32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

இது புதிது

500 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
டோரதி விமர்சனம் | Dorothy review இது புதிது முக்கியச் செய்தி
26/09/2026 Dinesh R 2 நிமிட வாசிப்பு

டோரதி விமர்சனம் | Dorothy review

அன்பும் அறிவியலும் கலந்த ஓர் இயல்பான உறவை விசித்திரமாகச் சித்தரிப்பது மடமை என்பதை வணிக சமரசமின்றிப் பேசியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். “பெண்களை உள்ளே விட்டால் வீடு விளங்காது” என்ற கொள்கை கொண்டவர் முத்துக்குமார். நாயகன் சனந்தின் அப்பா அவர். அவருக்கு சனந்தோடு சேர்த்து மூன்று மகன்கள். மூத்தமகன் மனைவியை அடித்துத் துரத்தியிருப்பார். இரண்டாவது மகன் திடீரென திருமணம் முடித்து வருவார். ஆனால் அவரின் மனைவியைக் குடும்பமே சேர்ந்து கொன்றுவிடும். இப்பேர்ப்பட்ட ஆணாதிக்க குடும்பத்திலுள்ள கடைக்குட்டி சனந்த் […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
“ஏழு கடல் ஏழு மலை – எல்லாமே உயிர்தான்” – இயக்குநர் ராம் இது புதிது

“ஏழு கடல் ஏழு மலை – எல்லாமே உயிர்தான்” – இயக்குநர் ராம்

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகும். உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை நேரடியாகத் தொடுகின்ற படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோருடன் இணைந்து படத்தில் எலியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையைத் தொடர்ந்து அளித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் […]

25/09/2026 Dinesh R
மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya murukku review இது புதிது

மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya murukku review

மகன், தந்தை, தாத்தா என மூன்று தலைமுறை கானா கலைஞர்கள் பற்றிய கதையிது. 1979 இல் ஒரு புறக்கணிப்பில் தொடங்கும் படம், 2026 இல் கிடைக்கப்பெறும் அங்கீகாரத்துடன் படம் நிறைவுறுகிறது. வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு, ஒரு கலைஞனாய் தனக்கு விருப்பமானதைச் செய்வதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. கானா தாஸ், டைகர் சிவா, DJ ஜீவா என மூன்று பாத்திரங்களில் தோன்றியுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. நடிப்பால் வித்தியாசம் காட்டாமல், சிகை அலங்கார மாற்றத்தோடு நிறுத்திக் கொண்டுள்ளார். […]

25/09/2026 Dinesh R
தி பாரடைஸ் | The Paradise review இது புதிது

தி பாரடைஸ் | The Paradise review

துர்ஜம வம்சத்தைச் சேர்ந்த மாலிக், சவாரி பழங்குடியின மக்களை அடிமையாக நடத்துகிறார். இந்தியச் சுதந்திரத்துக்குப் பின், அரசாங்கம் சவாரி இன மக்களுக்கு அடையாள அட்டை கிடைக்காதவாறு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். இவ்வொடுக்கமுறைக்கு எதிராக சம்மக்கா போராடிக் கொண்டே இருக்கிறார். தனது தாயின் போராட்டத்தைத் தாமதமாகப் புரிந்து கொள்ளும் சம்மக்காவின் மகன் சடையன், மாலிக்கின் அதிகாரத்தை எதிர்க்கிறான். சவாரி இன மக்களுக்கு நியாயமும், அடையாள அட்டையும் கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் முடிவு. யார் கொடூரமாகக் கொலை செய்கிறார்கள் […]

24/09/2026 Dinesh R
ஐ ஆம் கேம் | I’m Game விமர்சனம் அயல் சினிமா

ஐ ஆம் கேம் | I’m Game விமர்சனம்

பெரிய முதலீட்டில் இப்படத்தைத் தயாரித்துள்ளார் துல்கர் சல்மான். சூதாட்டத்தில் தன் வயமிழக்கும் டேன் ஜானிற்கு விபத்து நேரிட்டு வலது கையை இழக்க வேண்டி வருகிறது. அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து ஒரு நன்கொடையாளரின் கையைப் பொருத்துகின்றனர். அதன் பின் டேன் ஜானிற்கு விசித்திரமான பிரச்சனை எழுகிறது. டேன் எப்படி அப்பிரச்சனையை எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் முடிவு. இரண்டாவது நாயகனாக, விக்னேஷ் தாஸ் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்டனி வர்கீஸ். முதற்பாதியில் பார்வையாளர்களை முழுவதுமாக துல்கர் சல்மான் […]

05/09/2026 Dinesh R
ஏன் என்னை ஏதோ செய்தாய் | Yen Ennai Edho Seidhai review இது புதிது

ஏன் என்னை ஏதோ செய்தாய் | Yen Ennai Edho Seidhai review

படத்தின் தலைப்புத்தான் படத்தின் கருவும் கூட! நாயகியைப் பார்க்கும் நாயகனுக்கு, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ எனத் தோன்றுகிறது. மது எனும் பாலியல் தொழிலாளியைச் சந்திக்கும் கார்த்திக்கிற்கு, அவள் மீது காதல் வருகிறது. மதுவும் கார்த்திக்கை விரும்ப, இருவரும் லிவிங் டுகெதரில் இணைகின்றனர். இவ்வுறவு கல்யாணத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்க, குடிப்பழக்கமுடைய கார்த்திக்கோ போதையில், மதுவிடம் கோபத்தில் வார்த்தையை விட்டுவிட, மனதுடையும் மது கார்த்திக்கை விட்டுச் சென்று விடுகிறாள். அந்தப் பிரிவாற்றாமை கார்த்திக்கை என்ன செய்கிறது […]

04/09/2026 Dinesh R
Immortal விமர்சனம் இது புதிது

Immortal விமர்சனம்

இம்மார்ட்டல் என்றால் இறப்பற்றவர் எனப் பொருள் கொள்ளலாம். மஹி எனும் இளைஞனுக்கு, தனது வீட்டில் ஓர் அறையைக் குறைந்த விலையில் உள்வாடகைக்கு விடுகிறார் அழகான யுவதியான சிந்து. சிந்துவால் மிகவும் கவரப்படும் மஹி, சிந்துவைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால், அந்த வீட்டை விட்டுத் தன்னால் என்றைக்கும் வெளியேற முடியாதபடி சிந்துவால் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற விபரீத உண்மை மெல்ல மஹிக்குப் புரியத் தொடங்குகிறது. சிந்து யார், அவர் ஏன் மஹியைச் சிறைப்பிடித்து வைக்கிறார் என்பதே படத்தின் கதை. மஹிக்கு […]

04/09/2026 Dinesh R
பெத்லகேம் குடும்ப யூனிட் | Bethlehem Kudumba Unit review அயல் சினிமா

பெத்லகேம் குடும்ப யூனிட் | Bethlehem Kudumba Unit review

பிரேமலு படத்து இயக்குநர், மீண்டும் மமிதாவுடன் இணைந்து, ஒரு ஜாலியான நகைச்சுவையான ஃபீல்-குட் காதல் படத்தைக் கொடுத்துள்ளார். கேரளத்தின் சில சர்ச்களில், பிரார்த்தனை கூட்டங்கள், தான தர்மங்கள், சமூக தொண்டுகள் மற்றும் சர்ச்சின் நிர்வாகம் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்க, தேவாலயத்தில் கூடும் குடும்பங்களைப் பிரிவுகளாகப் பிரித்து, அப்பிரிவுக்குப் புனிதர்களின் பெயரையோ அல்லது புனித இடத்தின் பெயரையோ சூட்டிக் குடும்ப யூனிட்களை உருவாக்குவார்கள். அது போன்ற ஒரு யூனிட்டான பெத்லகேம் எனும் குடும்ப யூனிட்டைச் சேர்ந்த ஜஸ்டினின் பக்கத்து […]

02/09/2026 Dinesh R
Once More review | ஒன்ஸ் மோர் விமர்சனம் இது புதிது

Once More review | ஒன்ஸ் மோர் விமர்சனம்

முதல் காதல் கைக்கூடாத விரக்தியிலும் கோபத்திலும் உள்ள ஒருவனது வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவனுக்கு இரண்டாவது காதல் மலரும்போது, முதல் காதல், ‘மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும்’ எனக் கோரி நிற்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை. மிகவும் இறுக்கமாகவும், பிரபஞ்சத்தின் மீது கடுங்கோபத்துடனும் இருக்கும் ரகுவரனை, மிக அதிகமாகக் காதலிக்கிறார் அவரது கல்லூரி ஜூனியரான அஞ்சலி. கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் ரகுவரன், அஞ்சலியை ஏற்றுக் கொள்வதில் மிகுந்த மனத்தடையுடன் தவிக்கிறார். ஆனால் அஞ்சலியின் உறுதி ரகுவரனின் இறுக்கத்தைத் […]

28/08/2026 Dinesh R
டாக்ஸிக் விமர்சனம் | Toxic review அயல் சினிமா

டாக்ஸிக் விமர்சனம் | Toxic review

கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட படம். இந்தியாவே எதிர்பார்ப்போடு இருந்த ஒரு படம். இது, பான்-இந்தியப் படம் இல்லை; பான்-உலகப்படம் என்றளவுக்கு எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியிருந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தும், கோவா அந்த சுதந்திர எல்லைக்குள் 1947 ஆம் ஆண்டு வரவில்லை. அங்கு வெளிநாட்டவர் கோலோச்சுகிறார்கள். கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. கோவாவைக் கட்டியாளும் ஒரு பெரிய டான் சால்வடாரின் அடியாட்கள் போல் வலம் வருகிறார்கள் ராயாவும், அவரின் அக்கா கங்காவும்! ராயாவிற்கும், டானின் […]

27/08/2026 Dinesh R
IConS XII – மனநல மேம்பாட்டில் புதுமைகள் | SCARF India இது புதிது

IConS XII – மனநல மேம்பாட்டில் புதுமைகள் | SCARF India

ஸ்கிட்சோஃப்ரீனியா ஆராய்ச்சி அறக்கட்டளை (SCARF), ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 22 வரை, சென்னையில் உள்ள தி சவேரா ஹோட்டலில், ஸ்கிdசோஃப்ரீனியா (மனச்சிதைவு) பற்றிய சர்வதேச மாநாட்டின் (IConS XII) 12வது பதிப்பின் நிகழ்வை நடத்தியது. இம்மாநாடு தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் கொண்டாடினர். ஸ்கிட்சோஃப்ரீனியா ஆராய்ச்சி அறக்கட்டளையால் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் IConS, ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் மற்றும் வல்லுநர்களை ஒன்றிணைத்து, ஸ்கிட்சோஃப்ரீனியா மற்றும் மனநல ஆராய்ச்சி மற்றும் நடைமுறையில் ஏற்படும் புதிய […]

24/08/2026 Dinesh R
Insidious: Out of the Further விமர்சனம் அயல் சினிமா

Insidious: Out of the Further விமர்சனம்

இன்சிடியஸ் என்றால் கண்ணுக்குப் புலப்படாமல் பரவித் தீங்கு விளைவிக்கும் எனப் பொருள் கொள்ளலாம். இன்சிடியஸ் படத்தொடரில் மொத்தம் ஐந்து பாகங்கள் வெளியாகியுள்ளன. ஆறாவது பாகமான இப்படம், 2023 இல் வெளிவந்த தி ரெட் டோர் படத்தின் தொடர்ச்சி என்றாலும், தனிப்படமாகப் பாவிக்கும்படியே கதை அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆவி வாழும் இடத்திற்கு ‘தி ஃபர்தர்’ எனப் பெயர். அமானுஷ்யமான ஒரு சிவப்புக் கதவினைத் திறந்தால், பூமியில் இருந்து ‘தி ஃபர்தர்’க்குச் சென்றுவிட முடியும். முந்தைய பாகத்து நாயகனுக்கு அத்தகைய […]

23/08/2026 Dinesh R
ONE MAN விமர்சனம் இது புதிது

ONE MAN விமர்சனம்

சினிமா மீது ஒப்பற்ற காதலும், தன் மீது அசாத்திய நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய மகத்தானதொரு முயற்சியை மேற்கொண்டு சாதித்துள்ளார் இயக்குநர் ராச்குமார். சினிமா என்பது பலரின் கூட்டு முயற்சியைக் கோரும் தொழிலாகும். ஆனால், சங்ககிரி ராச்குமார் தனி ஒருவராக, ஒப்பனை, VFX, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு என சுமார் 78 துறை சார்ந்த வேலையைக் கையாண்டுள்ளார். கற்பனைக்கு மிஞ்சியதொரு அசுரத்தனமான உழைப்பைச் செலுத்தியுள்ளார். அவரே ஒப்பனை போட்டுக் கொண்டு, கேமராவை இயக்கி, நான்கு வேடங்களில் […]

20/08/2026 Dinesh R
ONE MAN – ஒருநாள் உலகம் கொண்டாடும் | சேரன் இது புதிது

ONE MAN – ஒருநாள் உலகம் கொண்டாடும் | சேரன்

இயக்குநர் சங்ககிரி ராச்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான ஒரு முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார். எதிர்வரும் 21-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர்கள் […]

18/08/2026 Dinesh R
விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review இது புதிது

விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review

விஸ்வநாத் எனும் தொழிலதிபர், சான் பிரான்சிஸ்கோ சென்று வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்கிறார். திடீரென அக்குழந்தைக்கு மிக அரிதான நோய் ஒன்று வர, அதற்குத் தீர்வாகத் தாயின் எலும்பு மஜ்ஜை வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. விஸ்வநாத், வாடகைத்தாயான மதனகாமேஸ்வரி ஜோதிலிங்கம் எனும் மேடி J-வைக் கண்டுபிடித்து இந்தியா அழைத்து வருகிறார். மேடியின் வரவால், விஸ்வநாத் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதே படத்தின் கதை. கச்சிதமான கதாபாத்திரத் தேர்வுகள் படத்தின் பெரும்பலம். சூர்யா, ராதிகா […]

14/08/2026 Dinesh R