […]

23/12/2015 Dinesh R
மகாகவி பாரதியார் சினிமா

மகாகவி பாரதியார்

மாயலோகத்தில்.. “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா…” என கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் பாடப்பட்ட கவிஞர் பாரதியார். தமிழின் நவீன யுகத்தின் மகாகவி, முதல் தமிழ்க் கவிஞன். சுப்ரமணிய பாரதியின் பிறப்பு 1882 ஆம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் நிகழ்ந்தது. சிறுவனாக, பத்து வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார். தகப்பனார் சின்னசாமி அய்யர் எட்டயபுரம் ஜமீனில் வேலை பார்த்து வந்தார். மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் பாரதியோ […]

07/10/2015 Dinesh R
கொத்தமங்கலம் சுப்பு சினிமா

கொத்தமங்கலம் சுப்பு

மாயலோகத்தில்.. சிறந்த இலக்கியவாதிகள் திரைப்படத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என நிரூபித்த ஓர் இலக்கியவாதி கொத்தமங்கலம் சுப்பு. கலைஞர் மு. கருணாநிதி, கதை வசனகர்த்தா இளங்கோவன் ஆகியோருக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் அதிக அளவில் திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றியிருப்பவர் கொத்தமங்கலம் சுப்பு என்கிற எஸ்.எம்.சுப்ரமணியம். 1936இல் எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்த ‘சந்திரமோகனா’ என்னும் திரைப்படத்தில் எம்.கே.ராதாவின் தோழன் வேணுகோபாலாக நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இதன்பிறகு 1937இல் மைனர் ராஜாமணி என்கிற […]

09/09/2015 Dinesh R
பாரதிதாசன் சினிமா

பாரதிதாசன்

மாயலோகத்தில்.. பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். பாரதிதாசன் என்பது இவரது இயற்பெயர் அல்ல. பெற்றோர்கள் வைத்த பெயர் சுப்புரத்தினம். இளம் வயதிலேயே தமிழார்வம் கொண்டிருந்தார். தனது பதினேழாவது வயதில் புலவர் தேர்வில் வெற்றியடைந்தார். பாரதிதாசன் புதுமைச் சிந்தனாவாதி, இவரது சிந்தனைகளுக்கு ஊக்கு சக்தியாக விளங்கியவர் மகாகவி பாரதியார். இவர் சிறிது காலம் மாடர்ன் தியேட்டர்சின் கதை இலாகாவில் பணியாற்றினார். பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழைத் தன் உயிரினும் மேலாக நேசித்தவர். இவரது […]

02/09/2015 Dinesh R
பாபநாசம் சிவன் சினிமா

பாபநாசம் சிவன்

மாயலோகத்தில்.. பாபநாசம் சிவன் சினிமாவுக்கு எழுதிக் கொண்டிருந்த கவிஞர் என்கிற வகையில் அறியப்படக்கூடாது. அவரைத் தமிழ்த் தியாகய்யர் எனக் கூறுவார்கள். சினிமாவுக்காக அல்லாமல் ஏராளமான தமிழ்ப்பாடல்களை எழுதி, அவை சினிமாவில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே இவரையும் ஒரு இலக்கியவாதி வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். தெலுங்கில் எழுதிய தியாகய்யர் போல் தமிழில் ஏராளமான பக்திப் பாடல்களை இயற்றி இன்றளவும் அவைகள் கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான மெட்டுக்களையும் அமைத்துவிடும் திறன் இவருக்கு உண்டு. […]

26/08/2015 Dinesh R