Shadow

Tag: ஜெகன்

தங்கையின் கனவு நனவானது – நடிகர் சூர்யா

தங்கையின் கனவு நனவானது – நடிகர் சூர்யா

சினிமா, திரைத் துளி
நடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா, மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் பாடகராக அறிமுகமாகியுள்ளார். “என் தங்கை பிருந்தாவுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே பாடகி ஆவது கனவு. எங்கள் குடும்பத்தில் நான், கார்த்தி யாருமே சிபாரிசில் எதுவும் செய்ததில்லை. பிருந்தாவும் அவள் முயற்சியால் மட்டுமே இன்று பாடகி ஆகியிருக்கிறாள். என்னை இயக்குநர் வசந்த் அழைத்து ‘நேருக்கு நேர்’ படத்தில் நடிக்க வைத்தார். தம்பியை ஞானவேல்ராஜா தான், ‘நான் பார்த்துக்கிறேன்’ எனச் சொல்லி நாயகன் ஆக்கினார். அதே போல், பிருந்தாவிற்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார். அவர் எங்கப்பாக்கு மூத்த மகன் போல். அவருக்கு மிகவும் நன்றி” என்றார் நடிகர் சூர்யா. “அந்தக் குடும்பத்தில் இருந்து இலட்சுமி சிவகுமாரும், ரஞ்சனி கார்த்தி, இரண்டு பேரும் தான் திரைத்துறைக்கு இன்னும் வரவில்லை. மற்றவர்கள் அனைவரும் வந்துட்டாங்க” என்றார் மிஸ்டர்...
பிரம்மா.காம் விமர்சனம்

பிரம்மா.காம் விமர்சனம்

இசை விமர்சனம், சினிமா
பிரம்மா என்பது நேரடியாகப் படைக்கும் கடவுளையும், டாட் காம் என்பது தற்கால டிஜிட்டல் உலகத்தைக் குறிக்க உதவும் குறியீட்டுச் சொல்லாகவும் தலைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாமம் போட்ட என்.டி.ஆரில் இருந்து படம் தொடங்குகிறது. ஆனால், படத்தில் லாஜிக் இல்லா மேஜிக்கைச் செய்வது சிவன் கோயிலில் தனி சன்னிதி அமையப் பெற்ற கடவுள் பிரம்மா தான். சிவன் அவரது தலையைக் கிள்ளி நான்முகனாக மாற்றிய பின், ‘நமக்கெதுக்கு வம்பு?’ எனப் புராணங்களிலேயே ஓரமாகத்தான் தள்ளி இருப்பார். ஆனால் இப்படத்தில் கலக்கலாய் திருவிளையாடல் புரிகிறார். காமேஸ்வரனுக்கு தான் ராமேஸ்வரனை விட எல்லா விதத்திலும் பெஸ்ட் என்பது எண்ணம். ஆனால், அனைவரையும் படைத்த பிரம்மன் சிலரிடம் ஓர வஞ்சனையாக நடந்து கொள்வதாகக் காமேஸ்வரன் கருத, பிரம்மன் காமேஸ்வரனின் விருப்பத்தைப் பூர்த்திச் செய்கிறார். பின் காமேஸ்வரனின் வாழ்க்கை என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ராமேஷ...
பயமா இருக்கு விமர்சனம்

பயமா இருக்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேயென்றால் ஜெய்க்கு பயம். ஆனால், அவன் மனைவி லேகாவே பேய் தானெனத் தெரிய வருகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமான சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் ஜெய்யாகப் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஜெய்யின் மனைவி கர்ப்பமாக உள்ள சமயத்தில், மனைவியின் அம்மா உதவியாக இருப்பாரென அவரைத் தேடி இலங்கைக்குப் பயணமாகிறான் ஜெய். ‘பயமா இருக்கு’ என்ற தலைப்புப் போடப்பட்ட பின், படம் இலங்கையில் தான் தொடங்குகிறது. சின்ன அத்தியாயமாக அது இருந்தாலும், மனதில் இனம் புரியாத ஓர் அச்சம் கவ்வுவதைத் தவிர்க்க முடியவில்லை. அங்குள்ள குழப்பமான போர்ச் சூழலால், ஜெய் இந்தியா திரும்ப நான்கு மாதம் ஆகிவிடுகிறது. லேகாவாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். படத்தில் இவர் தான் பேய். ஆனால், மிஷ்கினின் ‘பிசாசு’ படத்தில் வருவது போல், தேவதை அம்சம் பொருந்திய பேய் என்பது ஆறுதலான விஷயம். படத்தின் பிரதான...
நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோபமோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ என அதீதமாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் தூங்கி விடுவார் இந்திரன். இத்தகைய, ‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட இந்திரன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான் கதை. 29 வருடங்களுக்கு முன், லக்ஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடப்பதுபோல், ரஜினியின் தங்கைக்கு நிகழும். ரஜினிக்கு தூக்கம் வராது. பின் ரஜினி சிகப்பு மனிதனாக மாறி, ராபின்-ஹூட் என மக்களால் கொண்டாடப்படுவார். தூங்கி வழியும் விஷாலோ, தன் குறைபாடுகளை மீறி சிகப்பு மனிதனாக மாறி, தன் சொந்த வெறுப்பினை மட்டும் தீர்த்துக் கொள்கிறார். அதோடு அவரது பத்தாவது ஆசையும் பூர்த்தியாகிறது. இந்திரனாக விஷால். மிக மிகத் தெளிவாக இருக்கார். மிகை ஹீரோயிசம், காமெடிக் காட்சிகளில் விஜய்யை இமிடேட் செய்வது போன்றவற்றைலாம் முற்றிலுமாக தவிர்த்து விட்டு, கதைக்குத் தக...
பட்டத்து யானை விமர்சனம்

பட்டத்து யானை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பட்டத்து யானை – அரச சின்னங்களைத் தாங்கியதும், அரசன் பவனி வரவும் அரண்மனையில் வளர்க்கப்படும் யானை. அப்படி யார் இந்தப் படத்தில் யானை என்று தெரியவில்லை.  ஐஸ்வர்யாவை வில்லன்களிடமிருந்து ஏன், எதற்கு, எப்படி சரவணா காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. சமையல்காரர் சரவணனாக விஷால். படத்தின் முதற்பாதியின் கடைசியில் அடிக்கத் தொடங்குபவர், அதன்பின் படம் முடியும் வரை அனைவரையும் சகட்டுமேனிக்கு பறக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். டி.வி.எஸ். 50, கோயில் உண்டியல், பெரிய இரும்பு ஜல்லிக் கரண்டி, சோடா பாட்டில், பீர் பாட்டில் என ஒருமுறை உபயோகித்த ஆயுதத்தை மறுமுறை உபயோகிக்க மாட்டேங்கிறார். எத்தனையோ பேருடன் எவ்வளவோ சண்டைப் போட்டாலும்.. சட்டை கிழிந்து விடாமல் அலேக்காக வில்லன்களை துவம்சம் செய்யும் மாபெரும் சண்டக்கோழியாக உள்ளார். ஒரு துளி ரத்தம் சிந்தாமல், அனைவரையும் இரத்தக்களறியாக்கி சிதறவிடுகிறார். பிரதான வில்லனாக்...