Shadow

Author: Dinesh R

“தூக்குடா சோலர் ஸ்டார!”

“தூக்குடா சோலர் ஸ்டார!”

சினிமா, திரைச் செய்தி
“'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்துல முக்கியமான ரோலில் நடிச்சிருக்காரு சோலர் ஸ்டார். அவர் யாருன்னா.. தேவயாணி மேடம் புருஷன் இராஜ்குமார் சார். எப்படி, ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா!’ல பவர் ஸ்டாரை நடிக்க வச்சோமோ அப்படி இந்தப் படத்தில் இவர் நடிச்சிருக்கார். வாயில ஜாங்கிரி வச்சுக்கிட்டு, சோலார் ஸ்டார் என படம் நூறு நாளும் நூத்தம்பது நாளும் போச்சுன்னு விளம்பரம் பண்ணியிருந்தார். சரி இவரை மாதிரி ஒரு ஆள் தேவைன்னு.. தூக்கு இவரன்னு சொன்னேன். அவரைத் தூக்கிட்டு வந்துட்டாங்க. அதுல என்னன்னா.. அவர் வீட்டுல சொல்லிக்காம துணிமணிலாம் கட்டிட்டு வந்துட்டிருக்கார். அவர் வீட்டுல ஃபோன் பண்ணிக் கேட்கிறாங்க, ‘அவர் வந்திருக்காரா? சொல்லாம ஓடி வந்துட்டாரு’ன்னு. நான் அவர்ட்ட கேட்டேன். “ஏன்ங்க சொல்லாம வந்தீங்க?” என. அதுக்கு அவர் சொன்னார்.. அவங்க வீட்டுல ஒப்பாரி வச்சு அழுவுறாங்களாம். சந்தானம் ஆர்யா சூர்யாவையே ஓட்டுவான். ந...
“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
“சந்தானம் சார் நடிச்சா நல்லாயிருக்கும்னு கிரேஸி மோகன் சார் சொன்னார். அவர் டேட் கிடைக்காதுன்னு சொன்னாங்க. இரண்டு நாள் வந்து நடிச்சுக் கொடுத்தார். பார்த்ததும், அழகா இருக்காரே இவரை நடிக்க வச்சா ஏதாச்சும் பிரச்சனை ஆயிடுமோன்னு நினைச்சேன். இரண்டு நாளும், டைம்க்கு வந்து எப்படி டையலாகை இன்னும் அழகா பண்ணலாம்னு வொர்க் பண்ணிட்டு இருந்தார். அந்த க்வாலிட்டி ரொம்ப பிடிச்சிருந்தது. என்னோட ‘மரியாதை ராமண்ணா’ படத்தில் நடிக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஒரு சாதாரண மனுஷன் அசாதாரண சூழலில் இருந்தா என்னாகும் என்பதுதான் கதை. அவருக்கு இந்த ஜானர் சூட் ஆகும். ஏன்னா அவர் அழகா இருக்காங்க. நல்லா காமெடி பண்றாங்க. தெலுங்கில் ஹிட்டாச்சு. ஹிந்தியில் ரொம்ப ஹிட்டாச்சு. தமிழ்ல ரொம்ப ரொம்ப ஹிட்டாகும்னு நம்புறேன்” என்றார் தெலுங்கின் சூப்பர் ஸ்டார் இயக்குநரான ராஜ்மெளலி. “நீரோன்னா சிக்ஸ் பேக் வச்சிருக்கணும், லான்றிக்குப் ப...
ரியோ-2

ரியோ-2

அயல் சினிமா, சினிமா
ரியோ என்பது பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரமான ரியோ டி ஜெனிராவைக் குறிக்கும். ப்ளூ என்னும் நீலநிற ஆண் கிளியை லிண்டா என்னும் பெண் தனது சிறுவயது முதலே வளர்த்து வருகிறார். பறவையியல் வல்லுநரான டுலியோ, லிண்டாவை அணுகி, அவரையும் ப்ளூவையும் ரியோவிற்கு அழைக்கிறார். நீலநிற கிளிகளில் கடைசியாக வாழும் பெண் கிளியான ஜ்வெலையும், ஆண் கிளியான ப்ளூவையும் ஒரே கூண்டில் விடுகின்றனர். பறவைகளைக் கடத்தும் கடத்தல்காரர்கள், ஜ்வெலையும் ப்ளூவையும் கடத்திவிடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பி தங்களது வாழ்க்கையைத் தொடங்குகின்றனர் ப்ளூவும் ஜ்வெலும். அவர்களுக்குப் பிறக்கும் மூன்று கிளிகளுடன், ரியோ படத்தின் முதல் பார்ட் நிறைவடையும். 3டி படமாக வந்திருக்கும் ரியோ-2 முதல் பார்ட்டில் வரும் பறவைகளையே கதாபாத்திரங்களாகக் கொண்டுள்ளது. ஒரு பறவையை அமேசனில் விடச் செல்லும் லிண்டாவும் டுலியோவும், நீலநிற கிளியின் இறகொன்றைப் பார்க்கின்ற...
ஆந்திர சினிமாவில் ‘தமிழ்க் கடவுள்’

ஆந்திர சினிமாவில் ‘தமிழ்க் கடவுள்’

சினிமா, திரைத் துளி
சுப்ரமணியபுரம் எனும் ஊரிலுள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஏதோ ஒரு மர்மமான காரணத்தால் மூடப்படுகிறது. அந்தக் கோயிலைத் திறக்க யார் முயற்சி செய்தாலும், அவர்கள் பாம்பால் தீண்டப்பட்டு இறக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. தமிழில் கார்த்திகேயன் என்றும், தெலுங்கில் கார்த்திகேயா என்றும் எடுக்கப்படும் இப்படத்தில் நிகில் நாயகனாகவும், ஸ்வாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். நாயகன் நிகிலுக்கு தமிழில் இது முதற்படம். சென்னை, பாண்டி, கும்பகோணத்தில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. நல்லதொரு த்ரில்லர் படமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ‘கார்த்திகேயன் சாமி படமா, சமூகப் படமா?’ என்று கேட்டதற்கு, “இரண்டும் இணைந்ததுதான்” என்கிறார் படத்தின் இயக்குநர் சந்து....
நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோபமோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ என அதீதமாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் தூங்கி விடுவார் இந்திரன். இத்தகைய, ‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட இந்திரன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான் கதை. 29 வருடங்களுக்கு முன், லக்ஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடப்பதுபோல், ரஜினியின் தங்கைக்கு நிகழும். ரஜினிக்கு தூக்கம் வராது. பின் ரஜினி சிகப்பு மனிதனாக மாறி, ராபின்-ஹூட் என மக்களால் கொண்டாடப்படுவார். தூங்கி வழியும் விஷாலோ, தன் குறைபாடுகளை மீறி சிகப்பு மனிதனாக மாறி, தன் சொந்த வெறுப்பினை மட்டும் தீர்த்துக் கொள்கிறார். அதோடு அவரது பத்தாவது ஆசையும் பூர்த்தியாகிறது. இந்திரனாக விஷால். மிக மிகத் தெளிவாக இருக்கார். மிகை ஹீரோயிசம், காமெடிக் காட்சிகளில் விஜய்யை இமிடேட் செய்வது போன்றவற்றைலாம் முற்றிலுமாக தவிர்த்து விட்டு, கதைக்குத் ...
லக்ஸ் – பொழுதுபோக்கின் புதிய பரிமாணம்

லக்ஸ் – பொழுதுபோக்கின் புதிய பரிமாணம்

கட்டுரை, மற்றவை
SPI சினிமாஸ் நிறுவனம் வழங்கும் லக்ஸ், ஒரு மாறுபட்ட, நவீனமான மற்றும் உள்ளம் கவர்கின்ற சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்துப் பாரம்பரிய வழக்கங்களைத் தகர்த்தெறிகிற ஒரு புதிய சினிமா அமைவிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் மாலில் 11 திரைகள் கொண்ட 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய SPI சினிமாஸின் லக்ஸ் தியேட்டர் திறக்கப்பாட்டுள்ளது. இதில் உணவகம், கஃபே, ரீடெய்ல் ஸ்டோர், ஸ்பா, விளையாட்டு இடம் என பல நவீன வசதிகள் கொண்டுள்ளன. இது படைப்புத்திறன, நவீன ஸ்டைல், வசதி, தரம் என அனைத்தையும் கொண்டு நவீன தொழில்நுட்பத்தில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்கூடம் லக்ஸ் கதவைத் திறந்தவுடனே காற்றோட்டம் கொண்ட இடம், இத்தாலி நாட்டு மார்பிள், வெல்வெட் போன்ற சுவர், கிரிஸ்டல் விளக்குகள், அழகிய வடிவங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடிப் பரப்புடன் பார்வையாளர்களை வரவேற்கிறது. முன்கூட்டத்தில் உணவகம் உள்ளது. முன்கூட்டத்தின்...
“இது கொண்டாட்ட நேரம்” – ஹீரோ சந்தானம்

“இது கொண்டாட்ட நேரம்” – ஹீரோ சந்தானம்

சினிமா, திரைத் துளி
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைய இருப்பதால், அதைக் கொண்டாட நினைத்த படக்குழுவினருக்கு இன்னொரு கொண்டாட்டத்துக்கான காரணம் காத்திருந்தது . மூத்த ஸ்டுன்ட் இயக்குநர் விஜயன் மாஸ்டரின் பிறந்த நாள் கொண்டாட்டம் தான் அது. பட்டு வேட்டி சட்டையில் சந்தானமும், பட்டுப் புடைவையில் கதாநாயகி ஆஷ்ணா சாவேரியும் ஒரு விசேஷதுக்கான உடையில் வலம் வந்தனர். அதிரடிக் காட்சிகளில் பஞ்ச் அடிக்கும் விஜயனின் பிறந்த நாளை சிரிப்பு சரவெடியில் பஞ்ச் அடிக்கும் சந்தானம் கொண்டாடியதை விஜயன் மாஸ்டர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். காதல் காட்சிகளில் மட்டுமின்றி , அதிரடி சண்டை காட்சிகளில் கூட சோபிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ள சந்தானம் கொண்டாட இதை விட வேறு தருணமோ , வேறு சரியான காரணமோ கிடைக்காது....
“நானே எனக்கு மேனஜர்!” – ஹன்சிகா

“நானே எனக்கு மேனஜர்!” – ஹன்சிகா

சினிமா, திரைத் துளி
அநாமதேயர்கள் தாங்கள்தான் எனக்கு மேனஜரெனத் தவறான தகவல் பரப்பி வருவதாக அறிகிறேன். எனது சினிமா தோழமைகளின் கவனத்திற்கு, நானோ என் அம்மாவோ தவிர்த்து, என் படங்களுக்கான தேதிகள் குறித்து தயாரிப்பாளரிடம் பேச வேறெவருக்கும் அதிகாரமில்லை. அநாமதேயர்களின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் எவ்வகையிலும் பொறுப்பில்லை. - ஹன்சிகா...
டமால் ஏன்? டுமீல் ஏன்?

டமால் ஏன்? டுமீல் ஏன்?

சினிமா, திரைத் துளி
அஞ்சு பத்து லஞ்சம் கொடுத்தாவது தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சாதாரணமானவன் நாயகன் மணி. வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் சூழ்நிலை காரணமாக வேலையை இழக்கிறான். இதற்கிடையில் இளவரசு, காமாட்சி சுந்தரம் என்ற இரு சமூக விரோதிகளின் பிடியில் சிக்குகிறான். இந்த இருவரில் ஒருவரிடம் சிக்கினாலும் மணியின் உயிர் போவது உறுதியாகிறது. அவன் செய்த தவறு என்ன, ஏன் இவர்கள் இவனைத் தேடுகிறார்கள், மணி இவர்களிடம் சிக்கினானா அல்லது தப்பினானா என்பதே முடிவு. கதையின் நாயகன் மணியாக வைபவ். கதையின் நாயகியாக ரம்யா நம்பீசன். இளவரசாக கோட்டா சீனிவாச ரா காமாட்சி சுந்தரமாக ஷாயாஜி ஷிண்டே நடிக்கின்றனர். இவர்கள் தவிர மனோபாலா, சார்லி முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பணிக்குழு: >> எழுத்து, இயக்கம் - ஸ்ரீ >> தயாரிப்பு - கேமியோ ஃப்லிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார் >> ப்ரொடக்ஷன...
சைவத்தில் சேவல்

சைவத்தில் சேவல்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் விஜய் இயக்கும் ‘சைவம்’ படத்தில் நாசர், சாரா தவிர அனைவருமே புதுமுகங்கள். கூத்துப் பட்டறை கலைஞர்கள், விஞ்ஞானி வித்யா, ஹெலிகாப்டர் மெக்கானிக் விக்கி, நாசரின் மகன் பாஷா என கலந்து கட்டி கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் விஜய். இதற்கு உதவிய ஷண்முகராஜன், தங்கள் பாத்திரங்களை நடிகர்கள் உணர்ந்து நடிக்க ட்ரெயினிங் கேம்ப் ஒன்றும் நடத்தியுள்ளார். “இது என்னுடைய கதை இல்லை. நான் சின்ன பையனாக இருக்கிறப்ப எங்க அம்மா சொன்ன கதை. அவங்கதான் அன்-அஃபீஷியல் ரைட்டர், இந்தப் படத்துக்கு. தெய்வத் திருமகள் படத்தில், விக்ரமுக்கும் சாராவுக்கும் ஒரு போட்டி இருந்தது. இந்தப் படத்தில், அப்படி நாசர் சாருக்கும் சாராவுக்கும் நடிப்பில் ஒரு போட்டி இருக்கும். ஆனா சைலன்ட்டாக ஸ்கோர் செய்திருப்பது ‘ரே பால்’ என்ற பையன்தான். படம் பார்த்து முடிக்கிறப்ப, கண்டிப்பாக இந்தப் பையனைப் பற்றி எல்லாம் பேசுவார்கள்” என்றார் இயக்கு...
தேவதை ஒருவரல்ல.. மூவர்!

தேவதை ஒருவரல்ல.. மூவர்!

சினிமா, திரைச் செய்தி
ஒரு சினிமா விழா போலில்லாமல் கல்யாண நிகழ்வு போல கலை கட்டியது ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா. விழாவிற்கான அழைப்பிதழுடன், காய்கறிகள் அடங்கிய கவர் ஒன்றினையும் கொடுத்து அசத்தியிருந்தார் இயக்குநர் விஜய். ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, குடும்பத்துடன் அனைவரும் வந்துள்ளார்களே என வந்திருந்த விருந்தினர் அனைவருமே வியந்தது குறிப்பிடத்தக்கது.சாராவுக்காக பின்னணி பாடியிருந்த உத்ரா உன்னிகிருஷ்ணன், அப்பாடலை மேடையில் பாடிக் காட்டியதும் விசிலும் கைதட்டலும் பிரமாதமாய் எழுந்தடங்கியது. சைந்தவிதான் உத்ராவைப் பாட வைக்கலாம் என ஜீ.வி.பிரகாஷிடம் பரிந்துரைத்துள்ளார். விஷூவலில் சாராவின் லிப்-சின்க் கச்சிதமாய் இருப்பது பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. தெய்வத்திருமகள் படத்தில் சாராவிற்கு பின்னணிக் குரல் கொடுத்த ஷ்ரிங்காதான் சைவம் படத்திலும் கொடுத்துள்ளார். ஷ்ரிங்கா, சாரா, உத்ரா, ஆகிய மூவரும் மேடையில் தோன்றி...