Shadow

Author: Dinesh R

மேகமலை ஒரு பயணம்

மேகமலை ஒரு பயணம்

கட்டுரை, மற்றவை
சில நாட்களுக்கு முன் குமுதம் இதழ் மூலம் இந்த மேகமலை பற்றியறிந்த என் தந்தை தன்னை அங்கே அழைத்து செல்லுமாறு கேட்டார்.  அலுவலகத்தில் ஒரு வாரம் விடுப்பில் இருந்த நான், மேகமலை செல்ல இது தான் சரியான நேரம் என்று முடிவெடுத்து அதற்க்கு வேண்டிய  தகவல்களை சேகரிக்க தொடங்கினேன். அனைத்து விவரங்களும் சேகரித்த பின்னர், நாங்கள் ஒரு ஐந்து நபர்கள் விழுப்புரத்தில் இருந்து ஆகஸ்ட் 14 காலை 5 மணிக்கு  போலேரோ வில் புறப்பட்டோம்.கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்திலிருக்கும் மேகமலை, தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழியில் சின்னமனூர் என்னும் ஊரிலிருந்து  35 கி மீ தொலைவில் இருக்கிறது. இப்படி ஒரு இடமிருப்பது அநேக மக்களுக்கு தெரியாத காரணத்தினால் தானோ என்னவோ ஊட்டி, கொடைக்கானல் போல் இல்லாமல் இங்கே இயற்கை இன்னும் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறது.காலை 11 மணியளவில் சின்னமன்னூ...
தி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ்

தி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ்

அயல் சினிமா, சினிமா
2012 இல் வெளிவந்த இந்த அமெரிக்கப் படம், “இரும்புக்கை மாயாவி” என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இரு வாரங்களுக்கு முன் தமிழகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பிரபல முத்து காமிக்ஸ் நாயகனான இரும்புக்கை மாயாவியின் பெயரை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி கொண்டுள்ளனர். படத்தில் எந்த மாயாவியும் இல்லை.ஜங்கள் வில்லேஜ் என்ற கிராமம் பல போராளி குழுக்களின் தலைமையகம். அவ்வூரின் வழியாக கொண்டு செல்லப்படும் தங்கத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படி, லயன் குழுவின் தலைவர் கோல்ட் லயனிடம் ஒப்படைக்கிறார் அப்பிராந்தியந்தின் கவர்னர். ஆனால் கோல்ட் லயனை வஞ்சகமாகக் கொன்று லயன் குழுவின் தலைவராகிறார் சில்வர் லயன். சில்வர் லயனின் நோக்கம் தங்கத்தை அபகரிப்பது. அவரது நோக்கம் நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் நிறைவுறுகிறது படம்.படத்தின் பலம் அதன் கதாபாத்திரங்களும் அவர்களின் ஆயுதங்களும் தான். கோல்ட் லயனின் மகனான ய...
அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

சினிமா, திரைத் துளி
ஹன்சிகாவை ஒரு அதிர்ஷ்ட தேவதை என திரையுலக வல்லுனர்கள் கூற ஆரம்பித்ததாக  வந்த   செய்தியின் பிண்ணனியில் இந்த வருடம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற இரு படங்கள்: தீயா  வேலை செய்யணும் குமாரு மற்றும் சிங்கம் 2 இல் நடித்தது தான் காரணமாகக் கூறப்படுகிறது.இந்தப் புதிய பட்டதை பற்றி ஹன்சிகாவை விசாரித்த போது, ' இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது. என்னைப் பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பு வரும் போது  அதை இரண்டு கைகளாலும் பற்றி கொள்ள தயார் நிலையில் இருப்பதுதான். ஒரு  ஃப்ரொஃபஷ்னல்l நடிகையாக  மழை வெயில் எனப் பாராமல் உழைப்பதும், இரவு பகல் என தூக்கமின்றி உழைப்பதும், நல்ல கதை , நல்ல தயாரிப்பு நிறுவனம் , நல்ல இயக்குநர் என தேர்ந்து எடுப்பதும் , என் பல பலவீனத்தை உணர்ந்து நடிப்பது என என் கடமையை ஆற்றுகிறேன். இதற்கும் மேலாக என் தாயின் அறிவுரையும் , ஊக்கமும்  ...
வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
சிவாவும், ப்ரியா ஆனந்தும் நடிக்கும்  இப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் கால் பதிக்கிறார் கிருத்திகா உதயநிதி. தனது  முதல் இரண்டு படங்களின் மூலம் பல இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ள அனிருத் அந்த வேட்டையை மேலும் தொடர்கிறாரா என்று பார்ப்போம்.படத்தில் மொத்தம் 7 பாடல்கள். 1. பாடல் - ஹே காற்றில் ஏதோ புதுவாசம்  பாடியவர்கள் - பபோன், மரியா  வரிகள் - நா.முத்துக்குமார்  பர்பி படத்தில் வரும் க்யோன் பாடல் மூலம் பிரபலமடைந்த பபோன்,  தமிழில் பாடும் முதல் பாடல் இது. கலக்குகிறார் மனிதர்.இவருக்கு மறுமுனையில் பாடகர் மரியா. இவர் ஏற்கனவே ரஹ்மான் இசையில் வெளிவந்த கடல் படத்தின் "அடியே" பாடலை பாடியவர். கிதார் மற்றும் சேக்ஸோஃபோனில் தொடங்கி பல இன்ஸ்ட்ருமென்ட் மூலம்  ஒரு புத்துணர்ச்சியூட்டும் பாடலைக் கொடுத்துள்ளார் அனிருத்....
இக்கரைக்கு அக்கரை பச்சை!

இக்கரைக்கு அக்கரை பச்சை!

கட்டுரை, சமூகம்
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளின் மீது நம்மில் பலருக்கும் ஏதோவொரு இனம் புரியாத மோகம் இருக்கும். அல்லது அது மாதிரி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். மேலை நாடுகள் என்றாலே, அங்கே தேனும் பாலும் ஓடுவதைப் போலொரு மாயத்தோற்றத்தை நமது கல்விமுறையும், சமூகக் கருத்தியலும் நமக்குள் உருவாக்கி விட்டிருக்கிறது. அதிலும் இந்த நாடுகளில் வேலை கிடைத்து, நாம் அங்கே போகப்போகிறோம் என்றவுடன் வாழ்க்கையில் ஏதோ பெரிதாய் சாதித்ததைப் போன்று ஓர் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இது மேல்படிப்புக்காக செல்லும் மாணவர்களுக்கும் பொருந்தும். இப்படிக் கனவுகளோடு வருகிறவர்கள் எதிர்கொள்ளும் ஆரம்பக்கால அவஸ்தைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. என்ன தான் போகப்போகிற ஊரை/நாட்டைப் பற்றி விவரங்கள் தெரிந்திருந்தாலும் கூட, வந்து இறங்கியவுடன் ஒரு அந்நிய உணர்வும், வெறுமையும் சூழ்ந்து கொள்வதை தவிர்க்க...
இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா

இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
“இன்னிக்கு (ஆகஸ்ட் 4) ஃப்ரெண்ட்ஸ் டே. லவ்வர்ஸ் டே மாதிரி இங்க ஃப்ரெண்ட்ஸ் டே கொண்டாடப்படலை. அதற்கு காரணம், செல்வராகவன் மாதிரி இயக்குநர்கள் தான். எனக்கும் அவருக்கும் நேரடி பழக்கம் இல்லை. அவருடைய ‘மயக்கம் என்ன’ படத்திலும், என் ‘கோ’ படத்திலும் ஹீரோ ஃபோட்டோக்ராஃபர். சோ ஃபோன் பண்ணி அரை மணி நேரம் கதை சொன்னேன். ஆனா அவர் தனுஷை வச்சு பிளான் பண்ணியிருந்த அடுத்த படத்தின் கதை இதுல இருந்தது. அவர் அந்தப் படத்தையே கை விட்டுட்டார்” என்றார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.“செல்வராகவன் படம் ஒவ்வொன்னும் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அவருக்கு அவரே தான் போட்டி. இந்தப் படத்தில் என்னப் பண்ணியிருக்கார்னு பார்க்க.. சினிமாவை சேர்ந்த டெக்னிஷீயன்ஸே ஆவலாக வெயிட் பண்றாங்க. ஆர்யா.. இப்ப தான் ‘நான் கடவுள்’ பார்த்த மாதிரி இருக்கு. அதற்குள் இன்னொரு பெரிய கேரக்டர். அவரை நீங்க தினமும் காலை மகாபலிபுரத்தில் பார்க்கலாம். உடலை ...
கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா

கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
அறிமுக இசையமைப்பாளர் அரோரா புல்லாங்குழல் வாசித்து விழாவினைத் தொடங்கினார். அவர் 2000 பாடல்களுக்கு மேல் FLUTIST ஆகப் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு இவரை இசையமைப்பாளராகப் பரிந்துரைத்தது புஷ்பா கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது.“எனக்கு இவன் நவீன். சினிமாக்காக வச்சுக்கிட்ட பெயர்தான் அரோரா. எனக்கு அவனை எப்ப தெரியும்னா.. பிறந்ததில் இருந்தே தெரியும். நானும் இவனோட சித்தப்பா வி.எஸ்.குமாரும் 35 வருட நண்பர்கள். நாங்க கிரிக்கெட் விளையாடுறப்ப இவன் பார்த்துட்டு இருப்பான். ‘ராணா’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ம்யூசிக் போட்டிருந்தார். என்னமோ குறையுதே சார்ன்னு நான் கேட்டேன். ஃபைனல் எடிட்டிங் பண்ணிட்டா நல்லா இருக்கும். ஒரு முக்கியமான ஆளுக்காக வெயிட் பண்றேன்.. அவர் வர ரெண்டு நாள் ஆகும் என்றார். அப்புறம் ஃபைனல் எடிட்டிங் முடிஞ்சு நானும், ரஜினி சாரும் கேட்டோம். அட்டகாசமாக இருந்தது. ய...
சரண்ராஜின் மகன் தேஜ்ராஜ்

சரண்ராஜின் மகன் தேஜ்ராஜ்

சினிமா, திரைத் துளி
“நீதிக்கு தண்டனை” படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அதிரடியாய் நுழைந்தவர் சரண்ராஜ்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உட்பட அனைத்து மொழிகளிலும் சேர்த்து நானூறு படங்களுக்கு மேல் நடித்த சரண்ராஜ், அடுத்து தனது மகன் தேஜ்ராஜ் என்பவரை நடிகராக களம் இறக்குகிறார் .“என்னை எல்லா மொழிகளிலும் நடிகனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு ரசிகனுக்கும் நான்    நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது மகன் தேஜ்ராஜ் நடிக்கணும்னு ஆசைப்பட்டார். உடனே ஏத்துக்கொண்ட நான் அவனை வாழ்த்தினேன்.பல இயக்குனர்கள் என் மகன் தேஜ்ராஜை வாழ்த்தி இருக்கிறார்கள். நிறைய இயக்குனர்கள் அறிமுகப்படுத்த ஓகே சொல்லி இருக்கிறார்கள். அதுபற்றி அறிவிப்பு விரைவில் வரும்” என்றார் சரண்ராஜ். “பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டன்ட், ரகுராம் மாஸ்டரிடம் நடனம், பாலு மகேந்திராவின்  பயிற்சி பட்டறையில் நடிப்பு என...
கல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை

கல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை

கட்டுரை, சமூகம்
“நம்மிடம் ஒரு பொருள் இருந்து, அதை நாம் உபயோகிக்கா விட்டால்.. அந்தப் பொருள் நம்மிடம் இல்லாததற்கு சமம்.” இந்த அற்புத தத்துவத்தை சொன்னது எந்தவொரு மேதையும் இல்லை. ஏவாளை வழிக்குக் கொண்டு வந்து ஆப்பிளைச் சாப்பிட வைக்க சாத்தான் சொன்னது. அதையே இப்ப நான் உங்களுக்கு சொல்கிறேன்.நம்மிடம் உள்ளது என்ன?“என்ன வளமில்லை இந்த தமிழ்நாட்டில்” என நான் பாட்டாவே படிச்சிடுவேன். சரி வேணாம் விடுங்க. சித்தரியல் என்ற அரிய விஷயம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுப் போன பெரும் கொடை. சித்தர்கள் தான் உலகின் முதல் விஞ்ஞானிகள் என ஆதாரங்களுடன் நிருபித்தாலும்.. அதை சந்தேகிக்க தான் துணை புரிகிறது மெக்காலே கல்வித் திட்டம். நம்ம நம்பிக்கைகள் இப்படிப் பாதாளத்தில் இருக்க.. பாபா ராம்தேவ்வும், ஸ்ரீலஸ்ரீயும் அதில் நம்பிக்கை வைத்து கோடிகளில் உழல்கின்றனர். அப்படி நாம் கோடிகளில் உழலா விட்டாலும் கூட, மகிழ்ச்சியாகவு...
சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்

சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்

சினிமா, திரைத் துளி
சுய விளம்பரம் செய்யும் வகையில்  வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்க கூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும்  அஜீத் குமார்  கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு தலைப்பு பரிசீலிக்கப்பட்டது.தலைப்பு வைக்கப்படாத படமென, படத்தின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இது வரை எந்த ஒரு படத்துக்கும் 'தலைப்பு' குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை. ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் A.ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் குமாரின் நடிப்பில் வெளிவர உள்ள படத்துக்கு ஆரம்பம் என  பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர்கள்:>> அஜீத்  >> நயன்தாரா >> ஆர்யா >> ராணா டகுபதி >> தாப்ஸி >> கிஷோர் >> அதுல் குல்கர்னி >> மகேஷ் மஞ்சுரேக்கர் >> சுமா ரங்க...
கிரிமினல்களாக யாரும் பிறப்பதில்லை”- கஸ்தூரிராஜா

கிரிமினல்களாக யாரும் பிறப்பதில்லை”- கஸ்தூரிராஜா

சினிமா, திரைத் துளி
தனுஷ் நடித்த  3  படத்தைத்  தொடர்ந்து ஆர்.கே.ப்ரொடெக்ஷன்ஸ்(பி) லிட். பட நிறுவனம் சார்பாக விஜயலட்சுமி கஸ்தூரிராஜா தயாரிக்கும் படத்திற்கு “காசு பணம் துட்டு “ என்று பெயரிட்டுள்ளனர்.கஸ்தூரிராஜா இயக்கத்தில் “அசுரகுலம்” என்ற பெயரில் தயாரான படமே “காசு பணம் துட்டு” என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவர உள்ளது. இதே பெயரில் மலையாளத்திலும் இப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மித்ரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக சானியா மற்றும் மும்பையைச் சேர்ந்த சுயோசா சாவந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பாலா என்ற புதுமுகம் நடிக்கிறார் மற்றும் வினோத், மினடிஸ், அஜீத்ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.“சென்னை குடிசைப் பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கை இது. குடிசை பகுதிகளில் வாழும் மக்களை இந்தச் சமூகம் என்ன மாதிரியான நிலைமையில் வைத்திருக்கிறது?பிறக்கின்ற குழ...
மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி?

மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி?

கட்டுரை, சமூகம்
எங்கயாவது ஒரு டாக்டர் டிவி-ல போய் உட்கார்ந்துகிட்டு வாஸ்து படி வீடு எப்படி கட்டுறதுன்னு கருத்து சொல்ல முடியுமா? ஆனா ஒரு கவிஞனா இருந்தா எதுக்கு வேணும்னாலும் கருத்து சொல்லலாம். சாதி பிரச்சினையில இருந்து சாம்பார்ல உப்பு குறைஞ்சா என்ன பண்றதுங்கற வரைக்கும் எல்லாத்துக்கும் தீர்வு சொல்ற ஒரே தகுதி.. இந்தக் கவிஞர்களுக்குத்தான் இருக்கு.அதுனால நீங்களும் கவிஞர் ஆகறீங்க. எப்படி? அதுக்குத்தான் இந்தப்பதிவு.முதலில் கவிதை எழுதனும்னு தீர்க்கமா ஒரு முடிவு பண்ணுங்க. ஆமா கவிதை எழுதணும்னு முடிவு பண்ணின உடனே, கொலதெய்வம் கூகிளாண்டவரை மனசுல நிறுத்தி அவர்கிட்ட கோரிக்கை வச்சிட்டா.. அவர் அள்ளிக்கோ, அள்ளிக்கோன்னு கொடுத்துருவார்.உதாரணம் - http://www.poemhunter.com/poems/alone/இதைப் போல நாலைந்து வெப்சைட்.. ஹைக்கூ கவிதைகள் உள்ள வெப்சைட்ல நமக்கு என்ன வேணுமோ அதை எடுத்து, மறுபடியும் கூகிளாண்டரை ...
இது நம்ம ஊருங்க!!

இது நம்ம ஊருங்க!!

கட்டுரை, மற்றவை
நம்ம ஊர். அது என்ன ஊர்? "கோயம்புத்தூர்." கோயம்புத்தூரின் பெயர்க்காரணம் தெரியுமா உங்களுக்கு?நம்ம கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொல்லும் விளக்கத்தினைப் பாருங்களேன்.கன்னியரின் இதழழகை கோவையென்பார்!கனிமழலை முழுவடிவை கோவையென்பார்!தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு. திறமான கவிதொகுத்த கோவை யுண்டு.இந்நகரை “கோவை” என ஏனழைத்தார்?எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்?என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர் இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின் மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்.செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற செங்குட்டுவன் ஒருவன். தமிழெடுத்து அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல் அடுத்தொருவன்.இவ்விருவர் குறிப்பும் பார்த்து பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான் பேதையொரு வேதாந்தி.அதனைக்கேட்டு முன்...
தலைவா இசை – ஒரு பார்வை

தலைவா இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
முதல் முறையாக இளைய தளபதி விஜய்யின்  படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம் படத்தினை தொடர்ந்து தலைவா படத்திலும் இயக்குனர் விஜயுடன் கை கோர்த்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ், விஜய்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை தன்னுடைய இசையால் பூர்த்தி செய்திருக்கிறாரா என்று பார்ப்போம். நா.முத்துக்குமாரின் வரிகளில் படத்தில் மொத்தம் 5 பாடல்கள். 1. பாடல் - தமிழ் பசங்க  பாடியவர்கள் - பென்னி டயால், ஷீஷே - சைகோ யூநிட்தமிழனாக இருப்பதின் பெருமையை வெளிப்படுத்தும் பாடல். வெஸ்டெர்ன் இசையில் ஒரு உற்சாகமான பாடல். இப்படத்தில் "டான்சராக" நடிக்கும் விஜய்க்கு, தன்னுடைய நடனத்தை வெளிப்படுத்த ஏதுவாக இப்பாடல் இருக்கும் என்று தோன்றுகிறது.2. பாடல் - யார் இந்த சாலையோரம்  பாடியவர்கள் - ஜீ.வி பிரகாஷ், சைந்தவி "யார் இ...