32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

க்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் குற்றம் 23

Dinesh R சேலம் Published: 06/06/2016 2 நிமிட வாசிப்பு Updated: 07/06/2016 சினிமா
எழுத்து அளவு:

குற்றம் 23

பொதுவாகவே இயக்குநர் அறிவழகனின் படங்களில் க்ளைமேக்ஸ் காட்சிகள் அனைத்தும் மிகுந்த பரபரப்பாகத்தான் இருக்கும்.  அதுவும் இது ஓர் அதிரடிப் படம் என்பதால், சண்டைக் காட்சிகளுக்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்கிறது சமீபத்தில் வெளியான படத்தின் ‘மோஷன் போஸ்டர்’.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தற்போது ‘குற்றம் 23’ , அருண் விஜய்யின் அசத்தலான அதிரடியிலும், அனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பிலும்  கலை கட்டி வருகிறது. ‘சாட்டை’ படப்புகழ் மகிமா நம்பியார் அருண் விஜயுடன் ஜோடி சேர்ந்து  நடிக்கும் இந்த மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படத்தை இந்திர குமார் அவர்களின் ‘ரேடான்  திசினிமா பீபள்’ நிறுவனத்தோடு இணைந்து ‘இன் சினிமாஸ் என்டர்டைன்மன்ட்’ நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்த்தி அருண் தயாரித்து வருகிறார்.

முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் அருண் விஜய்யின்  ‘குற்றம் 23’ படத்தின் இறுதிக்கட்ட கிளைமாக்ஸ் காட்சிகள், சென்னையிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது. “காரில் துரத்திகொண்டு போகும் ஒரு சண்டைக் காட்சி எங்கள் படத்தில் இருக்கிறது. அந்தக் காட்சியை நாங்கள் தற்போது சென்னையில் நள்ளிரவு ஆரம்பித்து  விடியற்காலை வரை படமாக்கி வருகிறோம். அதனைத் தொடர்ந்து எங்கள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு  தொடர்ந்து ஆறு நாட்களுக்கு  படூர் பகுதிகளில் நடைப்பெற இருக்கிறது. அது மட்டுமின்றி  ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை ‘குற்றம் 23’ படத்திற்காக எங்களது   இயக்குந்ர் எழுப்பியுள்ளார்” என்று கூறினார் இயக்குநர் அறிவழகன்.

படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணமாக வில்லன்  வம்சி, அருண் விஜய்யுடன் கைக்கோர்த்துள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான ‘தடையற தாக்க‘ படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற நிலையில், தற்போது  மீண்டும்  இந்தக் கூட்டணி ‘குற்றம் 23’ படத்தில் ஒன்று சேர்ந்துள்ளது அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அருண் விஜய்யின் நடிப்பில் வெளிவரும் இந்தப் படம் கண்டிப்பாக அவரை தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்லும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.