32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“எனக்கு 90 வயதாகிறது” – சீனிபாட்டி | பேச்சி

Dinesh R சேலம் Published: 10/08/2024 4 நிமிட வாசிப்பு Updated: 14/08/2024 சினிமா
எழுத்து அளவு:

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது 10 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் B.ராமச்சந்திரன், “பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா என்பது முதல் பட இயக்குநராக எனக்கு மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சி திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் படத்திற்கான விளம்பரத்திற்காகத்தான் என்றாலும், என்னைப் பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்குப் போடப்பட்ட காட்சி தான் எனக்கான முக்கியமான தருணம். படம் போட்ட பிறகு நான் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தேன். காரணம் நீங்கள் தான் முதல் நீதிபதி, அனைத்துப் படங்களையும் பார்த்துவிட்டு நீங்கள் தான் எப்படி இருக்கிறது என்று சொல்லப் போறீங்க. அந்த வகையில், என் படத்தைப் பார்த்துவிட்டு, “தம்பி நல்லா பண்ணியிருக்கீங்க” என்று தட்டிக்கொடுத்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது. உங்களால் தான் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது, அதனால் முதல் நன்றி உங்களுக்குத்தான்.

அறிமுக இயக்குநராக நான் எவ்வளவு பெரிய ஐடியாவை வைத்து கதை எழுதினாலும், அதைத் திரைப்படமாகத் தயாரிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய விசயம். பல படங்கள் தயாரித்து, சினிமா வியாபாரம் தெரிந்த ஒரு தயாரிப்பாளர் இந்தப் படம் நல்லா வரும் என்று முடிவு செய்து தயாரிக்கலாம். ஆனால், என்னுடன் நண்பனாகப் பழகிவிட்டு, என் மீது நம்பிக்கை வைத்து, என்னுடன் தயாரிப்பாளராகப் பயணித்த கோகுல் பினாயின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அவருக்கு எனது இரண்டாவது நன்றி. பிறகு எனது தொழில்நுட்பக் கலைஞர்கள், நான் என்ன சொல்வேன், என் சிந்தனை எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி. படத்தில் நடிகர், நடிகைகளும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். கடினமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தினாலும் எந்தவித கஷ்ட்டத்தையும் வெளிக்காட்டாமல் நான் என்ன சொன்னாலும் அதைச் செய்த பாலசரவணன், காயத்ரி ஆகியோருக்கு நன்றி. பேச்சியாக நடித்த சீனிபாட்டி இந்த வயதிலும் மலைமீது பயணித்து நடித்துக் கொடுத்தார், அவருக்கு பெரிய நன்றி. இன்று ரசிகர்கள் பேச்சி பாட்டி எங்கே என்று கேட்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு பேச்சி என்ற தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்தேன், அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பாலுமகேந்திரா சார் என்னை பாராட்டியதோடு, அவருடன் என்னை சேர்த்துக் கொண்டு எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்தார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல், வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு நான் வந்தபோது எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தாருக்கும், என்னுடன் எப்போதும் துணை நின்ற என் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பேச்சி கதாபாத்திரத்தில் நடித்த சீனிபாட்டி, “எனக்கு 90 வயதாகிறது. நான் ஏற்காடு மலையில் சிரமப்பட்டு ஏறி நடித்தேன். என்னுடன் அனைவரும் கஷ்டப்பட்டு நடித்தார்கள். இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நடிப்பேன்” என்றார்.

நடிகர் பாலசரவணன், “பேச்சி படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருந்த போது நாங்கள் எதிர்பார்த்தது, படம் டீசண்டாக இருக்கிறது என்று சொன்னால் போதும் என்பது தான். ஆனால், இன்று நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது, இதற்குக் காரணம் பத்திரிகைகள் தான். உங்கள் எழுத்துக்கள் மூலமாகவும், உங்கள் விமர்சனங்கள் மூலமாகவும் படத்தை மக்களிடம் மிகப்பெரிய அளவில் கொண்டு சேத்து உங்களுக்கும், உங்கள் விமர்சனங்கள் மூலம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த மக்களுக்கும் நன்றி. நாங்கள் பல தியேட்டர்களுக்குச் சென்று பார்த்தோம். அப்போது அனைத்து இடங்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தது நாங்கள் எதிர்பார்க்காதது. இரவுக் காட்சிகள் கூட அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருந்தது. குடும்பம் குடும்பமாகப் படத்தைப் பார்த்தார்கள், சிறியவர்கள், பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் படத்தை பார்த்தார்கள். இதற்கு காரணம் உங்களது தெளிவான விமர்சனம் தான்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் கோகுல் பினாய், “இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால், அதைத் தாண்டி மாஸாக படம் ரீச் ஆனால் மட்டும் தான் வெற்றி கிடைக்கும் என்ற போதில் அதை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செய்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்த பிறகு, பின்னணி வேலைகள் தொடங்கிய போது எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த வெரூஸ் நிறுவனத்தாருக்கு நன்றி. பேச்சியாக நடித்த சீனிபாட்டிக்கு நன்றி, படம் வெளியாகும் போது நிறைய தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், ட்ரீம் வாரியர்ஸ் குகன் சார், இந்தப் படத்திற்கு இப்படி தான் போக வேண்டும் என்று மதிப்பீடு வைத்திருக்கிறார்கள், அந்த மதிப்பீடு மிகச் சரியாக இருந்தது. தயாரிப்பாளருக்கு எந்த வகையிலும் இழப்பு வரக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டமாக எங்களை அழைத்துச் சென்றார்கள். அவர்களுக்கு நன்றி” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.