![அகத்தியா – டீசர் | ஜீவா | அர்ஜுன் | ராஷி கண்ணா](https://ithutamil.com/wp-content/uploads/2025/01/aghathiyaa-teaser-400x440.jpg)
அகத்தியா – டீசர் | ஜீவா | அர்ஜுன் | ராஷி கண்ணா
‘அகத்தியா’ படத்தின் டீசர் இன்று வெளியானது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகளும், முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையும், ஓர் அற்புதமான ஃபேண்டஸி திகில் த்ரில்லர் படத்திற்கான உத்திரவாதத்தை அளிக்கிறது.
‘ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ என்ற ஈர்ப்பான கதைக்கருவுடன், அதிநவீன CGI-உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில் த்ரில்லர் பாணியில், ஒரு புதுமையான உலகம் படைக்கப்பட்டிருக்கும் “அகத்தியா” படத்தினைப் புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.
நடிகர் ஜீவா, "ஒரு ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லரில் பணிபுரிவது முற்றிலும் புதிய அனுபவம். கதை, காட்சிகள் என நிஜ வாழ்வைத் தாண்டி விரியும் பிரம்மாண்ட உலகம் அது. பிரமிக்க வைக்கும் இந்த உலகத்தை உருவாக்கியதற்காகக் கலை இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பா.விஜய் கதையைச் சொன்னபோது, இப்படைப்பில் கண்டிப்பா...