32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 255 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 255)
முப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம் சினிமா

முப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம்

முப்பொழுதும் உன் கற்பனைகள் – படத்தின் கதை சுருக்கம் தலைப்பினுள்ளேயே அடங்கி விடுகிறது.திருவலஞ்சுழி என்னும் ஊரில் பிறக்கும் ராம் என்பவன் தன் சிறு வயதிலேயே தந்தையை இழந்து, அவனது அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறான். சென்னையில் வேலைக் கிடைத்து, மென்பொருள் போட்டிக்காக பெங்களூரு செல்கிறான். அங்கே சாருவை சந்திக்கிறான். தாயின் இறப்பில் மனமுடையும் ராமை தேற்றுகிறாள் சாரு. மெல்ல சாருவின் மீது காதல் வயப்படுகிறான் ராம். சாருவை இருவர் கடத்தி விடுவதாக நினைக்கிறான். அவர்களிடம் இருந்து சாரு தப்பித்து […]

20/02/2012 admin
தோனி விமர்சனம் சினிமா

தோனி விமர்சனம்

பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் படமிது. ‘டூயட் மூவிஸ்’ எனற அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வரும் பொழுது Celebrating Cinema என்ற பதமும் தோன்றுகிறது. ஏனைய படங்களுடன் ஒப்பிடுகையில் அது உண்மை தானெனப்படுகிறது. 100% தேர்ச்சிக் கணக்கிற்காக மாணவர்கள் மற்றும் அவரது  பெற்றோர்கள் மீது பள்ளி நிர்வாகம் தரும் அழுத்தத்தைப் பற்றிப் பதிந்துள்ளது இப்படம். இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் கூடுதல் பலம். வெங்கட்ரமண சுப்ரமணியன் பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு வாங்காமல் பணி புரியும் […]

16/02/2012 admin
மெரினா விமர்சனம் சினிமா

மெரினா விமர்சனம்

மெரினா – மெரினா கடற்கரை சென்னையின் அடையாளங்களில் ஒன்று. அந்தக் கடற்கரையில் சுண்டல், சங்கு இத்யாதிகள் விற்கும் சிறுவர்கள், யாசகம் பெறும் ஒரு பெரியவர், குதிரையை சவாரிக்கு விட்டு சம்பாதிக்கும் ஒரு ஆள், தன் மகளை ஆட விட்டு பாடல் பாடிப் பிழைப்பவர், தபால்காரர், பொழுதுபோக்க வரும் சில காதல் இணைகள் குறித்த படமாக ‘மெரினா’ உள்ளது. தந்தை, தாய் இறந்ததும் அம்பிகாபதியை அவனது சிற்றப்பா ‘டாஸ்மாக்’கில் வேலையில் சேர்த்து விடுகிறார். அங்கு வேலை செய்யப் பிடிக்காமல் […]

04/02/2012 admin
நண்பன் விமர்சனம் சினிமா

நண்பன் விமர்சனம்

நண்பன் – எந்திரன் என்னும் மிகப் பெரிய முதலீட்டுப் படத்திற்குப் பிறகு.. அமீர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படத்தை அப்படியே சிந்தாமல், சிதறாமல் எடுத்து தமிழ்ப்பட பார்வையாளர்களுக்கு அளித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.  இளைய தளபதி விஜய்யுடன் ஷங்கர் இணையும் முதல் படம் இது. ஷங்கர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொசக்சி பசபுகழ் என்பவர் பஞ்சவன் பாரிவேந்தன் என்பவருக்கு பதிலாக ‘ஐ.இ.சி.’ என்னும் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படிக்கிறார். குருட்டாம்போக்காக மனனம் […]

27/01/2012 admin
வேட்டை விமர்சனம் சினிமா

வேட்டை விமர்சனம்

வேட்டை – இயக்குநர் லிங்குசாமியின் படம்.ஓர் ஊரில் பாசமிகு அண்ணன் தம்பி உள்ளனர். அண்ணன் பயங்கொள்ளியாகவும், தம்பி அதற்கு எதிர்மாறாகவும் உள்ளான். காவல் துறை அதிகாரியான அவர்களது தந்தை வேலையில் உள்ள பொழுதே இறப்பதால் அவரின் மூத்த மகனுக்கு அந்தப் பணி கிடைக்கிறது. அண்ணனின் பயத்தைப் போக்க வெளியில் இருந்து உதவி வருகிறான் தம்பி. இதை அவ்வூர் தாதாக்கள் தெரிந்துக் கொள்கின்றனர். பிறகு என்னாகிறது என்பதுடன் படம் சுபமாய் நிறைவுறுகிறது. குலவிச்சை கல்லாமல் பாகற் படும் என்ற […]

15/01/2012 admin
ராஜபாட்டை விமர்சனம் சினிமா

ராஜபாட்டை விமர்சனம்

  ராஜபாட்டை – அரசர் செல்வதற்கான அகன்ற பாதை அல்லது நேர்முறையான வழி. படத்திற்கும், தலைப்பிற்கும் எந்தளவு தொடர்பு இருக்கும் என சரியாக ஊகிக்க முடியவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர் தன் வெளிநாட்டு ஜீப்பில் செல்லும் சாலைகளைக் குறிக்கலாம் அல்லது நாயகன் தங்கி இருக்கும் விடுதிக்கு செல்லும் சாலையைக் குறிக்கலாம். ஆனால் கண்டிப்பாக நேர்முறையான வழி என்ற பொருள் வருமாறு தலைப்பு வைக்கப்பட்டிருக்காது என்பது மட்டும் திண்ணம். அனல் முருகன் இரண்டாம் வரிசையில் நிற்கும் ஸ்டன்ட் […]

24/12/2011 admin
ஷட்டர்(2008) – தீராத காதல் அயல் சினிமா

ஷட்டர்(2008) – தீராத காதல்

உலகம் முழுவதும் பேய்கள் பற்றியப் பார்வை பெரும்பாலும் ஒரே மாதிரியே இருந்து வருகின்றன. தீராத ஏக்கங்களுடன் தற்கொலை செய்துக் கொண்டாலோ அல்லது அசாம்பாவிதங்களால் நிகழும் துர்மரணங்களாலோ தான் உயிர் பிரிந்தவுடன் ஆவியாக அலைய நேருகிறது. ஆனால் உலகில் உலவும் 90% சதவிகித பேய்கள் பெண்களாகவே பதியப்பட்டுள்ளது. திரைப்படத்தில் வரும் பேய்களும் அதிகபட்சமாக பெண்களாகவே உள்ளனர். இந்த விஷயத்தில் உலகத் திரைப்படங்களுக்குள் தான் எத்தனை ஒற்றுமை!? இதற்கு என்னக் காரணமாக இருக்கும்? பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களின் […]

21/12/2011 Dinesh R
உச்சிதனை முகர்ந்தால் விமர்சனம் சினிமா

உச்சிதனை முகர்ந்தால் விமர்சனம்

உச்சிதனை முகர்ந்தால் – தமிழகத்தில் தஞ்சம் புகும் ஈழத்துச் சிறுமி பற்றிய நெகிழ்வான படம். புனிதா என்றழைக்கப்படும் புனிதவதியின் வயது 13. அவளின் சொந்த ஊர் கிழக்கிலங்கையின் முக்கிய நகரங்களில்(!?) ஒன்றான மட்டக்களப்பு.  சிங்கள இராணுவத்தினரால் களவியல் வன்முறைக்கு ஆளாகி கர்ப்பமுறுகிறார். இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பகிரங்கமாக பேசி சிறைச் செல்லும் பேராசிரியர் நடேசனும் அவரது மனைவி நிர்மலாவும், கள்ளப் படகில் வந்து சேரும் புனிதவதி மற்றும் அவரது தாயாருக்கு அடைக்கலம் அளிக்கின்றனர். தன் கணவர் […]

20/12/2011 admin
மெளனகுரு விமர்சனம் சினிமா

மெளனகுரு விமர்சனம்

  மெளனகரு – ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்கள் மத்தியில் வந்துள்ள நல்லதொரு மாற்றுப் படம். பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு கொலை செய்கிறார் காவல் துறை உதவி ஆணையர். அவருக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உதவி செய்கின்றனர். பின் அந்தத் தவறை மறைக்க அவர்கள் மேலும் தவறுகள் செய்ய வேண்டி வருகிறது. இவர்களிடம் கருணாகரன் என்னும் கல்லூரி மாணவன் சந்தர்ப்ப வசத்தால் சிக்கிக் கொண்டு அல்லாடுகிறான். கருணாகரனின் எதிர்காலம் என்ன ஆனது என்பதற்கும், தவறிழைக்கும் […]

17/12/2011 admin
மம்பட்டியான் விமர்சனம் சினிமா

மம்பட்டியான் விமர்சனம்

மம்பட்டியான் – 1983ல் தான் நடித்து வெற்றிப் பெற்ற படத்தை தற்போது தன் மகன் ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த்தை நடிக்க வைத்து தயாரித்து இயக்கி உள்ளார் தியாகராஜன். இந்தப் படத்தின் நாயகன் பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு அளிக்கும் உத்தம தமிழ் ராபின்கூட். சின்னசாமியையும், அவரது மனைவியையும் பெரியப் பண்ணையின் அடியாட்கள் வைத்து அடித்து எரித்து விடுகிறார். சின்னசாமியின் மகன் வீறு கொண்டு பெரியப் பண்ணையையும் அவருடன் இருக்கும் ஏழு பேரையும் கொன்று விடுகிறார். கத்தி எடுத்தது […]

16/12/2011 admin
ஒஸ்தி விமர்சனம் சினிமா

ஒஸ்தி விமர்சனம்

ஒஸ்தி – மேன்மை. மேதகு குணம் கொண்டவனாக நாயகன் இருப்பான் என தலைப்பைக் கண்டு யூகிக்கலாம். ஆனால் காவல்துறை அதிகாரியாக வரும் நாயகனின் காக்கிச் சட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் பெயர்த் தகட்டிலேயே அவரது பெயர் “ஓஸ்தி வேலன்” ஆக உள்ளது. நாயகன் பாலனாக இருக்கும் பொழுது அவனது தாய் மறுமணம் புரிந்துக் கொள்கிறார். சிறு வயது முதலே மாற்றாந்தகப்பனுடனும், அவர் மூலமாக பிறந்த தன் தம்பியிடமும் நாயகன் பகைமைப் பாராட்டி வருகிறான். நாயகனின் காளை பருவத்தில் அவனது தாய் […]

09/12/2011 admin
போராளி விமர்சனம் சினிமா

போராளி விமர்சனம்

போராளி – தனக்குள் மிருகங்களைப் மறைத்தவாறு போலியான முகங்களோடு சில மனிதர்கள் வாழ்கிறார்கள். அத்தகைய மிருக மனிதர்கள் மத்தியில் வாழும் ஒவ்வொருவருமே போராளி தானென்று படம் தொடங்குகிறது.  தந்தையின் இரண்டாம் மனைவி மற்றும் அவள் தம்பி் என உறவினர்கள் சேர்ந்து அதி புத்திசாலி பள்ளி மாணவனான குமரனைப் படிக்க அனுப்பாமலும், எவருடனும் பழக விடாமலும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். குமரனினுடைய பெரியப்பாவின் நண்பரும் அவர் மகளும், குமரனுக்குச் செய்யப்பட்ட கொடுமைகளை எடுத்துச் சொல்கின்றனர். சொத்துக்கள் குமரன் […]

01/12/2011 admin
மயக்கம் என்ன விமர்சனம் சினிமா

மயக்கம் என்ன விமர்சனம்

மயக்கம் என்ன – கலக்கத்திலோ, குழப்பத்திலோ, உணர்வுநிலைத் தடுமாற்றத்திலோ உள்ளவரைப் பார்த்து வாஞ்சையுடன் கேட்கப்படும் அன்பாக  தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.வனவிலங்கு புகைப்படக்காரர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் உள்ளவர் கார்த்திக் சுவாமிநாதன். கார்த்திக்கின் நெருங்கிய நண்பனான சுந்தர், யாமினி என்னும் பெண்ணை அவனது நட்பு வட்டத்திடம் தன் தோழியாக அறிமுகப்படுத்துகிறான். யாமினிக்கு கார்த்திக்கைப் பிடிக்கத் தொடங்குகிறது. நண்பனின் தோழி என கார்த்திக் விலகப் பார்த்தாலும் இயற்கையின் வேதியியலில் இருந்து தப்ப இயலாமல் யாமினியிடம் காதல் வயப்படுகிறான். சுந்தருக்கு […]

29/11/2011 admin
பாலை விமர்சனம் சினிமா

பாலை விமர்சனம்

பாலை – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டின் வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படம் என்று பெருத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கினாராம் இப்படத்தின் இயக்குனர் ம.செந்தமிழன்.முல்லை நிலப்பகுதியான ஆயக்குடி (ஆயர்க்குடி) -யில் வாழும் தமிழர்களை வடக்கில் இருந்து வரும் தமிழறியா வந்தேறிகள் பாலை நிலப்பகுதிக்கு துரத்தி விட்டு விடுகின்றனர். முல்லைக்கொடி என தற்காலிக தங்குமிடத்திற்கு பெயர் வைத்துக் கொண்டு வாழுகின்றனர் தமிழர்கள். பாலை […]

28/11/2011 admin
தம்பி வெட்டோத்தி சுந்தரம் விமர்சனம் சினிமா

தம்பி வெட்டோத்தி சுந்தரம் விமர்சனம்

தம்பி வெட்டோத்தி சுந்தரம் – உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்கிறது படத்தின் சுவரொட்டி. ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் படித்தவர்கள் சதவிகிதம் அதிகம்; அதே போல் குற்ற எண்ணிக்கைகளின் அளவும் அதிகம்’ என ஓர் ஆய்வு குறிப்பிடுவதாக சொல்லும் இயக்குனர் வி.சி.வடிவுடையானின் சொந்த மாவட்டமும் அஃதே. எம்.ஏ., பி.எட். படித்த சுந்தரத்திற்கு ‘வெட்டோத்தி இல்ல’த்தை மட்டும் விட்டுவிட்டு அவனின் பெற்றோர் காலமாகின்றனர். அரசு வேலைக்கென்றே காத்திருக்கும் சுந்தரம், தன் வீட்டை வங்கி ஏலத்திற்கு விடாமல் […]

16/11/2011 admin