Shadow

Tag: Spider Man

இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன்

இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன்

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ படத்தின் ட்ரெய்லர், 9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகின்றன. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம், 10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் வரிசை படங்கள், இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் மகத்தான வெற்றியைக் கண்டது. ஸ்பைடர் மேனுக்கு நாடு முழுவதும் உள்ள தீவிரமான ரசிகர்களைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் அவரை அனைத்து இந்தியர்களுடனும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான ஒரு தனித்துவமான வழியைக் கையாண்டு, இதை ஒரு பான்-இந்தியா திரைப்படமாக விளம்பரப்படுத்தி...
ஸ்பைடர்-மேன் 2021: பல்லண்டத்தில் இருந்து வரும் சூப்பர் வில்லன்கள்

ஸ்பைடர்-மேன் 2021: பல்லண்டத்தில் இருந்து வரும் சூப்பர் வில்லன்கள்

அயல் சினிமா, திரைத் துளி
உலகமெங்கும் எதிர்பார்ப்பைக் குவித்த ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் (Spider-Man No Way Home) திரைப்படத்தின் டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முண்டியடித்ததால், திரையரங்கு இணையதளங்கள் முடங்கியது. மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (Avengers: Endgame) திரைப்படத்திற்குப் பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களைப் பித்துப்பிடித்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் திரைப்படம். உலகம் முழுதும் 2021 டிசம்பர் 17 அன்று வெளியாகும் இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பால், டிக்கெட் புக் செய்யும் இணையதளங்களே முடங்கும் நிலை உண்டாகியுள்ளது. மார்வல் திரையுலகத்தின் சூப்பர் ஹீரோ ஸ்பைடர்-மேன், மூன்றாம் பாக கதையாக உருவாகியுள்ளது இத்திரைப்படம். இப்படத்தில் டாம் ஹாலண்ட் சூப்பர் ஹிரோ ஸ்பைடர்மேனாகவும்...
சிலந்திகளுக்கு நடுங்கும் ஸ்பைடர்-மேன்

சிலந்திகளுக்கு நடுங்கும் ஸ்பைடர்-மேன்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
குடும்பம், படிப்பு, காதலி என ஒரு வட்டத்திற்குள் வாழ்க்கை நடத்தி வரும் ஓர் இளைஞன், பொதுமக்களது பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்க விழையும் அதீத சக்தி பெற்ற வில்லன், தலைதூக்க முற்படும் தருணங்களிலெல்லாம் உருமாறி, செவ்வண்ணத்தில் கட்டம் போடப்பட்ட உடையணிந்து, பொது மக்களின் பாதுகாவலனாகச் செயல்படத் தயாராகிவிடுவான்! அவன் ஸ்பைடர்மேன். ஆனால், ஸ்பைடர் மெனாக நடிக்கும் 21 வயது இளைஞனான டாம் ஹாலண்டிற்கு சிலந்திகள் என்றால் பயம். 2016இல் வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில் ஸ்பைடர்மேனாக அறிமுகமானார் டாம் ஹாலண்ட். ஜூலை 7, 2017 அன்று வெளியாகும் ‘ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்’ படத்தில் சோலா சூப்பர் ஹீரோவாகத் தோன்ற உள்ளார். அவரது வழிகாட்டியாக டோனி ஸ்டார்க் எனும் அயர்ன் மேனும் படத்தில் வருகிறார். அதைப் பற்றி அயர்ன் மேனாக நடிக்கும் ராபர்ட் டெளனி ஜூனியர், “டோனி ஸ்பைடரை நெருக்கமாகக் கண்காணித்து, அவெஞ்சர்ஸ...