32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“கஜா பேரிடரிலிருந்து மீள அனைவரும் ஒன்று சேரவேண்டும் – நடிகர் ஆதி

Dinesh R சேலம் Published: 11/12/2018 1 நிமிட வாசிப்பு சமூகம்
எழுத்து அளவு:

Aadhi at Gajaa relief

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் விவசாய மக்களுக்கு பல இளைஞர்கள் பொது சேவை மையங்கள் மூலம் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் திரு. ஆதி மற்றும் அவரின் குழு புயலால் பாதிக்கப்பட்டு, மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படாத பகுதிகளைக் கண்டடைந்து பேராவூரணி, அறந்தாங்கி பகுதியைச் சுற்றியுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 520 குடும்பங்களுக்கு, மிகவும் முறையாக அந்தந்த குடும்ப ஆவணங்களைக் கொண்டு, தற்போதைய முக்கிய தேவையான சுமார் 5டன் எடை கொண்ட பொருட்கள் – தார்பாய் – சோலார் லைட்- கொசுவலை – போர்வை – மருந்துகள்-மற்றும் உணவு பொருட்களை 1-12-2018 அன்று வழங்கினர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மேலும், “அங்கு சென்று பார்த்ததில், நினைத்ததை விட மிகப் பெரிய பேரிடருக்கும் ஆளாகியுள்ளனர் என்பது வேதனை தருகித்ச்து. இதிலிருந்து அம்மக்கள் மீளவும், விவாசாய மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பவும், அனைவரும் ஒன்று சேர்ந்து உதவி செய்ய முன்வர வேண்டும்” என்று ஆதியும், அவரது குழுவும் கேட்டுக் கொண்டனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.