32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தைரியமும் தன்னம்பிக்கையும் தரும் பாக்சிங்

Dinesh R சேலம் Published: 21/04/2014 3 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பாக நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’. R.விஜயகுமார் இயக்கத்தில் சார்லஸ் மெல்வின் இசையமைப்பில் மனோஜ் தேவதாஸ், வீணா நாயர், ஜார்ஜ் விஜய், விசாகர், ராஜேஷ், பாலாஜி, ஹென்சா, மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் இயக்குநரான R.விஜயகுமார், இயக்குநர்கள் வடிவுடையான், நகுலன் பொன்னுசாமி, சிவா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குநர் R.விஜயகுமார் கூறியதாவது, “வேற ஒரு டைட்டில் வச்சிருந்தோம். அது கிடைக்கிறதுல கொஞ்சம் பிரச்சனையா இருந்தது. ‘பாடல் வரில ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ என வரும். அதையே தலைப்பு வைக்கலாம்னு முடிவு பண்ணோம். படத்துக்கும் அது பொருந்துச்சு. ஹீரோவோட கேரக்டர், எதைச் செஞ்சாலுமே ஏடா கூடமாவே செய்வாரு. அவர் குரு நாதர் என்ன சொல்றாரோ, என்ன நினைக்கிறாரோ அதைச் செய்யாம, அதுக்கு ஏடாகூடமா செய்வாரு. அதுதான் படத்தோட தலைப்புக்குக் காரணம்.
முழுக்க முழுக்க வடச் சென்னையிலயே நடக்கிற கதை. சென்னை மக்கள் அதிகமா பயன்படுத்தற வார்த்தை ‘ஏடா கூடம்’. அதுவும் படத்துக்குப் பொருத்தமா அமைஞ்சிருக்கு.
‘பாக்சிங்’ விளையாட்டுத்தான் படத்தோட மையக் கரு. வடச் சென்னையில இருக்கிற ‘மணி’ என்ற பாக்சிங் மாஸ்டருக்கும் அவர் சிஷ்யருக்கும் நடுவுல நடந்த உண்மைக் கதைதான் இந்தப் படம். பொதுவா, பாக்சிங்ல ஜெயிச்சி பெரிய ஆளாகிட்டாங்கன்னா, அவங்களைப் பார்த்து ஊரே பயப்படும். ஆனால், அதை பலரும் ரவுடியிசத்துக்குத்தான் பயன்படுத்துவாங்க.

ஆனால், படத்துல வர்ற பாக்சிங் மாஸ்டர், பாக்சிங்கை ஒரு விளையாட்டாகப் பார்க்காம ஒரு கலையா பார்க்கிறாரு; தர்மமா பார்க்கிறாரு. இந்தக் கலை பலருக்குப் போய்ச் சேரணும்னு நினைக்கிறாரு. வாழ்க்கையில எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இந்த பாக்சிங் கத்துக் கொடுக்கும்னு சொல்றவரு.

படத்துல ஹீரோயினா நடிக்கிறவங்க வீணா நாயர். இவங்க ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். தயாரிப்பாளரும் சாஃப்ட்வேர் இன்ஜினியர். நடிக்கச் சொல்லிக் கேட்டிருக்கார். முதலில் தயங்கினாங்க. அப்புறம் அவர் அவங்க வீட்டில் பேசி கன்வின்ஸ் பண்ணியிருக்கார். படத்திலும் ஒரு சாப்ட்வேர் இன்ஜினயரா நடிக்கிறாங்க.
இந்தப் படத்துக்காக வடச் சென்னை பகுதியான ராயபுரம், காசிமேடு, எர்ணாவூர், திருவொற்றியூர் ஆகிய இடங்கள்ல படப்பிடிப்பு நடந்தது. யாருமே போகாத பல இடங்களுக்குப் போய் படமாக்கியிருக்கிறோம்.
அது மட்டுமில்லாம பாக்சிங், வடச் சென்னை பகுதியில எப்படி நடந்ததோ அதை அப்படியே யதார்த்தமா படமாக்கியிருக்கிறோம். உதாரணமா பாக்சிங்ல கலந்துக்கிறவங்களுக்கு கையில கிளவுஸ் கூட இருக்காது. வெறும் ‘காடாத் துணியை’த் தான் கிளவுஸ் மாதிரி சுத்திக்கிட்டு சண்டை போடுவாங்க. இப்படிப் பல விஷயங்களைப் பார்த்துப் பார்த்துச் செஞ்சிருக்கோம்” என்கிறார் இயக்குநர் விஜயகுமார்.
படம் விரைவில் திரைக்கு வெளிவர உள்ளது. 

பணிக்குழு:

>> இயக்கம் – R.விஜயகுமார்
>> தயாரிப்பு நிறுவனம் – குருந்துடையார் புரொடக்ஷன்ஸ்
>> தயாரிப்பாளர் – நிர்மல் தேவதாஸ்
>> இசை – சார்லஸ் மெல்வின்
>> ஒளிப்பதிவு – சரவணன் பிள்ளை
>> படத்தொகுப்பு – தேவராஜ்
>> கலை – கலை முருகன்
>> பாடல்கள் – இளைய கம்பன், லோகன்
>> சண்டைப் பயிற்சி – மிரட்டல் செல்வா
>> நடனம் – ராபர்ட்
>> தயாரிப்பு மேற்பார்வை – வேல் மணி
>> மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

நடிகர்கள்:

>> மனோஜ் தேவதாஸ்
>> வீணா நாயர்
>> ஜார்ஜ் விஜய்
>> விசாகர்
>> ராஜேஷ்
>> பாலாஜி
>> ஹென்சா

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.