32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 204)
கபாலி விமர்சனம் சினிமா

கபாலி விமர்சனம்

வழக்கமான ரஜினி படம் போல் தொடங்கினாலும், சிறையில் இருந்து வரும் ரஜினி தன் வீட்டுக்குப் போனதும் படம் வேறு பரிமாணத்தைப் பெறுகிறது. முற்றிலும் புது அனுபவத்தைத் தருகிறது. வீட்டின் ஒவ்வொரு மூலையும், அவருக்குத் தன் மனைவியின் ஞாபகத்தை மீட்டெழச் செய்கிறது. அதைத் தாங்கொண்ணாத ரஜினி, தன் பலஹீனத்தை மறைத்தவாறு, டேபிளில் தாளம் போட்டுக் கொண்டே அமீரிடம் தனியாக இருக்கப் பிரியப்படுவதாகச் சொல்கிறார். விடலைத்தனத்துக்கு ஒத்த காதலையே காவியம் போல் வியந்தோதி தமிழ் சினிமா மகிழ்ச்சி அடைந்து கொள்ளும் […]

24/07/2016 Dinesh R
இரவின் கனவாக – துருவங்கள் 16! சினிமா

இரவின் கனவாக – துருவங்கள் 16!

‘துருவங்கள் பதினாறு’ எனும் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். 21 வயது இளைஞரான இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். சினிமா ஆர்வத்தில் படிப்பை பாதியில் நிறுத்தியவர். குறும்படங்கள் எடுத்து சினிமா பக்கம் வந்திருப்பவர். ஏற்கெனவே ‘விழியின் சுவடுகள்’, ‘நிறங்கள் மூன்று’, ‘ஊமைக்குரல்’, ‘பிரதி’ என 4 குறும்படங்கள் இயக்கிப் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றபின் சினிமா மீது நம்பிக்கை வைத்துத் திரைக்களத்துக்கு வந்து விட்டார். ஆபாச காமெடி இல்லை; ஆவேச பஞ்ச் வசனங்கள் இல்லை ; பாடல்கள் […]

23/07/2016 Dinesh R
சத்யராஜின் ‘கிட்னாப் – திரில்லர்’ சினிமா

சத்யராஜின் ‘கிட்னாப் – திரில்லர்’

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ரசிக்கும்படி திரையில் கொண்டு வருவது சத்யராஜின் பாணி. அதுவே அவரை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமாக இருந்தால்? படத்தை அவரே, நாதாம்பாள் பிலிம் பாக்டரி சார்பாகத் தயாரித்து நடிப்பார். “இயக்குநர் கார்த்திக் என்னிடம் வந்து கதையைச் சொன்ன அடுத்த நொடியே, இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அந்த அளவிற்கு இந்தப் படத்தின் கதையானது என்னைக் கவர்ந்துவிட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் புதுமுகமாக இருந்தாலும், அவரின் […]

22/07/2016 Dinesh R
கபாலி படம் பார்க்க லீவ் விட்ட இயக்குநர் சினிமா

கபாலி படம் பார்க்க லீவ் விட்ட இயக்குநர்

ஜெய்யும் அஞ்சலியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘பலூன்’. ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் ஆகியோர் தயாரித்து வரும் பலூன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சினிஷ். வலுவான இளம் திறமையாளர்களை உள்ளடக்கிய பலூன் படக்குழுவினர், கபாலி படத்தின் மேல் இருக்கும் எல்லையற்ற ஆர்வத்தால், வரும் ஜூலை 22 ஆம் தேதி படப்பிடிப்புக்கு விடுமுறை […]

19/07/2016 Dinesh R
ஒன்பதிலிருந்து பத்துவரை விமர்சனம் சினிமா

ஒன்பதிலிருந்து பத்துவரை விமர்சனம்

கால் டேக்சி ட்ரைவரான பாண்டிக்கு, எஃப்.எம்.இல் பணி புரியும் ஏஞ்சலாவினுடைய குரல் ராஜ போதையைத் தருகிறது. தினம் இரவு ஒன்பதிலிருந்து பத்து வரை ஏஞ்சலாவின் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும். அந்தப் போதை பாண்டியிடம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. பையா போலொரு ரூட் மூவியாகப் போகுமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது முதல் பாதி. அப்படியில்லை என இடைவேளையிலேயே அழுத்தமாகச் சொல்லி விடுகின்றனர். 96 நிமிடங்களே ஓடக் கூடிய சின்ன படம்தான். ஆனாலும், திரைக்கதையோ வசனமோ கதையின் […]

15/07/2016 Dinesh R
ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் விமர்சனம் அயல் சினிமா

ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் விமர்சனம்

சிறுகோள் (Asteroid) ஒன்று பூமியைத் தாக்க வருகிறது. பூமியின் அடியாழத்தில் வாழும் பக், ஒரு தீர்க்க தரிசணத்தைச் சொல்லும் தூணைத் தற்செயலாகக் கண்டுபிடிக்கிறது. அந்தத் தூணிலுள்ள செய்தியின் படி, முன்பே பூமியில் விழுந்த சிறுகோளின் ஒரு பகுதிதான் அதன் மற்றொரு பகுதியை ஈர்க்கும் விசையாகச் செயல்படுகிறது; அதை மீண்டும் விண்வெளிக்கு அனுப்பி விட்டால் பூமியைப் பேரழிவில் இருந்து காப்பாற்றலாம் என்றிருக்கிறது. பக்-கின் தலைமையில் பாலூட்டிகள் எப்படி சிறுகோளை விண்வெளிக்கு ஏவி பூமியைக் காப்பாற்றுகின்றன என்பதே படத்தின் சுவாரசியமான கதை. […]

15/07/2016 Dinesh R
இண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க! கட்டுரை

இண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க!

விவசாயத் தொழிலை சிமென்ட் ஆலைகளிடம் காவு கொடுத்துவிட்ட வறண்ட நிலப்பரப்பினைச் சேர்ந்த ஒருவரின் நினைவு மீட்டல்களே இண்ட முள்ளு எனும் சிறுகதைத் தொகுப்பு. ஆனால், கதைகளோ விவசாயம் செழிப்பாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. தனது பால்யத்தில் கேட்டுப் பழகிய அரியலூர் மாவட்டப் பேச்சு வழக்கிலேயே அனைத்து வரிகளையும் எழுதியுள்ளார் அரசன். முதல் வாசிப்பின் பொழுது, அப்பேச்சு மொழி அந்நியமாக இருப்பதால், நம்மருகிலேயே அரசன் அமர்ந்து தனது ஊரைப் பற்றியும் அதன் மனிதர்கள் பற்றியும் அரூபமாய்ப் பேசிக் கொண்டிருக்கும் […]

15/07/2016 Dinesh R
அக்டோபர் 7 – ரெமோ சினிமா

அக்டோபர் 7 – ரெமோ

‘ரெமோ’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, ரெமோ படத்தின் போஸ்டர் வெளியீடு என ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களையும் மிகப் பிரம்மாண்டமான முறையில் ரெமோ படக்குழுவினர் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றனர். ஆனால் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல், சிறந்த கதைக்களம், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினரின் கடின உழைப்பு என எல்லாம் தான் ரெமோ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது. மேலும், அனிருத்தின் துள்ளலான இசையில் அமைந்துள்ள ‘ரெமோ சிக்நேச்சர் தீம்’ மற்றும் ‘செஞ்சிட்டாளே’ பாடல்கள் […]

15/07/2016 Dinesh R
பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக சினிமா

பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக

Crowd funding முறையில் தயாரிக்கும் இப்படத்தை PROUD funding என்றே தற்பெருமையாக ஏன் குறிப்பிடுகிறேன் என்று சொல்லும் முன், இன்று இன்னும் இரண்டு படங்கள் என் நடிப்பில் துவங்குகிறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. நண்பர் சுசீந்திரன் இயக்கத்தில் தம்பி விஷ்ணு விஷாலுடன் இணையும் ஒன்றும், புதிய இயக்குநர் சுதர்சன் இயக்க ‘கயல்’ சந்திரனுடன் நடிக்கும் 2MB தயாரிப்பில் இன்னொன்றும் இப்படி மூன்று படங்கள் இன்றைய தளத்தில் – நாளைய தரத்தில்! இன்னும் ஒன்று தேனாண்டாள் படம் அக்டோபரில், […]

14/07/2016 Dinesh R
யுனிலீவர் கழுத்தைச் சுற்றிய வேதாளம் ரதீந்தரனின் படம் சினிமா

யுனிலீவர் கழுத்தைச் சுற்றிய வேதாளம் ரதீந்தரனின் படம்

இது வேதாளம் சொல்லும் கதை எனும் படத்தை ரதீந்தரன் ஆர். பிரசாத் இயக்குகிறார். இதில் அஷ்வின் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ) மற்றும் குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம், ஜோக்கர்) இணைந்து நடிக்க உள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இத்திரைப்படத்திற்கான இசைப்பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். இப்படம், இந்தியப் புராணங்களில் வரும் பாத்திரங்களை அடிப்படையாக எடுக்கப்படும் பயணச் சாகசத் திரைப்படமாகும். இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கில் இம்மாதம் துவங்க உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான், […]

11/07/2016 Dinesh R
தில்லுக்கு துட்டு விமர்சனம் சினிமா

தில்லுக்கு துட்டு விமர்சனம்

சேட்டு வீட்டுப் பெண்ணான காஜலைக் காதலிக்கிறான் லோக்கல் பையனான குமார். அது பிடிக்காத காஜலின் தந்தை, ஒரு பங்களாவில் வைத்து குமாரைக் கொல்ல நினைக்கிறார். அந்தப் பங்களாவிலோ இரண்டு பேய்கள் உள்ளன. அங்கு நடக்கும் சுவையான சம்பவங்கள்தான் படத்தின் கதை. கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தால் தேவலை என நினைக்கும் அளவுக்குச் சலிக்கச் சலிக்க பேய்ப் படத்தை வழங்கி வருகிறது தமிழ்ப் திரையுலகம். ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக சந்தானமும் அந்தக் கோதாவில் குதித்துள்ளார். முருக பக்தன் குமாராக ஆடல் […]

08/07/2016 Dinesh R
அட்ரா மச்சான் விசிலு விமர்சனம் சினிமா

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

உச்ச நடிகரான பவர் ஸ்டாருக்கு, மதுரையில் அதி தீவிர ரசிகர்களாக சிம்மக்கல் சேகர், கோரிபாளையம் ரஹமத், பழங்காநத்தம் பாபு ஆகியோர் இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதல்படி, ‘பாகுபலியும் பாயும்புலியும்’ என்ற பவர் ஸ்டாரின் படத்தை மதுரை ஏரியா வினியோகத்திற்கு எடுத்து ஓட்டாண்டி ஆகுகின்றனர். தன் உயிரினும் மேலான தலைவனைப் போய்ப் பார்க்கின்றனர். தலைவரோ உதாசீனப்படுத்தி விட, அவமானப்படுத்தப்படும் மூன்று ரசிகர்களின் எதிர்வினை தான் படத்தின் கதை. ‘பாட்ஷா’ பட ரஜினி பாணியில் அறிமுகமாகிறார் பவர் ஸ்டார் […]

07/07/2016 Dinesh R
தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் விமர்சனம் சினிமா

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் விமர்சனம்

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் என்ன செய்யும் என்று யோசித்ததுண்டா? அதுதான் இப்படத்தின் கதை. தன்னை வளர்க்கும் கேட்டி மீது மேக்ஸ் எனும் டெர்ரியர் வகை நாய்க்கு மிகுந்த அன்பு. கேட்டி வெளியில் செல்லவே விடாமல் அட்டகாசம் செய்யும் மேக்ஸ். இப்படி நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில், ட்யூக் எனும் பெரிய நாயை வீட்டிற்குக் கொண்டு வருகிறாள் கேட்டி. தனக்கும் கேட்டிக்கும் இடையில் ஒன்றை மேக்ஸால் ஏற்றுக் கொள்ளவே […]

07/07/2016 Dinesh R
அர்த்தநாரி விமர்சனம் சினிமா

அர்த்தநாரி விமர்சனம்

இன்ஜினியரான கார்த்திக்கும், காவல்துறை உயரதிகாரியுமான சத்யப்பிரியாவும் காதலிக்கிறார்கள். சத்யப்பிரியா எடுத்து நடத்தும் ஒரு வழக்கும், தன்னை வளர்த்த செல்வமாணிக்கம் ஐயாவின் மரணத்திற்குக் காரணமானவரைத் தேடும் கார்த்தியின் தேடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. தனித்தனியாக இருவரும் இயங்கினாலும், காதலர்கள் அர்த்தநாரி போல் இணைந்து வேட்டையாடுவதாகப் பதற்றம் கொள்கிறார் வில்லன். இந்தக் கண்ணாமூச்சி வேட்டை எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. கல்வியின் அவசியமும், குழந்தைத் தொழிலாளிகளின் அவலமும் படம் நெடுகே சொல்லப்படுகிறது. […]

07/07/2016 Dinesh R
பைசா விமர்சனம் சினிமா

பைசா விமர்சனம்

குப்பை பொறுக்கும் தொழிலாளியான முருகனுக்கு அடையாறு நதிக் கரையோரமாக 100 கோடி ரூபாய் கிடைக்கின்றது. அந்தப் பணம் அவனைப் படுத்தும் பாடு அல்லது அவனுக்குள் நேரும் அகப்போராட்டம் தான் படத்தின் கதை. முதல்முறையாகத் தனி நாயகனாக நடித்துள்ளார் ஸ்ரீராம். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூடச் சம்பாதிக்க முடியாமல் போகிறதென வருந்தும் முருகனுக்கு, சாலையில் கிடைக்கும் 3000 ரூபாய் பெரிதாகப் படவில்லை. ஆனால், 100 கோடியைப் பார்த்ததும் அவன் மனம் சபலமுறுகிறது. தனது பேன்ட்டின் கிழிசலை 1000 […]

02/07/2016 Dinesh R