
“கணக்கு எப்படி இருக்க?” – உதயா உற்சாகம் | Accused movie
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான திரைப்படம் அக்யூஸ்ட் ஆகும். ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘அக்யூஸ்ட்’ படக் குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழாவினை வடபழனி பரணி ஸ்டூடியோவில் நடத்தினர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என்.பன்னீர்செல்வம், ”படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது உதயாதான். இந்தப் படத்தில் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும் உதயாவிற்கும் நன்றி. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையத் திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவ...





