
மேம்படுத்தப்பட்ட ‘யு-டர்ன்’ படம்
ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கும் படம் 'யு-டர்ன்'. கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'யு-டர்ன்' படத்தின் ரீமேக் இது. கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது.
"இந்த யு-டர்ன் கன்னடத்தை விட மேம்பட்ட வடிவமாக இருக்கும். பெரிய பட்ஜெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்குக்கு ஏற்ப திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். கடைசி 30 நிமிடங்கள் மிகவும் த்ரில...