32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“சர்தார் 2: தமிழ்ல இப்படியொரு படமா?” – சூர்யா

Dinesh R சேலம் Published: 02/09/2026 4 நிமிட வாசிப்பு Updated: 09/09/2026 சினிமா
எழுத்து அளவு:

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ வி ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.லக்ஷ்மன் குமார், இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். சென்னை வர்த்தக மையத்தில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், ”சர்தார் 2 எனும் மிகப்பெரிய திரைப்படத்தை திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழி திருத்தேர் போல் இழுத்து வந்து ரசிகர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். இது எங்களுடைய கனவுப் படைப்பு. இந்தத் திரைப்படத்தை இந்த அளவிற்கான தரத்துடன் உருவாக்கியது என்னுடைய சீனப் பெருஞ்சுவரான கார்த்தி தான்.

இயக்குநர் மித்ரன் கதை சொல்லும் போது இதன் பிரம்மாண்டம் தெரிந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாகப் படத்தை உருவாக்கி இருக்கிறார். இது ஒரு அழகான கதை. இவ்வளவு பெரிய விஷயத்தைச் சண்டைக் காட்சிகளுடன் மட்டுமல்லாமல் எமோஷனுடனும் உருவாக்கியிருக்கிறார்” என்றார்.

நடிகர் சூர்யா, ”சர்தார் 2 படத்தின் ட்ரெய்லர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இப்படத்தின் டீசரைப் பார்க்கும்போது இருட்டில் சண்டை நடக்கும். அதைப்பார்த்தவுடன் நெட்ஃபிளிக்ஸில் ஏதோ ஒரு இன்டர்நேஷனல் ஃபிலிம் என்றுதான் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று பார்த்தால் கார்த்தி உள்ளே வருகிறார். அதைப் பார்த்தவுடன், ‘ஹேய் நம்ம படமா இது..!’ என்ற எண்ணம் வந்தது. அதை ஆச்சரியமாக பார்த்தேன். அந்த டீசர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் டீசர் வரப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. தற்செயலாக அதைப் பார்த்த போது, ‘இப்படி எல்லாம் கூட தமிழில் படம் பண்ண முடியுமா? மித்திரன் படமா இது?’ என்று எண்ணி வியந்தேன்.

டீசர் எப்படி எனக்கு ஆச்சரியத்தை கொடுத்ததோ, அதேபோல் இந்தப் படத்தின் ட்ரெய்லரும் எனக்கு ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் கொடுத்திருக்கிறது.

இந்தப் படத்தின் கதை உண்மைச் சம்பவத்தைத் தழுவியும், உண்மையாக நடந்த சம்பவங்களை அடித்தளமாகவும் எடுத்துக்கொண்டு உருவான படம் இது. சர்தார் அப்படித்தான் 50 வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் அது நடந்திருக்கிறது. நிகழ்த்திக் காண்பித்திருக்கிறார்கள். அதிலிருந்து எடுத்துக்கொண்ட ஒரு கரு தான் இது.

நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது. அதைத் திரையில் சிறிதளவு தான் காண்பிக்க முடிகிறது. ஒரு ஸ்பை த்ரில்லரை தமிழில் அண்மை காலத்தில் இவ்வளவு தத்துரூபமாக உண்மைச் சம்பவங்களுக்கு நெருக்கமாக இவ்வளவு அழகியலுடன் நாம் பார்த்ததில்லை.

இயக்குநர் மித்ரன் ஒரு அற்புதமான எழுத்தாளர், இயக்குநர், இன்வெஸ்டிகேட்டிப் ஜர்னலிசம் தெரிந்தவர் என நினைக்கிறேன். அவருடன் பேசும்போது, அவரிடம் ஏராளமான கதைகள் உள்ளதை தெரிந்து கொண்டேன்

சர்தாரில் மிகப்பெரிய விவாதத்திற்குரிய கருத்தை முன் வைத்தீர்கள். சர்தார் 2-வில் நிச்சயமாக அதைவிட மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துவீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.

இந்தப் படத்தில் தொழில் நுட்பக் கலைஞர்களின் அபாரமான உழைப்பு தெரிகிறது. எழுத்தாளரும் படத்தொகுப்பாளரும் ஒன்றாக அமர்ந்து படத்தைத் தொகுத்திருக்கிறார்கள் என்று கேட்கும்போது ஆரோக்கியமான போக்காக இருக்கிறது.

என்னதான் கதை சிறப்பானதாக இருந்தாலும், அதனை ரசிகர்களிடத்திலும் பார்வையாளர்களிடத்திலும் கொண்டு செல்வது எஸ்.ஜேசூர்யா போன்ற நட்சத்திர நடிகர்கள் தான். அதை இப்போதே என்னால் பார்க்க முடிகிறது. ஒரு நடிகரை விட ஒரு கதாபாத்திரம் நிறைய பேசப்படுகிறது என்றால் அது ஒரு நடிகருக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம்.

கார்த்தி சர்தாராக திரையில் தோன்ற முடிகிறது. நிற்க முடிகிறது. எல்லோரும் கார்த்தியை சர்தாராகப் பார்க்கிறார்கள். இன்னும் ரசிகர்கள் அந்தப் படத்தை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு திரைப்படத்தின் பார்ட் 2 உருவாகி இருக்கிறது என்றால் அதை நடிகனுக்கு கிடைத்த ஒரு ஆசியாகப் பார்க்கிறேன்.

கார்த்தியின் திரையுலகப் பயணத்தில் என்னை விட முக்கியமான படங்கள் நிறைய உள்ளது. அவரால் அதனைச் செய்ய முடிகிறது. அவரை ஒவ்வொரு படத்திலும் ரசித்தும் ஆச்சரியப்பட்டும், சந்தோஷமாகவும் நான் பார்க்கிறேன். அதில் ‘சர்தார்’-ஐ நான் மிக முக்கியமான படமாகப் பார்க்கிறேன்.

தயாரிப்பாளர் லக்ஷ்மனும், கார்த்தியும் ஸ்கூல் படிக்கும் போதே பிரண்ட்ஸ். இந்த நேரத்தில் இவ்வளவு துணிச்சலுடன் மிகப்பெரிய அளவிற்கு முதலீடு செய்து இப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல், குறிப்பாக பட்ஜெட்டைப் பற்றி யோசிக்காமல் நல்லதொரு தரமான படத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படத்தை அவர் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் கடவுளின் ஆசீர்வாதத்தால் எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ளாமல் வெளியாகி வெற்றியைப் பெற வேண்டும். இயக்குநர் மித்திரனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.