32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“என் கனவு ட்ரீம்லாம் சினிமாதான்” – வசந்தபாலன்

Dinesh R சேலம் Published: 01/03/2014 2 நிமிட வாசிப்பு Updated: 10/03/2014 சினிமா
எழுத்து அளவு:

Vasantha Balan

“எனக்கு டெர்ரரிஸ்ட்னு பெயர் வந்துடுச்சு. நான் 92 இல் சின்மாக்கு வந்தேன். அதிலிருந்து என் வாழ்க்கை, கனவு, ட்ரீம் எல்லாம் சினிமாதான். வெயில் சொன்ன டைம்ல எடுத்து முடிச்சேன். ‘அங்காடித் தெரு’ – ரங்கநாதன் தெருல ஷூட்டிங், புது நடிகர் வச்சு எடுக்கிறதென ஒரு வலியும் வேதனையும் கடந்து எடுத்து முடிச்சோம். ‘அரவான்’ படத்துல பாத்திரங்களுக்கு பச்ச குத்தி விக் வச்சு வெறும் காலுல ‘ஹாட் சன்’ல நடக்க வச்சு ஸ்பாட்டுக்குக் கொண்டு வரவே 11 ஆகிடும். இப்படி நல்ல சினிமா எடுக்கணுங்கிற வேட்கையிலதான் எனக்கு டெர்ரரிஸ்ட் என்ற பெயர் வந்துடுச்சு. ஆனா இந்தப் படத்தில் எனக்குக் கிடைச்ச அனுபவம் முற்றிலும் புதுசு. நடிகர்கள் பற்றி, சினிமா பற்றி எனக்கிருந்த கணிப்பை முற்றிலும் மாற்றிவிட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அங்காடித் தெரு டப்பிங்கிற்காக திருநெல்வேலி போயிருந்தேன். அங்க நானும் ஜெயமோகனும் லிட்ரேச்சர் சம்பந்தமாக ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம். அவ்வை சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ என்ற பயோகிராஃபிக்கல் புஸ்தகம் பற்றிப் பேசிட்டிருந்தார். நாடகம் பற்றி நிறைய சுவாரசியமான தகவல்கள் சொல்லிட்டிருந்தார். எம்.ஆர்.ராதா அவர்கள், சிவாஜி அவர்கள், கிட்டப்பா அவர்கள், கே.பி.சுந்தரம்பாள் அவர்கள் நாடகத்திற்காக தனி டெரெயினே விட்டிருக்காங்க, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் திருவள்ளுவர் அளவுக்கு புகழப்பட வேண்டிய ஒரு மாபெரும் மேதைன்னு சொன்னார். மதுரையில அது ஒரு கோல்டன் பீரியட் பாலன் என கலர் கலர் கனவுகளை விதைச்சாரு. அந்த புஸ்தகத்தை வாங்கிப் படிச்சேன். அது 1972 இல் வந்த கடைசி பிரதி. நடிப்பைத் தவிர வேறெதுவுமே தெரியாத இருண்ட வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க. அப்போ நான் எழுதின கதைதான் காவியத்தலைவன்” என்றார் இயக்குநர் வசந்தபாலன்.

 

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.