32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சவாலும் சோதனையும் எதிர்கொள்ளும் பெண் போலிஸ்

Dinesh R சேலம் Published: 06/10/2015 2 நிமிட வாசிப்பு Updated: 09/03/2016 சினிமா
எழுத்து அளவு:

Actress Arundhathi

“சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடைத்துள்ளதா இல்லையா என்ற சர்ச்சை இன்றும் நீடித்தாலும் , தொழிற்துறையில் குறிப்பாக காவல் துறை போன்ற இடங்களில் பெண்களுக்கு எதிரான அவலக்கேடுகள் நடந்த வண்ணம் தான் இருக்கிறது. எத்தனயோ பெண்கள் இந்தத் துறையில் சாதித்து இருந்தாலும் , இன்னமும் இதைப் போன்ற சில துறைகள் ஆண்களின் மேலாதிக்கத்தில்தான் இருக்கிறது. மேற்கூறிய இந்த விஷயங்கள் மட்டுமல்ல அர்த்தநாரி.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

காவல் துறைக்குப் பெரும் சவாலாக திகழும் ஒரு வழக்கை துப்பறியும் போலிஸ் அதிகாரிக்கு நேரும் சோதனைகளும் அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பற்றிய கதைதான் அர்த்தநாரி. இந்தக் கதை என்னுடைய தயாரிப்பாளர் திரு.ஏ .எஸ்.முத்தமிழ் எழுதியது.

அருந்ததி போலிஸ் அதிகாரியாக நடிக்க பெருமளவில் உழைத்து இருக்கிறார். என்னுடைய சில போலிஸ் நண்பர்கள் மூலம் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அந்த உழைப்பு படத்தில் தெரிகிறது. புது முகம் ராம் குமார் புது முகம் என்று கருத முடியாத அளவுக்கு நடித்து இருக்கிறார். நாசர் , ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முத்துராமன் உட்பட பல உன்னதக் கலைஞர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

கபிலனின் பாடல் வரிகளுக்கு இசை அமைப்பாளர் செல்வ கணேஷ் பிரமாதமான மெட்டுகளை அமைத்து இருக்கிறார். ஸ்ரீ ரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.தயாரிப்பாளர் முத்தமிழ் படத் தயாரிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தரமான படமாக வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு வழங்கியதை என்னால் மறக்கவே முடியாது.

‘அர்த்தநாரி’ இன்றைய தேதியில் மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் பெரிதாக அலசப்படும் ஒரு விஷயத்தை சான்று இருப்பது தற்செயல் தான்” என்றுக் கூறினார் இயக்குநர் சுந்தரர இளங்கோவன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.