32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

நாசர்

24 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 2
செய்திகள் வரிசை (பக்கம் 2)
ஓடு ராஜா ஓடு விமர்சனம் சினிமா

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

எழுத்தின் மேலுள்ள ஆர்வத்தில் வேலையை விட்டு எழுத்தாளர் ஆகிவிடுகிறான் மனோகர். நர்ஸாக வேலை புரியும் அவனது மனைவி மீரா தான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள். மனோகரிடம் பணம் கொடுத்து, செட்-டாப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்கிறாள் மீரா. தனது நண்பன் பீட்டருடன் செட்-டாப் பாக்ஸ் வாங்கக் கடைக்குப் போகும் மனோகர், ஒன்றிலிருந்து மற்றொன்றெனப் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான். அந்தச் சிக்கல்களில் இருந்து மனோகர் மீண்டு, வீட்டுக்குச் செட்-டாப் பாக்ஸ் வாங்கிக் கொண்டு போனானா என்பதுதான் படத்தின் […]

17/08/2018 Dinesh R
செட்-டாப் பாக்ஸிற்காக ஓடும் ராஜா சினிமா

செட்-டாப் பாக்ஸிற்காக ஓடும் ராஜா

கணவன், மனைவிக்கு இடையில், ஒரு ‘செட்டாப் பாக்ஸ்’ எந்த அளவுக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பது தான் ஓடு ராஜா ஓடு படத்தின் மையக்கரு. விஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். நான்கு முக்கிய கேரக்டர்கள் 24 மணி நேரத்தில் சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவையான திரைக்கதையாக்கிருக்கிறார்கள். ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரத்துக்கு ஜோடியா லக்ஷ்மி பிரியா நடித்துள்ளார். நாசர், சோனா, ஆஷிகா எனப் பெரும் நடிகர் பட்டாளமே […]

12/08/2018 Dinesh R
காளி விமர்சனம் சினிமா

காளி விமர்சனம்

ஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது கனவிற்கும், தனது சிறு வயது இந்திய வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமென அதைக் கண்டுபிடிக்க, இந்தியா வருகிறார் பரத். அவரது கனவிற்கான புதிருக்கும், கடந்த கால வாழ்க்கை பற்றிய அவரது தேடலுக்கும் விடை கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு. படத்தின் தொடக்கமே எரிச்சலூட்டுவதாய் அமைகிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் சிறுநீரகம் தரும் டோனர் (Donor), ரத்தச் சம்பந்தமுள்ள உறவாக இருக்கவேண்டுமெனச் சொல்கிறார்கள். என்ன கொடுமை […]

19/05/2018 Dinesh R
காஸி – நீர்மூழ்கி போர்க் கப்பலின் கதை சினிமா

காஸி – நீர்மூழ்கி போர்க் கப்பலின் கதை

காஸி –  ஒரு போர்க்களத் திரைப்படமாக உருவாகியுள்ளது. பிப்ரவரி மாத வெளியீடாக வரவுள்ள இப்படத்தில் ராணா டகுபதி,டாப்ஸி பன்னு, நாசர்,கே.கே.மேனன்,அதுல் குல்கர்னி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த பழம்பெரும் நடிகரான ஓம்பூரி நடித்த கடைசி திரைப்படம் இது தான் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். மிகப் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கியுள்ளார். யாராலும் வீழ்த்த முடியாத நீர் முழ்கிக் கப்பலான PNS காஸியைப் பற்றி மிக ஆழமாகப் பேசும் […]

05/02/2017 Dinesh R
குற்றமே தண்டனை விமர்சனம் சினிமா

குற்றமே தண்டனை விமர்சனம்

இரண்டு சொற்களாலான தலைப்பிலேயே படத்தின் முழுக் கதையும் சொல்லிவிட்டார் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன். படத்தில் மிகக் குறைவான கதாபாத்திரங்கள், நான்கைந்து லோக்கேஷன்கள் தான் என்றாலும் மிக நிறைவான படம். இவ்வாறான நேர்த்தியான படங்களின் வரவு அதிகமாக வேண்டும் என்ற ஆவலாதியை ஏற்படுத்துகிறது. இயக்குநர் மணிகண்டன் ஒதுங்கி நின்று நம் மனதோடு அழகாய் கண்ணாமூச்சி விளையாடுகிறார். இளம்பெண் ஒருத்தி இறந்து விடுகிறாள். அவரைக் கொன்றது யாரெனச் சொல்லாமல் நம் முடிவுக்கே படத்தின் முடிவை விட்டுவிடுகிறார். குற்றவாளி யாரெனத் […]

03/09/2016 Dinesh R
அர்த்தநாரி விமர்சனம் சினிமா

அர்த்தநாரி விமர்சனம்

இன்ஜினியரான கார்த்திக்கும், காவல்துறை உயரதிகாரியுமான சத்யப்பிரியாவும் காதலிக்கிறார்கள். சத்யப்பிரியா எடுத்து நடத்தும் ஒரு வழக்கும், தன்னை வளர்த்த செல்வமாணிக்கம் ஐயாவின் மரணத்திற்குக் காரணமானவரைத் தேடும் கார்த்தியின் தேடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. தனித்தனியாக இருவரும் இயங்கினாலும், காதலர்கள் அர்த்தநாரி போல் இணைந்து வேட்டையாடுவதாகப் பதற்றம் கொள்கிறார் வில்லன். இந்தக் கண்ணாமூச்சி வேட்டை எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. கல்வியின் அவசியமும், குழந்தைத் தொழிலாளிகளின் அவலமும் படம் நெடுகே சொல்லப்படுகிறது. […]

07/07/2016 Dinesh R
ஆண் பாதி பெண் பாதி சினிமா

ஆண் பாதி பெண் பாதி

கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் என்பவர் கதை எழுதித் தயாரிக்கும் படம் அர்த்தநாரி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரி வேந்தர் பாடல்களை வெளியிட, மைக்ரோசாஃப்ட் நிறுவன முன்னாள் தலைவர் ரங்க பாஷ்யம் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பழம்பெரும் தயாரிப்பாளர் கோவை தம்பி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள் . படத்தின் டிரைலர் ஒரு அண்டர்கவர் பெண் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளைப் பற்றியதாக இருந்தது . நாயகன் ராம்குமார் பேசும்போது, “நடிகனாவேன் என […]

05/03/2016 Dinesh R
இறுதிச்சுற்று விமர்சனம் சினிமா

இறுதிச்சுற்று விமர்சனம்

மீனவப் பெண்ணான மதியின் திறமையைக் கண்டு கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பாக்ஸிங் வெற்றியாளராக்க முயற்சி செய்கிறார் கோச் பிரபு செல்வராஜ். அம்முயற்சியில் பிரபு சந்திக்கும் சிக்கல்களும் தடைகளும் தான் படத்தின் கதை. வாவ்..  இயக்குநர் சுதா கொங்கரா அசத்தலான படத்தைக் கொடுத்துள்ளார். வேட்டை படத்துக்குப் பிறகு மீண்டும் மேடி தமிழ்ப் படம் பக்கம் திரும்பியுள்ளார். வேட்டை படத்திலிருந்ததை விட இப்படத்தில் இளைஞனாகத் தெரிகிறார் கோச் பிரபு செல்வராஜாக நடித்திருக்கும் மாதவன். ஆனால், படம் முழுவதும் […]

29/01/2016 Dinesh R
சுட்ட கதை விமர்சனம் சினிமா

சுட்ட கதை விமர்சனம்

சுட்ட கதை – முழு நீள ஃபேண்டசி தமிழ்ப்படம். ‘பாஸ்மார்க்’கில் (BOSSMARK) குடித்து விட்டு ஒருவரை ‘சுட்டு’க் கொலை செய்து விடுகிறார் கோரமலை கான்ஸ்டபிள் ராம்கி. பின் என்னானது என்பது தான் சுட்ட கதை. கான்ஸ்டபிள் ராம்கியாக பாலாஜி. அவர் அனிச்சைத் திருட்டு (Kleptomania) எனும் உளக்குறையால் பாதிக்கப்பட்டவர். இவரும் வலப்பக்க காது கேளாதவருமான கான்ஸ்டபிள் சங்கிலிராயனும் லட்சியவாதிகள். கோரமலையில் தர்மத்தை நிலைநாட்டுவது தான் அவர்களின் அந்த உயரிய லட்சியம். சிலந்தி எனும் மலைவாசிப் பெண்ணால் அவர்களின் […]

26/10/2013 admin