32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

செட்-டாப் பாக்ஸிற்காக ஓடும் ராஜா

Dinesh R சேலம் Published: 12/08/2018 1 நிமிட வாசிப்பு Updated: 16/08/2018 சினிமா
எழுத்து அளவு:

Odu-raja-odu-audio-launch

கணவன், மனைவிக்கு இடையில், ஒரு ‘செட்டாப் பாக்ஸ்’ எந்த அளவுக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பது தான் ஓடு ராஜா ஓடு படத்தின் மையக்கரு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

விஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். நான்கு முக்கிய கேரக்டர்கள் 24 மணி நேரத்தில் சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவையான திரைக்கதையாக்கிருக்கிறார்கள். ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரத்துக்கு ஜோடியா லக்ஷ்மி பிரியா நடித்துள்ளார். நாசர், சோனா, ஆஷிகா எனப் பெரும் நடிகர் பட்டாளமே உள்ளது படத்தில்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நாசர், “சமீபமா சினிமாவுக்கு வர்ற இயக்குநர்கள்லாம் நல்லா படிச்சவங்களா இருக்காங்க. அதனால நிறைய வித்தியாசமான படங்கள் வருது. அந்த மாதிரி ஒரு படம்தான் ஓடு ராஜா ஓடு.

எத்தனையோ படங்கள் நடிச்சாலும் ஒருசில படங்கள் மட்டும்தான் அதிக ஈடுபாட்டோட நடிக்கிற மாதிரி அமையும். அந்த வகையில் இந்தப் படத்தில் நான் அதிக ஈடுபாட்டோடு நடிச்சேன். படத்தலைப்பைப் போலவே, படப்பிடிப்பில் பல நாட்கள் நானும் தெருத்தெருவா ஓடினேன். இலவசமாக எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஓடினோம்”என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.