
தண்டேல் விமர்சனம்
தண்டேல் என்றால் தலைவர் எனப் பொருள்.ஆந்திராவின் மச்சதேசம் எனும் மீனவக் கிராமத்தில் இருந்து 22 பேர் குஜராத் சென்று மீன் பிடிக்கின்றனர். எல்லையைத் தாண்டிவிட்டார்கள் என பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து விடுகிறது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வலுவான காதல் கதையைத் தந்துள்ளார் இயக்குநர் சந்து மொண்டேட்டி.அமரன் படத்தில் ஒரு இராணுவ வீரிரன் காதல் மனைவியாக நடித்து, அந்தப் பாத்திரதிற்கு உயிர் கொடுத்தாரோ, அப்படி தண்டேல் படத்தில், ஒரு மீனவக் கிராமப் பெண்ணாக நடித்து தண்டேல்க்கு உயிர் கொடுத்துள்ளார். தன் பேச்சைக் கேட்காமல், நாயகன் மீன் பிடிக்கச் சென்று விடுகிறான் என்ற சாய் பல்லவியின் ஏமாற்றத்தில் இருந்து படம் தொடங்குகிறது. பத்தின் முதற்பாதி, சாய் பல்லவியின் கோணத்தில் இருந்தே பயணிக்கிறது. இரண்டாம் பாதியில், பாகிஸ்டான் சிறையில் நடக்கும் சம்பவங்களால் அமைந்துள்ளது.பான்-இ...