32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அஜித் படத்தில் கின்னஸ் சாதனையாளர்

Dinesh R சேலம் Published: 17/01/2015 1 நிமிட வாசிப்பு Updated: 01/02/2015 சினிமா
எழுத்து அளவு:

Yennai Arinthal Parvathy Nair

பார்வதி நாயர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அபுதாபியில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தகர். இவரது தந்தை பொறியாளர், தாய் கல்லூரி ஆசிரியர் ஆவர். படிப்பில் இருந்த ஆர்வத்தினால் எஞ்ஜினீயரிங் பயின்றார். ஒரு மாடலுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த பார்வதி பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். பின்னர் கன்னட, மலையாளப் படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்து வந்தாலும் ஓவியம் தீட்டுவதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

பள்ளிப்பருவத்தில் உலகின் மிக நீளமான ஓவியம் தீட்டும் குழுவில் இடம் பெற்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் பெற்றுள்ளார்.

“காலம் என்னைக் கனிவாய் வழி நடத்தி வந்துள்ளது. எனது முதல் தமிழ்ப்படமே அஜித் சார் மற்றும் கௌதம் சார் உடன் அமைத்திருக்கிறது. எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது.”

அஜித் சார் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அஜித் சார் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் நடித்தது ஒரு கனவாய் இருந்தது. கௌதம் சார், நான் பணிபுரிந்த இயக்குநர்களில் பழகுவதற்கு மிக இலகுவானவர். அவர் இருக்கும் பொழுது படப்பிடிப்புத் தளமே மிகப் பரபரப்பாக இருக்கும். என்னை அறிந்தால் குழுவினருக்கும், தயாரிப்பாளர் A.M. ரத்னம் அவர்களுக்கும் நன்றி கூறியே ஆக வேண்டும்.

எவ்வளவு பெரிய நிலைக்கு சென்றாலும், உச்சத்தில் நின்றாலும் அடக்கத்துடன் இருக்கவேண்டும். இப்படி, ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன்” என்று கூறினார் பார்வதி நாயர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.