32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“திருடன் போலீஸ்” பற்றி எஸ்.பி.சரண்

admin சேலம் Published: 07/11/2013 2 நிமிட வாசிப்பு Updated: 24/07/2014 சினிமா
எழுத்து அளவு:
சென்னை 28, குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் , மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைத் தயாரித்த  S .P.சரணின்  கேபிடல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா பிலிம் சார்பில் J . செல்வகுமார்  இணைந்து தயாரிக்கும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் ‘திருடன் போலீஸ்‘.

திருடன் போலீஸ் படத்தைப் பற்றி, அப்படத்தின் தயாரிப்பாளர்    எஸ்.பி.சரண், “நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக  இருக்க வேண்டும் என மெனக்கெடுவேன். எனது முந்தையப் படங்கள்,  எனக்கு அத்தகைய படங்களாகவே அமைந்தன. சிறிது காலம் படத்தயாரிப்பில் நான் ஈடுபடாமல் இருந்தாலும், இப்போது ‘திருடன் போலீஸ்’ படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறிய கதை மீண்டும் உடனடியாகப் படம் எடுக்கும் ஆவலைத் தூண்டியது. எனது முந்தையப் படங்கள் போலவே இந்தப் படமும் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு மணி மகுடமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.எனது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா முற்றிலும் ஒரு புதிய இசையைத் தர உள்ளார் என்பது நிச்சயம் .

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அட்ட கத்தி படம் பார்க்கும் போதே எனக்கு தினேஷின் மேல் ஒரு அபிமானம் இருந்தது . அவரே இப்படத்தின் கதாநாயகன். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா (ரம்மி புகழ்) நடிக்க உள்ளார்.

இவர்களுடன் பால சரவணன், நிதின் சத்யா, ஜான் விஜய், நான் கடவுள் புகழ் ராஜேந்திரன் மற்றும் சில திறமையான கலைஞர்கள் நடிக்க உள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த். படத்தொகுப்பாளர் பிரவீன். கலை ஜாக்கி. நகைச்சுவை மிளிர சிந்திக்க வைக்கும் இக்கதையை எழுதி, வசனம் இயற்றி, இயக்கி அமைத்திருப்பவர் கார்த்திக் ராஜு . திறமையான கலைஞர்கள் ஒருமித்து இருக்கும் இந்தப் படம் நிச்சய வெற்றி பெறும்” என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க