வெயிலோன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது 10 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன், “சினிமா வர்த்தகமே இன்று நிலையற்ற சூழலில் இருக்கும் போது பேச்சி என்ற சிறு படம் 10 ஆவது நாளைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் எங்களுக்கு 18 காட்சிகள் ஒதுக்கப்பட்டது, இரண்டாவது நாளில் சென்னையில் மட்டும் 75 ஸ்கிரீன்ஸ் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இன்று 10 நாட்களைக் கடந்து 75 சதவீத தியேட்டர்களை நாங்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். பேச்சி படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்திருக்கிறது. இதற்குக் காரணம், பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் தான். நீங்கள் கொடுத்த ஆதரவு காரணமாக இந்தப் படம் மக்களைச் சென்றடைந்திருக்கிறது. அதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு, ரத்னவேலு அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அப்போது எளிதில் படம் பண்ணிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை, பல போராட்டங்களுக்குப் பிறகே இந்த இடத்தில் நின்றிருக்கிறேன். இந்த இடத்தில் நிற்பதற்கான வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் கோகுல், என் குருநாதர் ரத்னவேலு ஆகியோருக்கு நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்த கலரிஸ்ட் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இன்று என்னுடைய ஒளிப்பதிவைக் குறிப்பிட்டு மக்கள் பாராட்டி வருகிறார்கள். அதற்குக் காரணம் இவர்கள் தான். இந்தத் தருணத்தில் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின், “பேச்சி படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி. பேச்சி படம் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த படம் என்று விமர்சனமும் பாராட்டும் கிடைத்தது. இதற்காக உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. இந்தப் படத்தை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்த வெரூஸ் புரொடக்ஷன்ஸ் முஜிப் சார் மற்றும் சஞ்சய் சார் ஆகியோருக்கு நன்றி” என்றார்.
வெரூஸ் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய் ஜெய்சங்கர், “பேச்சி படத்தைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ பிரஸ் தான். படம் எடுத்தது ஒரு பக்கம் இருந்தாலும், பத்திரிகையாளர்களின் எழுத்து தான் மக்களை திரையரங்கிற்குக் கொண்டு வந்தது. பத்திரிகையாளர்களுக்கு வெயிலோன் மற்றும் வெரூஸ் சார்பில் மிகப்பெரிய நன்றி. என்னுடைய அப்பா அடிக்கடி சொல்வார். ‘நம்ம என்னதான் நடித்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர்கள் தான். அவர்கள் எழுதினால் தான் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள்’ என்று. அவர் சொன்னது போல் இன்று பேச்சி படம் வெற்றி பெற்றதற்கு பத்திரிகைகள் தான் முதல் காரணம். என் அப்பா மேலே இருந்து பாத்துக்கிட்டு இருக்காரு, நிச்சயம் அவர் மகிழ்ச்சியடைவார். எங்களுடைய முதல் படமே இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை எங்களிடம் கொண்டு வந்த சூரி மற்றும் அலிஸுக்கு நன்றி. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு எங்களிடம் சொன்ன முஜிப், ராஜராஜன் உள்ளிட்ட எங்கள் குழுவினருக்கும் நன்றி. இந்தப் படத்தை மிக நேர்த்தியாக இயக்கிய இயக்குநர் ராமச்சந்திரன், சிரமமான இடங்களில் படப்பிடிப்பு நடந்தாலும் அதைச் சிறப்பாக செய்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. படத்தை சரியான முறையில் விநியோகம் செய்த ட்ரீம் வாரியர்ஸ் குகனுக்கும் பெரிய நன்றி” என்றார்.
வெரூஸ் நிறுவனத்தை சேர்ந்த ஷேக் முஜீப், “பத்து நாட்களுக்கு முன்பு பேச்சி படத்தின் சிறப்புக் காட்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தோம். உங்களுடைய எழுத்தால் தான் மக்கள் படத்தைக் கொண்டாடுகிறார்கள். நான் இந்தக் குறுகிய காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் குறித்து என்ன புரிந்துக்கொண்டேன் என்றால், படம் பெரியது, சிறியது என்று பார்க்காமல், கன்டென்ட் நன்றாக இருந்தால், அதற்கான அங்கீகாரத்தைக் கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை பத்திரிகையாளர்கள் சிறப்பாக செய்கிறார்கள். அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெயிலோன் மற்றும் வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, கடினமாக உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விநியோக தலைமையாளர் குகன், “ஆடி அமாவாசை, பிரண்ட்ஸிப் டே போன்ற தருணத்தில் தான் பேச்சி படம் வெளியானது. பேச்சி அவளோட இடத்தை எடுத்துட்டானு உறுதியாகச் சொல்லலாம். பிரண்ட்ஸ் அனைவரும் சேர்ந்து திறமையை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்குறாங்க. படம் முடிந்து வெளியீட்டுக்கு வரும் போது அங்கும் நண்பர்கள் சேர்ந்து படத்தை வெளியிடுகிறார்கள், அவர்கள் தான் வெரூஸ். கோகுல் பினாய் உள்ளிட்ட வெயிலோன் டீம் மற்றும் வெரூஸ் நிறுவனத்தின் முஜிப், சஞ்சய், ராஜராஜன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி. தமிழ் சினிமாவின் உயிர் நாடியே சிறிய படங்களின் வெற்றி தான். பேச்சி போன்ற படங்கள் அதை நிரூபிக்கும் போது சினிமாவுக்கு உயிரோட்டமாக இருக்கும். படம் முடிந்த பிறகு வியாபார சம்மந்தமானவங்க ஈடுபடுபவார்கள். அந்த வகையில், வியாபார ரீதியாக பேச்சி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தைக் கடந்து கர்நாடகாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கான வியாபாரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தி உரிமை உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் நல்லபடியாக நடந்திருக்கிறது. முஜிப் சார் சொன்னது போல் சிறிய படம், பெரிய படம் என்பது தாண்டி ரசிகர்கள் மனதில் எந்த அளவுக்கு பதிந்திருக்கிறது என்பது தான் முக்கியம். அந்த வகையில், ரசிகர்கள் மனதில் பெரிய படமாக பதிந்ததற்குப் பத்திரிகை நண்பர்கள் தான் காரணம், அவர்களுக்கு நன்றி. அதேபோல் படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன் சார், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத்தொகுப்பாளர் அஸ்வின் அனைவருக்கும் நன்றி. பாலசரவணன், காயத்ரி, தேவ் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் படத்தின் விளம்பர பணிகளுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேச்சியின் இந்த வெற்றி இன்னும் தொடரும் என்று நம்புகிறேன். பேச்சி முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாங்களும் இந்த குழுவினருடன் இணைந்து பேச்சி இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கிறோம்” என்றார்.