32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 256 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 256)
ஏழாம் அறிவு விமர்சனம் சினிமா

ஏழாம் அறிவு விமர்சனம்

ஏழாம் அறிவு– ஆறு வருடங்களுக்குப் பிறகு தமிழில் படம் இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். கஜினி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைகிறார்; கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் என்று எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு வளர்த்து, கர வருடத்தின் ஐப்பசி 9ஆம் தேதி அன்று வந்த தீபாவளி திருநாளில் வெளியிடப்பட்டது. ஆறாவது அறிவினும் உயர்ந்த அறிவு என தலைப்பைப் பொருள் கொள்ளலாம். தனது குருமாதாவால் பணிக்கப்படும் போதி தர்மர் சைனாவில் பரவும் தொற்று நோயைத் தடுக்க பல்லவ நாட்டின் தலைநகரமான […]

04/11/2011 admin
வேலாயுதம் விமர்சனம் சினிமா

வேலாயுதம் விமர்சனம்

வேலாயுதம் – நவீனத்துவத்தால் சோடைப் போயிருக்கும் தமிழ்க் கலாச்சாரம், வீரம் மற்றும் இன்னபிற போன்றவைகளைத் தட்டி எழுப்பும் ஓர் உன்னத திரை முயற்சி.  குறியீடான படத்தின் தலைப்பில் இருந்தே அதை உணரலாம். வேல் பண்டையத் தமிழர்களின் ஆயுதம். வேலாயுதன் என்பது முருகனைக் குறிக்கும். முருகன் தமிழ்க் கடவுள்; வேலாயுதம் தமிழ்ப் படம். ஒவ்வொருவருக்கு உள்ளும் வேலாயுதம்(கடவுள்) வீற்றிருக்கிறார் என்ற வேதாந்த சாரத்தினை படத்தின் இறுதியில் நாயகனின் வசனமாக வைத்து மக்களை விழிப்புற செய்கிறார்கள். பவுனூர் என்னும் கிராமத்தில் […]

30/10/2011 admin
சதுரங்கம் விமர்சனம் சினிமா

சதுரங்கம் விமர்சனம்

  சதுரங்கம் – அதிசயமாய் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. கோ படத்தின் பரவலான வெற்றி காரணமாக இருக்கலாம். ‘திசைகள்’ என்னும் வாரயிதழில் வேலை செய்யும் திருப்பதிசாமி, சமூக அவலங்களை தன் எழுத்தின் மூலம் வெளிக் கொணருபவர். உண்மைகளை பகிரங்கமாக எழுதும் நேர்மையாளனுக்கு ஏற்படக் கூடிய சங்கடங்கள் திருப்பதிசாமிக்கு எழுகிறது. அச்சங்கடங்களில் இருந்து திருப்பதிசாமி எப்படித் தப்பினார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது. ஸ்ரீகாந்த நாயகனாக. 2006ல் வர வேண்டிய படம். துரோகி(2010) படத்திற்குப் பிறகு வெளியாகி உள்ளது. […]

08/10/2011 admin
மங்காத்தா விமர்சனம் சினிமா

மங்காத்தா விமர்சனம்

மங்காத்தா – வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜீத்தின் 50வது படம் என்ற ஒன்றே படத்தின் எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற செய்தது. அந்த எதிர்ப்பார்ப்பை வீண் செய்யாமல் படு அமர்க்களமாய் திரையரங்கைக் கலக்கி வருகிறது மங்காத்தா. தற்காலிக வேலை நீக்கத்தில் உள்ள காவல் துறை அதிகாரி விநாயக், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுக செட்டியாரிடமிருந்து பெரும் தொகையை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அதே திட்டத்துடன் இருக்கும் நான்கு இளைஞர்களுடன் கூட்டு சேர்ந்து, ஆறுமுக செட்டியாரிடமிருந்து கொள்ளையடிக்கிறார். கொள்ளையடித்த பணம் […]

07/09/2011 admin
தெய்வத்திருமகள் விமர்சனம் சினிமா

தெய்வத்திருமகள் விமர்சனம்

தெய்வத்திருமகள் – பாரதி கண்ட புதுமை இயக்குனராக ஏ.எல்.விஜய் உருவாகி உள்ளார். பிற மொழிகளில் உள்ள நல்லப் படைப்புகளை தமிழில் கொணர்ந்து வருகிறார். அதற்காக வருடக் கணக்கில் மெனக்கெடுகிறார் என்பது அவரது பேட்டியில் இருந்து தெரிய வருகிறது. “ஐ ஆம் சாம்” என்ற ஆங்கிலப் படத்தின் தழுவி, ஆறு வயது தந்தைக்கும் ஐந்து வயது மகளுக்கும் இடையேயான நேசத்தைச் சித்திரிக்கும் அற்புதமான படத்தினைத் தந்துள்ளார் இயக்குனர். ஆறு வயதிலேயே மனவளர்ச்சி நின்று விடும் கிருஷ்ணாவை சமூக சேவகி […]

30/07/2011 admin
காஞ்சனா விமர்சனம் சினிமா

காஞ்சனா விமர்சனம்

  காஞ்சனா – முனி படம் பெற்ற வரவேற்பை நம்பி தைரியமாக களம் இறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். தர்க்கத்திற்கே இடமில்லா கற்பனை என முன்னறிவிப்போடு படம் தொடங்குகிறது. கதை, நாயகன் ராகவா லாரன்ஸ், நாயகனின் தாய் கோவை சரளா தவிர முந்தைய படமான ‘முனி’க்கும், காஞ்சனாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பகலில் எதற்கும் அஞ்சாதவனாகவும், இரவானால் பேயிற்கு மட்டும் பயப்படுவனாக ராகவா. கிரிக்கெட் விளையாட மைதானம் கிடைக்காமல் நண்பர்களுடன் காலி மனைக்கு விளையாட செல்லும் இடத்தில் இருந்து ஸ்டம்ப்பில் […]

27/07/2011 admin
அழகர்சாமியின் குதிரை விமர்சனம் சினிமா

அழகர்சாமியின் குதிரை விமர்சனம்

அழகர்சாமியின் குதிரை – இலக்கியத்தை திரைப்படமாக்கும் முயற்சிகள் தமிழில் அவ்வப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. தமிழில் அத்தகைய முயற்சியில் தேர்ந்த வெற்றியை ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் பெற்றது. தங்கர்பச்சானும் தனது படைப்பான ‘ஒன்பது ரூபாய் நோட்’டை திரைப்படமாக இயக்கியுள்ளார். அந்த முயற்சியின் சமீபத்திய நீட்சியாக பாஸ்கர் சக்தி அவர்களின் சிறுகதையான ‘அழகர்சாமியின் குதிரை’யை இயக்குநர் சுசீந்திரன் படமாக உருமாற்றியுள்ளார். ஊரை ரட்சிக்கும் அழகர்சாமிக்கு, திருவிழா எடுத்தால் மட்டுமே மழை பெய்யும் என நம்புகின்றனர் மல்லையாபுரத்து மக்கள். ஆனால் ஊர் […]

22/05/2011 admin
கோ விமர்சனம் சினிமா

கோ விமர்சனம்

கோ – ஒழுங்குப்படுத்து, ஒன்றுசேர், எதிர் (oppose), தலைவன் என திரைப்படத்தின் தலைப்பினை பல அர்த்தங்களோடு பொருத்திப் பார்க்கலாம். மக்களுக்கு ஆரோக்கியமான அரசாங்கத்தை அளிப்பதாக அதகளப்படும் அரசியலுக்குள் வசந்தன் என்னும் பட்டதாரி இளைஞனின் ‘சிறகுகள்’ அமைப்பு களமிறங்குகிறது. அதைத் தொடர்ந்து ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களோடு படம் நிறைவுறுகிறது. வசந்தனாக அஜ்மல். அரசியலில் ஒரு கட்டாய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற உத்வேகம் கொண்ட படித்த இளைஞனாக வருகிறார். ஆடம்பர விழாக்களில் செலவிடப்படும் பணத்தில் ஆயிரம் குழந்தைகளைப் […]

25/04/2011 admin
பொன்னர் சங்கர் விமர்சனம் சினிமா

பொன்னர் சங்கர் விமர்சனம்

பொன்னர் சங்கர் – கலைஞரின் கைவண்ணத்தில் அண்ணன்மார் கதை. கொங்கு நாட்டின் செவி வழி கதைகளால் உந்தப்பட்டு, அதைப் பற்றி மேலும் தேடிப் பிடித்துப் படித்து கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பொன்னர் சங்கர் என்னும் வரலாற்று காவியம் இயக்குநர் தியாகராஜனால் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. நிச்சயிக்கப்பட்ட மாந்தியப்பன் என்பவரை மறுத்து தன் மனதிற்கு உகந்த மணாளான அப்பாவி நெல்லியன் கோடனை மணக்கிறார் தாமரை நாச்சியார். அதனால் சினமுறும் தாமரையின் மூத்த சகோதரனான சின்னமலை கொழுந்து, தங்கையை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான். […]

12/04/2011 admin
ஆடுகளம் விமர்சனம் சினிமா

ஆடுகளம் விமர்சனம்

ஆடுகளம் – விளையாடுபவர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள், நடுவர்கள், ரசிகர்கள், ஆடுகளத்தினைப் பராமரிப்பவர்கள் என ஆடுகளம் வகை வகையான மனிதர்களை எப்பொழுதுமே  தன்னுடன் வைத்திருக்கும். அதனாலேயே ஆடுகளத்தின் ஆரவாரத்தினை, ஆளரவமற்ற இரவிலும் உணர முடியும். காரணம் மனிதர்கள் அனைவரும் சதா விளையாடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆடுகளங்கள் தான் ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. வெற்றிமாறன் சேவல் சண்டை நடக்கும் திடல், அத்திடலில் உள்ள மனிதர்களின் மனம் என இரண்டு ஆடுகளத்தினைத் தனது படத்தில் காட்டியுள்ளார். பேட்டைக்காரர் தயார்ப்படுத்தும் சேவல்களும், […]

20/01/2011 admin
மன்மதன் அம்பு விமர்சனம் சினிமா

மன்மதன் அம்பு விமர்சனம்

மன்மதன் அம்பு – தசாவதாரத்தினைத் தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் உலக நாயகன் கூட்டணியில் வெளிவரும் படம். யாவரும் கேளிர், காருண்யம் என தொடங்கி, படத்தின் பிரதான பாத்திரங்களான மூவரின் பெயர்களில் இருந்து மன், மதன், அம்பு என்பதை எடுத்துக் கோர்த்து தலைப்பாக்கி உள்ளனர். கோடீஸ்வரரான மதனகோபால் விடுமுறைக்கு செல்லும் தனது காதலியான அம்புஜாக்ஷியைக் கண்காணிக்க மேஜர் இராஜ மன்னாரை நியமிக்கிறார். சந்தேகிக்கும் மதனகோபாலுடனான காதலை அம்புஜாக்ஷி ஏற்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. […]

29/12/2010 Dinesh R
ப்ரெடேட்டர்ஸ் அயல் சினிமா

ப்ரெடேட்டர்ஸ்

திடீரென வானத்தில் இருந்து மயக்கமுற்ற மனிதர்கள் தரை நோக்கி வீசப்படுகின்றனர். தரை தட்டும் முன் விழிப்படைவர்கள் அவசர அவசரமாக ‘பாராச்சூட்’டினை இயக்கி காட்டினுள் இறங்குகின்றனர். அவர்கள் மொத்தம் 8 பேர். அந்த காட்டில் இருந்து வெளியேற ஏதேனும் வழி உள்ளதா என தேடி மலை உச்சியினை அடைகின்றனர். அங்கு அவர்கள் காணும் காட்சி அவர்களை உறைய வைக்கிறது. அவர்கள் வெறொரு கிரகத்தில் உள்ளனர். விசித்திர மிருகக் கூட்டம் ஒன்றால் தாக்கப்படுகின்றனர். அந்த கிரகத்தில் வேட்டையாடப் படுவதற்காக வரவழைக்கப் […]

01/11/2010 Dinesh R
எந்திரன் விமர்சனம் சினிமா

எந்திரன் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர் என கடந்த இரண்டு வருடமாக எதிர்பார்ப்பை எகிற வைத்த படம். வசீகரன் என்னும் விஞ்ஞானி பத்து வருடம் முயன்று ‘சிட்டி’ என்னும் அன்ட்ரோ- ஹியூமனாய்ட் வகை ரோபோவை இந்திய இராணுவத்திற்கு சேவை செய்ய வைக்கும் நோக்கில் தயாரிக்கிறார். பார்ப்பதற்கு மனிதனை போலவே இருக்கும் அந்த வகை ரோபோக்கள் அதற்கு கொடுக்கும் கட்டளைகள் சிரமேற் கொண்டு, அப்படியே செய்யும் அடிமைகள் போன்றன. மனித உணர்ச்சிகள் பற்றிய பிரக்ஞை […]

03/10/2010 Dinesh R
ரத்த சரித்திரம் விமர்சனம் சினிமா

ரத்த சரித்திரம் விமர்சனம்

மண்ணில் குருதி படாமல் எந்த சரித்திரமும் முழுமை அடைவதில்லை. எல்லைகளை விரிவுபடுத்துதல், இளைத்தவர்களை ஏய்த்தல், தலைமைப் பதவிக்கு விழைதல், ஆளைத் திணறடிக்கும் அழகியப் பெண்களிடம் மயங்குதல் என ஒவ்வொரு சரித்திரத்திற்குப் பின்னும், தனி மனிதன் ஒருவனின் ஆழ்ந்த அக வேட்கையே அடிநாதமாக இருக்கும். நட்பு, துரோகம், காதல், சூழ்ச்சி போன்ற சகல தந்திரங்களையும் கையாண்டு அவ்வேட்கையை தணித்துக் கொள்ள முயலும் பொழுது அடுத்த தலைமுறையினர்களுக்கு ஒரு படிப்பினையாக சரித்திரம் அங்கே உருவாகிறது. அப்படி ஐந்தாண்டுகளுக்கு (2005) முன் […]

12/08/2010 Dinesh R
இரத்த வைரம் அயல் சினிமா

இரத்த வைரம்

ப்ளட் டைமன்ட் – சியாரா லியோன் என்னும் கடலோர ஆஃப்ரிக்கா நாட்டில் நடந்த 11 வருட உள்நாட்டுப் போரை (1991- 2002) அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். போரினால் ஏற்படக்கூடிய அனைத்து வித அக்கிரமங்களையும் தன் சமீபத்திய வரலாற்றில் பதிந்துள்ளது சியாரா லியோன். மேலோட்டமாக பார்த்தால் புரட்சிக்காரர்களுக்கும் அந்நாட்டு அரசிற்கும் நடக்கும் உள்நாட்டுப் போராக தெரிந்தாலும், அதன் பின்னால் உள்ள பலமான அரசியலில் அந்நாட்டில் கிடைக்கக் கூடிய வளமான கனிம வளங்களே அனைத்திற்கும் காரணமாய் உள்ளது. அதில் […]

10/06/2010 Dinesh R