கதைஅவள் பெயர் அபிராமி – 1
“ஏய் அகிலாண்டேஸ்வரீ.. இன்னும் என்னடீ பண்றவ, நேரங்காலமா இஸ்கூலுக்குப் போய்ச்சேர வேண்டாமா? ஊஞ்சிநேதக்காரி வந்துட்டா பாரு..” வெளியில் இருந்து கத்திய அப்பாத்தாவின் குரலைப் பொருட்படுத்தாது தனது முகத்தில் அப்பிய அதிகப்படியான பவுடரை ரசம் தேய்ந்த கண்ணாடியில் பார்த்துச் சரி செய்து கொண்டிருந்தாள். மடித்து ரிப்பன் கட்டியிருந்த ரெட்டை ஜடைகளை இணைக்கும் விதமாய்க் குண்டுமல்லிச் சரமொன்றைத் தொடுத்திருந்தாள். அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்பட்ட அகிலா அந்த வீட்டின் ஒரே பெண் வாரிசு. பெரியப்பா கண்ணைய்யனுக்கு இரண்டு ஆண் வாரிசுகள். சித்தப்பா செல்வராசுவிற்கு […]














