சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம் 2027-ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. படம் குறித்த ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல் போஸ்டர் வெளியானது முதலே இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, படத்தில் ரன்பீர் கபூர் இடம்பெறும் கதாபாத்திர தோற்றங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது, ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான நியூ ஜெனரேஷன் கேபரேட் அவதாரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
View this post on Instagram
முதல் போஸ்டரில் ஆலியா பட், கண்கவர் ஸ்லிட் ஸ்கர்ட் மற்றும் சிகை அலங்காரத்துடன் நாற்காலியில் அமர்ந்தபடி தோன்றுகிறார். அவரது தோற்றம் படத்தின் கிளாமர் அம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இரண்டாவது போஸ்டரில், ஆலியா பட் முற்றிலும் மாறுபட்ட கேபரேட் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். பின்னணியில் மின்னும் கேபரேட் மேடை இடம்பெற்றுள்ள நிலையில், அவரது உடை, அலங்காரம் மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் திரைப்படங்களுக்கே உரிய நுணுக்கமான கலை வடிவமைப்பு பிரதிபலிக்கிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘லவ் & வார்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2027 ஜனவரி 21 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
View this post on Instagram

