Shadow

Tag: Legend Saravanan

தி லெஜண்ட் – விமர்சனங்களைத் தகர்த்து விமரிசையான வெற்றி

தி லெஜண்ட் – விமர்சனங்களைத் தகர்த்து விமரிசையான வெற்றி

சினிமா, திரைத் துளி
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படமாகத் தயாரித்து, லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படம் ஐந்து வாரங்களைக் கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் படத்தில் நடிக்கிறார் என்றவுடன் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தையும் மீறிய ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லமால், சமூகச் சிந்தனையுடன் கூடிய கதைக்களம் கொண்ட 'தி லெஜண்ட்' படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை லெஜண்ட் சரவணன் பெற்றுள்ளார். படத்தின் கதையை மக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள். லெஜண்ட் சரவணன் முயற்சிக்கு மக்கள் வெளிப்படுத்திய அன்பு தான் இப்படத்தின் வெற்றியாகும். உலகமெங்கிலும் திரையரங்குகளில் சுமார் 45 கோடி ரூபாய் வ...
தி லெஜண்ட் விமர்சனம்

தி லெஜண்ட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமென பல படங்களைச் சொன்னாலும், உள்ளபடிக்கு அது மிகச் சில படங்களுக்கே பொருந்தும். அதிலொன்று இப்படம். காரணம், லெஜண்ட் சரவணன். தனக்குத்தானே சூடிக் கொண்ட விருப்பப் பெயரைப் படத்தின் தலைப்பாகவும் பயன்படுத்தியுள்ளார். ஒரு மாஸ் படத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் உடைய படமாக வந்துள்ளது. காமெடி, சண்டை, சென்ட்டிமென்ட், சமூக அக்கறை என ஒன்றையும் தவற விட்டுவிடக் கூடாதென கவனமாகக் கதையைக் கோர்த்துள்ளனர் இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி. உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியான சரவணன், தனது ஊர் மக்களுக்குப் பயன்படும்படி ஏதாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென பூஞ்சோலை கிராமத்திற்கு வருகிறார். வாத்து மேய்க்கும் கணிதப் பேராசிரியையான துளசி மீது கண்டதும் காதல் வருகிறது. சரவணின் நண்பன் சர்க்கரை நோயால் இறக்க, அதற்கு மருந்து கண்டுபிடிக்கத் தொடங்குகிறார் சரவணன். அதனால், சில தனிப்பட்ட இழப்புகளையும், பல ...