சினிமாஹரிதாஸ் விமர்சனம்
ஆட்டிசம் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே!! ஆட்டிச குறைபாடுள்ள சிறுவனுக்கும், அச்சிறுவனுக்கு உறுதுணையாக இருக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பே படத்தின் கதை. ஹரிதாஸ் என்னும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனாக ப்ருத்விராஜ் தாஸ் நடித்துள்ளான். படத்தில் அவன் பேசும் ஒரே வார்த்தை ‘அப்பா’. கேமிரா பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஆட்டிசம் என்னும் குறைபாடுள்ள சிறுவனாகவே படத்தில் வாழ்ந்துள்ளான் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் விசேடத்தன்மைக்கு முழுப் பொறுப்பு.. இந்த சிறுவனும் அவனது நடிப்பும் […]















