
சாமானியர்களுக்கான சட்ட வகுப்பறை | புதுயுகம்
நீதிமன்றம், சட்டம், தண்டனை போன்ற வார்த்தைகள் இன்றும் பலருக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. அதோடு இன்றைய ஏஐ உலகில் நாளுக்கு நாள் சைபர் க்ரைம் குற்றங்களும், பணம் பறிக்கும் மோசடிகளும் அதிரிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மக்களுக்குச் சட்டம் பற்றி எளிமையாகச் சொல்லித் தரும் வகையில் புதுயுகத்தில் சட்டம் ஒரு வகுப்பறை எனும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
சட்டப்படி பாதுகாப்பாக இருப்பது எப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது எப்படி என்பது போன்ற சட்டம் சார்ந்த கேள்விகளுக்குப் பிரபல வழக்கறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். புதுயுகம் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது....