32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

PT சார் | “சவாலான நெகடிவ் ஷேடில் நடித்துள்ளேன்” – மதுவந்தி

Dinesh R சேலம் Published: 17/05/2024 4 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘PT சார்’ வரும் மே 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘PT சார்’ ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் 25 ஆவது படமாகும். இதனைக் கொண்டாடும் விதமாகப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், மொத்த குழுவினரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிகை மதுவந்தி, “இந்தப் படத்தில் நடிக்க முக்கிய காரணம் கார்த்திக் தான். ‘நான் நடிப்பேனா?’ என ஒரு வதந்தியே திரையுலகில் இருக்கிறது. அதைத் தாண்டி நான் தான் வேண்டுமென, என்னை நடிக்க வைத்த இயக்குநர் குழுவிற்கு நன்றி. இந்தக் குழுவினர் அர்ப்பணிப்புடன் கச்சிதமாகப் பணியாற்றினார்கள். எனக்கு நெகடிவ் ஷேட் உள்ள பாத்திரம். அதைச் செய்வது எனக்குச் சவாலாக இருந்தது. இயக்குநர் கார்த்திக் மிக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்தக் குழுவிற்கு முழுச் சுதந்திரம் தந்த, வேல்ஸ் ஐசரி சாருக்கு என் நன்றிகள். இப்படம் அருமையான ஃபேமிலி எண்டர்டெயினர்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன், “ஆதிக்கு என் முதல் நன்றி. கதை சொன்ன உடனே பண்ணலாம் என்று சொன்னார். அவரால் தான் இந்தப் படம் ஆரம்பித்தது. அடுத்ததாக வேல்ஸ் பிலிமிஸ் கிடைத்தது வரம். ஐசரி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். இந்தப் படம் மிக மிக ஜாலியான படம். மிகப் பெரிய நட்சத்திரக்கூட்டம் படத்தில் நடித்திருக்கிறார்கள். காஷ்மிரா ஒரு அழகான ரோல் செய்துள்ளார், அனிகாவிற்கு அனைவரும் பேசும் ஒரு ரோலாக இது இருக்கும். மெச்சூர்டான விசயத்தைக் கையாளும் ரோல், அழகாகச் செய்துள்ளார். சமீபத்தில் திரையரங்கிற்குக் கூட்டம் வரவில்லை எனும் வருத்தம் இருந்தது. ஆனால் கில்லியை அனைவரும் குடும்பத்தோடு கொண்டாடினார்கள். இந்தப் படம் குடும்பத்தோடு அனைவரும் கொண்டாடும் ஒரு படமாக, சந்தோசமான படமாக இருக்கும்” என்றார்.

வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K. கணேஷ், “வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி இந்தப் படம் மூலம் கிடைத்துள்ளது. இயக்குநரையும், ஆதியையும் படம் பார்த்தவுடன் கூப்பிட்டுப் பாராட்டினேன். இடைவேளை வரை ஜாலியாக இருக்கும். இறுதியில் மிக முக்கியமான விசயத்தைத் தைரியமாகச் செய்துள்ளார்கள். எல்லாப் பள்ளிகளிலும் பிடி சாருக்கும் டீச்சருக்கும் காதல் என வதந்தி இருக்கும். நான் படித்த பள்ளியிலும் இருந்தது. அந்த ஞாபகங்களை இந்தப் படம் மீண்டும் கொண்டு வந்தது. பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர், அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வரவுள்ளோம். படம் பார்த்து உண்மையை எழுதுங்கள். அந்தளவுக்குப் படம் நன்றாக உள்ளது. ஆதி தான் இந்தப் படத்தின் கதையைக் கொண்டு வந்தார். கார்த்திக் இப்படி ஒரு படம் செய்வார் என நினைக்கவில்லை. அவரை அடுத்த படத்திற்கும் புக் செய்து விட்டேன். அடுத்த படமும் எங்களுக்குத் தான் செய்கிறார். ஆதி இசையமைப்பாளராக அரண்மனை 4 இல் கலக்கியிருக்கிறார். அதே போல் பிடி சாரிலும் கலக்கியிருக்கார்” என்றார்.

நடிகரும் இசையமைப்பாளரும் ஹிப்ஹாப் தமிழா ஆதி, “நான்கு வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தீர்கள். இந்தப் படத்தின், ‘குட்டிப் பிசாசே’ பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு க்ளைமாக்ஸ் என உங்களை முழுக்கத் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றிகள். ஐசரி சாருக்கு நன்றி, இந்தக் கதையை முதலில் ஒப்புக்கொள்வார் என நினைக்கவேயில்லை. ஆனால் இந்தக் கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார். அவர் எப்படியான படங்கள் வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். ஆனால், இப்படம் செய்ததற்கு நன்றி. அவருடன் பயணித்தது மிகப் பெரும் அனுபவமாக இருந்தது. எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லித் தந்தார். ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். பிடி சார் மிக நிறைவான படமாக இருந்தது. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள்” என்றார்.

இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் படம் எதிர்வரும் மே 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.