Shadow

Author: Dinesh R

குக்கூ – இசை வெளியீட்டு விழா

குக்கூ – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
பாலுமகேந்திராவின் குரலுடன் குக்கூ இசை வெளியீட்டு விழா தொடங்கியது. அந்த மகா கலைஞருக்கான மரியாதையை வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று செலுத்தினர். “முருகா.. உன் கனவுகள் நனவாக என்றுமிருப்பேன் துணையாக” என விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் சிம்பிளாகத் தொடங்கி வைத்தார். குக்கூ பட இயக்குநர் ராஜூமுருகனின் முதல் குரு இவர். கண்ணன் கொடுத்த தைரியமும் நம்பிக்கையும்தான், ‘தன்னால் முடியுமா?’ என சந்தேகித்த ராஜூமுருகனை ‘வட்டியும் முதலும்’ எழுதவைத்தது. ராஜூமுருகனின் இரண்டாவது குரு, சினிமா தொழிலைக் கற்றுக் கொடுத்த லிங்குசாமி. தன்னை பேட்டியெடுக்க வந்த ராஜூமுருகனை லிங்குசாமியே விரும்பி , ‘என்னிடம் அசிஸ்டென்ட்டாகச் சேர்த்து கொள்கிறாயா?” எனக் கேட்டுள்ளார். “ஆனால் இவன் என்னைப் போன்ற இயக்குநர் இல்லை. பாலா, சேரன், ‘அழகி’ படம் எடுத்த பொழுதிருந்த தங்கர் பச்சான் போல ஒரு இயக்குநர்” என்றார். “இரண்டு கருத்த இளைஞர்கள், க...
“இப்புடு ஹீரோ; ரேப்பூ வில்லன்” – ஆந்திரா மெஸ்

“இப்புடு ஹீரோ; ரேப்பூ வில்லன்” – ஆந்திரா மெஸ்

சினிமா, திரைச் செய்தி
சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது. அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மனமில்லாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்க்கை பயணமே ’ஆந்திரா மெஸ்’. “அனைவரும் அதென்ன ஆந்திரா மெஸ்னு தலைப்பு என்றே கேட்கிறாங்க. தலைப்பு ரொம்ப கவர்ச்சியாக இருக்கு. அப்புறம் சாப்பாடு. அனைவருக்கும் பிடிச்ச விஷயம். இதுல ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு சுவையைக் குறிக்கிறது. காரம், புளிப்பு, ஸ்வீட் என கதாபாத்திரங்களின் metaphor (உருவகம்) தான் தலைப்பு. படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை மெட்டோஃபர் தான். படத்தில் ஹீரோ, ஹீரோயின் இல்லை. ஏன்னா முதல் சீன்ல ஹீரோவாகத் தெரிஞ்சவன் மூணாவது சீன்ல வில்லனாகத் தெரிவான். ஒருவரிடம் கடன் வாங்கும்பொழுது அவர் ஹீரோவாகத் தெரிவார்; அவரே நாளைக்கு கடனைத் திருப்பிக் கேட்கிறப்ப வில்லனாகத் தெரிவார். ஸ்நூக்க...
“குக்கூ” இசை – ‘வட்டியும் முதலும்’ ராஜூ முருகன்

“குக்கூ” இசை – ‘வட்டியும் முதலும்’ ராஜூ முருகன்

சினிமா, திரைத் துளி
இந்தப் புகைப்படத்தில் கிராமஃபோனுக்குப் பக்கத்தில் நிற்கிற முருகேசண்ணனை நீங்கள் பார்க்க வேண்டும். குழந்தை மாதிரி திறக்காத கண்களும் நம்மைத் திறந்து வைக்கிற சிரிப்புமாக இருக்கிற முருகேசண்ணன். மூர்மார்க்கெட்டில் கடை நடத்துகிறார். இந்தக் கதையை எனக்கு பரிசளித்தவர்களில் அவரும் ஒருவர். படத்தில் ஒரு மாண்டேஜில் தோன்றுவதற்காக அவரது மனைவியையும் அழைத்தேன். காட்சி எடுப்பதற்கு முன்பாக மனைவியின் கைகளைத் தடவிப் பார்த்தவர், “ஏய்.. வளையல் போடல..” என்றபடி வளையலை வாங்கி மாட்டிவிட்டார். அது நம்மால் யோசிக்கவே முடியாத அன்பின் எட்டாவது வண்ணம்! மாதவரத்தில் பார்வையற்றவர்களுக்கான பயிற்சி வகுப்பில் இளங்கோ. “சார்… ஒங்க முன்னாடி தம்மடிச்சா மரியாத இல்ல… திரும்பி நின்னுக்குங்க சார்…” எனச் சிரித்தான். கழுத்து நரம்பு இழுக்க, இளையராஜாவாகவே மாறி, ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது…’ பாடினான். அவனது சிரிப்பை நீங்கள் ஒருமுறை பா...
ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்

ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்

சினிமா, திரைத் துளி
ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார். உணர்வுபூர்வமான, சென்டிமென்ட்டான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுப்பதில் வல்லவரான இயக்குநர் பி.வாசு இந்தக் கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்கவிருக்கிறார். 'ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்' என இப்படத்திற்கு தற்போது பெயரிட்டிருக்கிறார்கள். இந்தியத் திரையுலகம் கண்டிருக்காத, ஒரு தனித்துவம் வாய்ந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் இதுவரை நடித்திருக்காத ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.  பல முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்களுடன் இப்படத்திற்கான அதிகப்படியான அனிமேஷன் காட்சிகளை உருவாக்க தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனிமேட்ரானிக்ஸ் நிபுண...
‘தல’ ஹீரோயின் நயன்தாரா

‘தல’ ஹீரோயின் நயன்தாரா

சினிமா, திரைச் செய்தி
சூப்பர்ஹிட் ஹிந்திப் படமான ‘கஹானி’ தமிழில் ‘நீ எங்கே என் என்பே’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் இயக்கி வருகிறார் இயக்குநர் சேகர் கம்முலா. படத்தினை அப்படியே தழுவாமல் தனது பாணியில் திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கிறார். உதாரணத்திற்கு வித்யா பாலன் ஹிந்திப் படத்தில் கர்ப்பிணியாக நடித்திருப்பார். சேகர் கம்முலாவின் படத்தில் நயன்தாரா படத்தில் கர்ப்பவதி இல்லை. படத்தைப் பற்றி, ‘கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பது வாழ்நாளில் ஒருமுறை நிகழும் அதிசயம். இயக்குநரின் எதிர்பார்க்கும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துவிட்டேன் என்ற நிறைவு எனக்குள்ளது. கண்டிப்பாக ரசிகர்களும் அதை உணர்ந்துபோற்றுவார்கள்’ என்று சொல்லியுள்ளார் நயன்தாரா. இயக்குநர் சேகர் கம்முலாவும், இசையமைப்பாளர் கீரவாணியும்  கலந்து கொண்ட பிரஸ் மீட் சென்னையில் நடந்தது. சேகர் கம்முலாவின் ச...
பிரம்மாண்டமாய் வளர்கிறது “யான்”

பிரம்மாண்டமாய் வளர்கிறது “யான்”

சினிமா, திரைத் துளி
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குநராக களமிறங்கும் திரைப்படம்தான் "யான்". RS infotainment சார்பில் திரு.எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகி வரும்  ஜீவா, துளசி, நாசர், ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, 'சூது கவ்வும் ' கருணா ஆகியோர் நடிக்கின்றனர். 60% படப்பிடிப்பு இங்கு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரோக்கோ நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் அங்கே வரலாறு காணாத பனி பெய்த போதும் அதைப் பொருட்படுத்தாமல் மிகுந்த சிரமத்துடன் உக்கிரமான சண்டை காட்சிகளையும், கண்களைக் கவரும் பாடல் காட்சிகளையும் படமாக்கி உள்ளனர். துரித வேகத்தில் படப்பிடிப்பை நடத்திய திரு. ரவி கே.சந்திரனின் வேகத்தையும், படமாக்கும் நேர்த்தியையும் கண்டு Bourne ultimatum, The Mummy, Zero dark 30, Body of lies , Kingdom of heaven ஆகிய உலக தரம் வாய்ந்த படங்களில் பணியாற்றிய மொராக்கோ நாட்டு படக...
மௌனம் கலைத்தார் பாலுமகேந்திராவின் துணைவி.. மௌனிகா

மௌனம் கலைத்தார் பாலுமகேந்திராவின் துணைவி.. மௌனிகா

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன், விடுதலை ஆகியோர் எடுத்த முயற்சியினாலும், பாலுமகேந்திராவின் மகன் கௌரிசங்கரின் பெருந்தன்மையாலும்தான் தன் கணவரின் முகத்தை கடைசியாகப் பார்க்க முடிந்ததாக நடிகை மௌனிகா தெரிவித்துள்ளார். 1985இல், 'உன் கண்ணில் நீர்வழிந்தால்' படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த போதுதான் அவரை முதலில் சந்தித்தேன். அன்று தொடங்கிய உறவு கடந்த 28 ஆண்டுகளில் அன்பும் காதலும் புரிதலும் நிறைந்த உறவாக இருந்தது. கடந்த 2000இல் நாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டாலும் அவருக்கு இரண்டாவது அட்டாக் வந்தபோதுதான் அவர் எங்கள் திருமணத்தை வெளிப்படையாக அறிவித்தார். அதன் பிறகே எனக்கும் அவருடைய முதல் குடும்பத்தினருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தனக்கு ஏதும் நேர்ந்துவிட்டால் அழாமல் வந்து தன் முகத்தைமட்டும் பார்த்துவிட்டுச் சென்றுவிடும்படி கூறியிருந்தார். அவர் ஓரு பெர்ஃபக்‌ஷன...
காதலைக் கொண்டாடும் ‘ஆஹா கல்யாணம்’

காதலைக் கொண்டாடும் ‘ஆஹா கல்யாணம்’

சினிமா, திரைத் துளி
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான 'பேண்ட் பஜா பராட்' படத்தை தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப மாற்றங்கள் செய்து தமிழில் 'ஆஹா கல்யாணம்' என்ற பெயரில் யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். அவர் வெளியிட்டிருக்கும் காதலர் தின வாழ்த்து செய்தியில் தனது முதல் படத்தின் மேல் உள்ள காதல் திருமண பந்தம் போல நீடித்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார். "படத்தின் முதல் பிரதியைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ் ரசிகர்களை குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திழுக்கும் அத்தனை அம்சங்களும் சிறப்பாக வந்திருக்கின்றது" என்று கூறியுள்ளார். மேலும், "சக்தியாக நானியும், ஸ்ருதியாக வாணியும் கலக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் இவர்களின் இளமை குறும்பு கொப்பளித்துக் கொண்டே இருக்கும். இது போன்ற ஒரு காதல்...
இது கதிர்வேலன் காதல் விமர்சனம்

இது கதிர்வேலன் காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கதிர்வேலனின் அப்பாக்கு காதலென்றால் பிடிக்காது. ஆனால் ஆஞ்சனேய பக்தனான கதிர்வேலனுக்கு காதல் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை. ஓகே.ஓகே.வில் நடித்தவரா என அதிசயிக்க வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தலையை மட்டும் வேண்டிய மட்டும் ஆட்டிவந்தவரின் முகத்தில் சில பாவனைகளும் எட்டிப் பார்க்கின்றன. மீண்டும் அவருக்கு தோதான கதாபாத்திரத்தினைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நடனமும் முயற்சி செய்திருக்கார். கேமிரா பற்றிய பிரக்ஞை கூடியுள்ளதால், சிரமமில்லாமல் தன்னை அழகாக திரையில் எக்ஸ்போஸ் செய்கிறார். சந்தானத்தின் துணையில்லாமலேயேகூட அடுத்த படத்தில் துணிந்து தனியாகவே திரையில் தோன்றலாம். அதற்கு அப்படத்திலாவது கதையிருக்க வேண்டியது அவசியம். அட்லீஸ்ட் சுவாரசியமான திரைக்கதையாவது! மயில்வாகனமாக சந்தானம். கிட்டத்தட்ட அவரின் எல்லாப் படத்தினைப் போலவே, கதாநாயகனின் காதலுக்கு யோசனை சொல்லிச் சேர்த்து வைக்கும் மிக முக்க...
“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா

“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா

கட்டுரை, சினிமா, மற்றவை
“எனது படைப்புகள் மூலம் மரணத்தின் பின்பும் நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன். மரணிக்கப் போவது என் உடல்தான். நானல்ல!” என நிறைவாகக்கூற ஒரு மகத்தான கலைஞனால் மட்டும்தான் முடியும். தமிழகத்தில், சினிமாவை கலையாகப் பார்த்த சொற்பமானவர்களில் முதன்மையானவர் பாலு மகேந்திரா. அவருள் சினிமா விதையை முதன்முதலில் விதைத்தது ஓர் அமெரிக்கர். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியராக இருந்த ஃபாதர் லோரியோ, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரொஜெக்டரில் சினிமா காண்பிப்பாராம். கண்டியில் இங்கிலாந்து இயக்குநர் மழையை வரவழைத்த அதிசயத்தைப் பார்த்து தாமும் அதைச் செய்ய ஆசைப்பட்டார் பாலு மகேந்திரா. அன்றுதான் அவருக்கு இறவாப் புகழைப் பெற்று தந்திருக்கும் கருவியான கேமிராவை முதன்முறையாகத் தொட்டுப் பார்த்து சொல்லமுடியாத பரவசத்தை அடைந்துள்ளார். சினிமா ஆசை அவரை பூனே திரைப்படக் கல்லூரிக்குத் துரத்தியது. குறைந்த...
இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’

இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’

சினிமா, திரைச் செய்தி
நம் அனைவருக்கும் இன்னொரு முகம் இருக்கும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் நல்ல முகமோ கெட்ட முகமோ வெளிப்படும். அப்படித் தேவைக்கேற்ப முகத்தைக் காட்டுபவன்தான் “மறுமுகம்” படத்தின் நாயகன். இப்பொழுது ட்ரெண்டில் இருக்கும்  ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகையைச் சார்ந்ததுதான் இப்படமும். ‘ஊமை விழிகள்’ படத்திற்குப் பிறகு ஃப்லிம் ஸ்டூடண்ட்ஸ் மாணவர்கள் இணைந்து உருவாக்கும் படம். படத்தின் இயக்குநரான கமல் சுப்ரமணியம் திரைப்படக் கல்லூரி மாணவர். படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் டேனியல் பாலாஜி அவருக்கு கல்லூரியில் சீனியர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சன்ஜய் டாங்கி. “திரைப்படக் கல்லூரியில் இருந்துவரும் ஒவ்வொருவருக்கும் விஜயகாந்தை வைத்து இயக்குவதுதான் கனவாக இருக்கும். கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும், அவர் அலுவலகம் இருக்கும் ராஜாபாதர் தெருதான் அவர்கள் செல்லும் முதலிடமாக இருக்கும். திரைப்பட கல்லூர்...
ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா

ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
கோலங்கள் புகழ் ஆதி என்கிற ஆதித்யா கதாபாத்திரத்தில் நடித்த அஜய்தான் ‘ஆதியும் அந்தமும்’ படத்தின் நாயகன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு முதன்முறை வந்திருப்பதாக மேடையில் அமர்ந்திருந்த சில பிரமுகர்கள் சொன்னார்கள். ஆனால் பிரியதர்ஷன் இயக்கத்தில் 1993 இல் வெளிவந்த “கர்டிஷ் (Gardish)” எனும் ஹிந்திப் படத்தில், ஜாக்கி ஷெரோஃப் தம்பியாக நடித்திருப்பார். மும்பைவாழ் பஞ்சாபிவாலாவான அவரது பெயர் அப்பொழுது கெளரவ் கபூர். தமிழில் கூட முரளி, ரோஜா நடித்த “ஊட்டி” படத்தில் வில்லனாக 1999 இலேயே நடித்திருந்தார். படத்தின் இசையமைப்பாளர் எல்.வி.கணேசன். இவர் பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைக்காலஜிக்கல் த்ரில்லர்’ படம் என்பதால், படத்தின் பின்னணி இசையும் இணைந்து படத்தில் கதை சொல்ல வேண்டும். அதை அற்புதமாகச் செய்துள்ளாராம் எல்.வி.கணேசன். இப்படம் வெளிவந்த பிறகு, எல்.வி....
“பேய் இருக்கு!!”

“பேய் இருக்கு!!”

சினிமா, திரைச் செய்தி
சத்யா நாகராஜ், S.செல்லதுரை, சாமி.P.வெங்கட், பாலாமணி ஜெயபாலன் என நான்கு நண்பர்கள். குவைத்தில் வாழும் தமிழர்கள். ஒரு தொழில் தொடங்கும் யோசனையின் முடிவாக சினிமாவைத் தேர்ந்தெடுத்தனர். புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரணும் என்ற முடிவுடன், “வரம் கிரியேஷன்ஸ்” என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். சென்னையில் இருக்கும் பழம்பெரும் இயக்குநரான ஏ.கே.வேலனின் மகன் A.K.V.கலைஞானியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லியுள்ளனர். பின் படத்தில் பணி புரியும் ஒவ்வொருவரையும் சல்லடை போட்டு எடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு 60 கதைகளை வாங்கி, அதை பலதரப்பட்ட பின்னணியுடையடவர்களுக்கு மின்னஞ்சல் செய்து, அந்த ரிசல்ட்டின் அடிப்படையில் “இருக்கு ஆனா இல்ல” படத்தின் இயக்குநர் கே.எம்.சரவணனைத் தேர்வு செய்துள்ளனர். 100 பேர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாயகி மனிஷா. ஐ.டி. துறையில் வேலை செய்யும் ஷமீரையும் அப்பட...