Shadow

அயல் சினிமா

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த காவிய கதையாக உருவாகும் திரைப்படத்திற்கு 'லவ் அண்ட் வார்' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
ஹிட் 3 – புதிய லுக்கில் நானி

ஹிட் 3 – புதிய லுக்கில் நானி

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் சைலேஷ் கொலானு - வால்போஸ்டர் சினிமா + யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும் 'ஹிட் : மூன்றாவது வழக்கு' ( HIT : 3rd Case) எனும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. 'நேச்சுரல் ஸ்டார்' நானி தனது 32 ஆவது படமாக 'ஹிட்: மூன்றாவது வழக்கு ( HIT : 3rd Case)' எனும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். யுனானிமஸ் புரொடக்ஷன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது. இந்தத் திரைப்படத்தில் அபாயகரமான ஹிட் அதிகாரியாக நடிக்கும் நானியின் கதாபாத்திரம் பற்றிய ஒரு ப்ரோமோ அசைவொளி வெளியாகியிருந்தது. தற்போது அப்படத்தின் படப்படிப்பு தைதராபாதில் தொடங்கியுள்ளது. அதில் நானி கலந்...
ARM விமர்சனம்

ARM விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ARM: Ajayante Randam Moshanam – அஜயனின் இரண்டாம் திருட்டு நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த மூவரின் கதை. களரி வீரனான கேலு, வீரனின் மகனான திருடன் மணியன், திருடனின் பேரனான அஜயன் என படத்தில் மூன்று நாயகன்கள், மூன்று குணாதிசயங்கள், மூன்று காதல்கள், மூன்று கதைகள் உள்ளன. காலத்தை வாகனமாகக் கொண்ட ஓர் அருவ பிரபஞ்ச பயணியின் குரலில் படம் தொடங்குகிறது. விண்கல்லால் செய்யப்பட்ட விளக்கைத் தனது வீரத்தின் பரிசாகக் கொண்டு வருகிறார் கேலு. காதலுக்காகவும், துரோகத்திற்குப் பழிவாங்கும்விதமாக அவ்விளக்கைக் கவருகிறார் மணியன். சாதிய அடுக்குமுறையில் இருந்தும், திருடனின் ரத்தம் என்ற ஏளனத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள, அவ்விளக்கை மீட்கிறார் அஜயன். கேலுவான டோவினோ தாமஸ்க்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்க்குமான காதல் எட்டாக்கனியாக உள்ளது. ஊராரிடம் பெரும் பெயரைச் சம்பாதித்தாலும், இவரது வாழ்க்கை ஒரு துயர காவியம். திருடன் மண...
சாய் துர்கா தேஜ் | அம்மா அநாதை இல்லமும் – ஆந்திர வெள்ளப் பெருக்கும்

சாய் துர்கா தேஜ் | அம்மா அநாதை இல்லமும் – ஆந்திர வெள்ளப் பெருக்கும்

அயல் சினிமா
சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், அவரது மாமா ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் போலவே சமூக அக்கறை மிக்க உதவிகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இரு தெலுங்கு மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளில் சாய் துர்கா தேஜ் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறார்.ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை அவர் வழங்கியுள்ளார். கூடுதலாக, அவர் மேலும் ஐந்து லட்சங்களை அம்மா அறக்கட்டளை மற்றும் பிற அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அவர் உறுதியளித்த தொகையை நன்கொடையாக வழங்க விஜயவாடாவிற்கு நேரில் வருகை தந்திருந்தார்.விஜயவாடாவைப் பாதித்த சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து, சாய் துர்கா தேஜ் தனது துர்கா அம்மா இல்லத்தைப் பார்வையிட்டு, முதியோர்களின் நலனை விசாரித்தார். அவர் அம்மா அறக்கட்டளைக்கு, இரண்டு லட...
ஷிவ ராஜ்குமார் வெளியிட்ட ‘சுப்ரமணியா’ போஸ்டர்

ஷிவ ராஜ்குமார் வெளியிட்ட ‘சுப்ரமணியா’ போஸ்டர்

அயல் சினிமா
பிரபல வில்லன் நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக இயக்குநராகக் களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில் சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது.இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போ...
Yours Sincerely RAAM | ரமேஷ் அரவிந்த் & கோல்டன் ஸ்டார்

Yours Sincerely RAAM | ரமேஷ் அரவிந்த் & கோல்டன் ஸ்டார்

அயல் சினிமா
கன்னடத் திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான 'மிஸ்டர் பர்ஃபெக்ட்' ரமேஷ் அரவிந்த் மற்றும் 'கோல்டன் ஸ்டார்' கணேஷ் ஆகிய இருவரும் முதன்முறையாக 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும் தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி படமானது. இந்நிகழ்வில் 'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் சமூகத்தில் நிலவும் வர்க்கத்தையும், மனித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கும் வகையில...
அறிமுகமாகிறார் ஜூனியர் பாலய்யா | நந்தமூரி மோக்ஷக்ஞ்யா

அறிமுகமாகிறார் ஜூனியர் பாலய்யா | நந்தமூரி மோக்ஷக்ஞ்யா

அயல் சினிமா
நந்தமூரி குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, நந்தமூரி தாரக ராமராவின் பேரனும், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமூரி மோக்ஷக்ஞ்யா, பரபரப்பான பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். பிரசாந்த் வர்மாவின், ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து, தனது SLV சினிமாஸின் சார்பில் சுதாகர் செருக்குரி மிகப்பெரிய அளவில் தயாரிக்கிறார். எம் தேஜஸ்வினி நந்தமூரி இப்படத்தை வழங்குகிறார். நமது புராணங்களில் உள்ள ஒரு பழங்கால புராணக்கருவை மையமாக வைத்து, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படம், மோக்ஷக்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 6 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.மோக்ஷக்யாவை முன்னணி நடிகராக அறிமுகப்படுத்த, பாலகிருஷ்ணாவும் அவரது குடும்பத்த...
நிவின் பாலி | ஜோடிக்கப்பட்ட பாலியல் புகாருக்கு எதிராக வழக்கு

நிவின் பாலி | ஜோடிக்கப்பட்ட பாலியல் புகாருக்கு எதிராக வழக்கு

அயல் சினிமா
நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன், அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். 40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், 'அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இ...
நானி | Hunter’s Command | HIT: The 3rd Case

நானி | Hunter’s Command | HIT: The 3rd Case

Teaser, அயல் சினிமா, காணொளிகள்
நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்களில், ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான, சூர்யா’ஸ் சாட்டர்டே திரைப்படம் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றி பெற்றுள்ளது. ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்களைத் தந்திருக்கும் நானி, அடுத்ததாக அவரது 32 ஆவது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்குத் தயாராகிறார். நானியின் பாத்திரத்தைப் பற்றிய ஸ்னீக் பீக் மூலம், அவரது அடுத்த படமான ஹிட் கேஸ் 3 பட அறிவிப்பு, செப்டம்பர் 5 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, வால் போஸ்டர் சினிமாவின் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், டாக்டர் சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்குகிறார். Hunter's Command என பெயரிடப்பட்ட கிளிப், ஒரு HIT அதிகாரி பனி மலைகளில் காரை ஓட்டுவது, ஒரு ஜோடி போலீஸ் அதிகாரிகள் அவரைத் துரத்துவது போன்ற ஒரு புதிரான குறிப்பில் தொ...
ஜீவன் நீயே | மார்டின் படப்பாடல்

ஜீவன் நீயே | மார்டின் படப்பாடல்

Songs, அயல் சினிமா, காணொளிகள்
மார்டின் படத்தின் முதல் சிங்கிளான "ஜீவன் நீயே" பாடல் வெளியாகியுள்ளது. ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர், பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப் பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான வரிகள், காதலின் பல கோணங்களை அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஹரிசரண் மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரின் அற்புதமான குரல்களில் இப்பாடல் மனதை மயக்குகிறது.துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள 'மார்டின்' படம் கன்னட சினிமாவிலிருந்து வெளிவரும் மிகப் பெரிய அதிரடி முயற்சியாக, இந்திய சினிமாவில் ...
அத்வே – VFX பிரம்மாண்டத்தில் சுப்ரமண்யா

அத்வே – VFX பிரம்மாண்டத்தில் சுப்ரமண்யா

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
பிரபல நடிகரும் டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாகக் களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி, அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் “சுப்ரமண்யா” படத்தின் அசத்தலான ப்ரீ-லுக்கை வெளியிட்டுப் படத்தின் விளம்பரப் பணிகளைத் துவக்கியுள்ளது. இந்த போஸ்டர், திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட கற்பனை உலகத்தின், ஒரு கண்ணோட்டத்தை அளிக்கிறது. போஸ்டரில் கதாநாயகன் ஒரு தீப்பந்தத்தைப் பிடித்தபடி, ஒரு புதிரான சாம்ராஜ்யத்தின் நுழைவாயிலில் இருப்பதைக்...
BRB | எதிர்காலத்தில் நடக்கும் பில்லா ரங்கா பாட்ஷா

BRB | எதிர்காலத்தில் நடக்கும் பில்லா ரங்கா பாட்ஷா

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
பாட்ஷா கிச்சா சுதீப், மிகப் பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற விக்ராந்த் ரோணா படத்திற்குப் பிறகு இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை பிளாக்பஸ்டர் ஹனுமான் படத் தயாரிப்பாளர்களான கே. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, “பில்லா ரங்கா பாட்ஷா” படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் கதையை அறிமுகப்படுத்தும், ஒரு அற்புதமான கான்செப்ட் வீடியோவைத் தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இயக்குநர் அனுப் பண்டாரி தனது படங்களில் நுணுக்கமான விவரங்களுடன், தனித்துவமான திரைக்கதையைப் படைப்பதில் பெயர் பெற்றவர். தற்போது வெளியாகியுள்ள வீடியோவும் அதை நிரூபிக்கும்படி அமைந்துள்ளது. இந்த க...
ஏலியன்: ராம்யுலஸ் விமர்சனம்

ஏலியன்: ராம்யுலஸ் விமர்சனம்

அயல் சினிமா, திரை விமர்சனம்
பூமியிலிருந்து 1600 ஒளியாண்டுகள் தள்ளியுள்ள, பகலே இல்லாத ஒரு கிரகத்தில் சிக்கியுள்ளார் ரெயின். அவ்விடத்தை விட்டுத் தப்பிக்க, ரெயினின் முன்னாள் காதலன் டைலர் ஒரு யோசனையை முன்மொழிகிறான். அரைமனதுடன் சம்மதிக்கும் ரெயினும், அவனது இயந்திரத் தம்பி ஆன்டியும், டைலர் குழுவும், ஈவாகா எனுமிடத்திற்குச் செல்லத் தேவைப்படும் குளிர்சீர்நிலைக்கருவிகளைச் (Cryostatic Chamber) சேகரிக்க, ஒரு சிதிலமடைந்த விண்கப்பலுக்குள் செல்கின்றனர். விண்கப்பல் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிற்கு ரோமுலஸ் என்றும்; மற்றதிற்கு ரெமுஸ் என்றும் பெயர். ரோம் என்ற நகரம் உருவாவதற்குக் காரணமானவர் ரோமுலஸ் என்பதால்தான், அவரது பெயரையே அந்நகரத்துக்குச் சூட்டியுள்ளனர். Romulus-இன் ஹாலிவுட் உச்சரிப்பு, ராம்யுலஸாக உள்ளதால், ராம்யுலஸ் என்றே தமிழ்த்தலைப்பு வருகிறது. கருவிகளைச் சேகரிக்கும் முயற்சியில், முகமணைப்பான்கள் (Facehuggers) ...
வீர சந்திரஹாசா | இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இயக்கம்

வீர சந்திரஹாசா | இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இயக்கம்

அயல் சினிமா, திரைத் துளி
கேஜிஎஃப், சலார் போன்ற பிரம்மாண்டமான வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், 'வீர சந்திரஹாசா' எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராகக் களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்தத் திரைப்படம் அவரது கலையுலகப் பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும். இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்குப் பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் 'வீர சந்திரஹாசா', பாரம்பரியத்தைக் குறிப்பிடத்தக்க வகையில் அதன் எல்லைகளை மேலும் விரிவடையச் செய்யும் என்கிறார். சந்திரஹாசன் என்பவர் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரமென நம்பப்படுகிறது. 'வீர சந்திரஹாசா'வை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய க...
க்ரேவன் தி ஹண்டர் – ட்ரெய்லர்

க்ரேவன் தி ஹண்டர் – ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
க்ரேவன் தி ஹண்டர் என்பது மார்வெலின் மிகச்சிறந்த வில்லன்களில் ஒருவர் எப்படி, ஏன் உருவானார் என்பது பற்றிய கதை. அற்புதமான ஆக்‌ஷன், தீவிரமான சண்டைக் காட்சிகள் மற்றும் மற்றொரு ஸ்பைடர் மேன் வில்லனைப் பற்றிய ஸ்னீக் பீக் உடன், மார்வெலின் மிகப் பயங்கரமான வேட்டைக்காரனின் தனிப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது. ஆங்கில டிரெய்லர்: https://youtu.be/_y6O-tcfhBIதெலுங்கு டிரெய்லர்: https://youtu.be/krYauKDFXCE டிசம்பர் 13 அன்று தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழியில் ‘க்ரேவன் தி ஹண்டர்’ படத்தைத் திரையரங்குகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிடுகிறது....