32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 205)
வில்லாதி வில்லன் வீரப்பன் விமர்சனம் சினிமா

வில்லாதி வில்லன் வீரப்பன் விமர்சனம்

இது சந்தன மரக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய படமில்லை. ராம்கோபால் வர்மாவின் படம். 900 யானைகளையும், 97 போலீஸ்காரர்களையும் கொன்ற வீரப்பனைப் பிடிக்க போலீஸார் நடத்திய “ஆப்ரேஷன் குக்கூன்” பற்றி மட்டுமே அலசுகிறது ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ திரைப்படம். வீரப்பனை வீழ்த்த போலீஸ் எடுத்துக் கொண்ட கடைசிக் கட்ட முயற்சிகளைத் திரைக்கதையாக்கியுள்ளார். வீரப்பனைப் பிடிப்பதற்காகச் செலவு செய்யப்பட்ட தொகை 734 கோடிகளாம். இப்படி, வீரப்பனைப் பற்றி வெளியில் இருந்து, செய்திகள் மூலமே அறிந்த ராம்கோபால் வர்மா, வீரப்பனை […]

01/07/2016 Dinesh R
அப்பா விமர்சனம் சினிமா

அப்பா விமர்சனம்

அரசுப் பள்ளிகளின் மீது வீசிய சாட்டையை, அதனினும் வலுவாகத் தனியார் பள்ளிகளின் மீது வீசியுள்ளார் தயாளன். ஒரு லட்சிய தந்தைக்கு எடுத்துக்காட்டாக தயாளன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள சமுத்திரக்கனி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்தும், ‘நாம் இணைந்து நம் மகனை உயர்த்துவோம்’ எனக் குழந்தையின் தொப்புள் கொடி மேல் எல்லாம் சபதம் எடுத்தும் கிலியைக் கிளப்புகிறார். பார்வையாளர்களுக்குப் பாடமெடுத்துப் புத்தி புகட்டுவது, நன்னெறியை எடுத்தியம்புவது என்ற அவரது அக்கறை […]

01/07/2016 Dinesh R
அவள் பெயர் அபிராமி – 2 கதை

அவள் பெயர் அபிராமி – 2

முடிவு செய்து வைத்தபடியே கதிரேசு வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய் ஆரம்பித்து வைத்தாள் ராமாயி. “எலே கதிரேசு! அகிலாண்டேஸ்வரிக்கு வயசாயிகிட்டே போகுது! சீக்கிரமா ஒரு கண்ணாலத்தைப் பண்ணிப் பாக்கோணும்னு இல்லாம இப்படிக் கிணத்துல போட்ட கல்லு கணக்கா இருந்தா எப்படி?” தாழியில் இருந்த தண்ணீரை இரு கைகளால் அள்ளி முகம் கழுவிக் கொண்டிருந்த கதிரேசு நிமிர்ந்து ராமாயியை ஒரு கணம் கூர்ந்து நோக்கினான். “ஆத்தா! இப்ப அவளுக்கு என்ன வயசாயிட்டு! இப்பதானே பன்னெண்டாப்புப் போறா! கண்ணால பேச்செடுத்தா கலெக்ட்டர் […]

30/06/2016 Dinesh R
சிங்கையில் ரெமோ சினிமா

சிங்கையில் ரெமோ

சிவகார்த்திகேயனும் கீர்த்தி சுரேஷும் நடித்திருக்கும் ரெமோ, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், புதுமுக இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள ‘ரெமோ’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும், அனிருத் இசையமைத்த ‘ரெமோ நீ காதலன்’ பாடலும் கடந்த வியாழன் அன்று சென்னையில் மிக விமர்சையாக வெளியிடப்பட்டது. பிரம்மாண்டத்தின் மறு ரூபமான இயக்குநர் ஷங்கர் தலைமை தாங்கிய இந்த விழாவானது, ஒட்டுமொத்த திரையுலகக் கண்களையும் ‘ரெமோ’ மீது திரும்புமாறு செய்திருக்கிறது. இப்படி ஒரு பாடலின் வெளியீட்டையே, மிகப் […]

27/06/2016 Dinesh R
இண்டிபெண்டன்ஸ் டே: ரீசர்ஜென்ஸ் விமர்சனம் அயல் சினிமா

இண்டிபெண்டன்ஸ் டே: ரீசர்ஜென்ஸ் விமர்சனம்

வேற்றுக் கிரகவாசிகளின் தாக்குதல்களில் இருந்து மீண்டு, மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு பூமி வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்னறிவிக்க வேற்று கிரகவாசிகள் விட்டுச் செல்லும் தொழில்நுட்பத்தையே உபயோகித்து, ESD (எர்த் ஸ்பேஸ் டெஃபன்ஸ்) என்ற அமைப்பை உருவாக்குகிறது ஐக்கிய சபை. அவ்வமைப்பை, செவ்வாய் கிரகத்திலும் நிலவிலும் ரேயாவிலும் (சனி கிரகத்தின் துணைக்கோள்) அமைத்து, கண்காணிப்பு வேலையைச் செய்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன், வேற்றுக்கிரகவாசிகள் தோற்கும் பொழுது தங்கள் தோல்வியைத் தலைமையிடத்துக்குச் சமிக்ஞை செய்துவிடுகின்றனர். […]

26/06/2016 Dinesh R
அம்மா கணக்கு விமர்சனம் சினிமா

அம்மா கணக்கு விமர்சனம்

பரீட்சை என்ற முறையைக் கண்டுபிடித்தவரைக் கூட மாணவர்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால், கணக்கைக் கண்டுபிடித்தவன் மீது மட்டும் ஏராளாமான மாணவர்கள் கடுங்கோபத்தில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இருப்பார்கள். ’எவன்டா கணக்கைக் கண்டுபிடிச்சான்?’ என்ற வசனத்தை எரிச்சலான தொனியில் செவி மடுக்காத மாணவர்களோ, பெற்றோர்களோ அனேகமாக இருக்க மாட்டார்கள். ஏன் மகாகவியையே, ‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என விழி பிதுங்கச் செய்த பெருமை கணக்கிற்கு உண்டு. இப்படத்தில் வரும் அம்மாவிற்கும், மகளிற்கும் கூட அதே பிரச்சனைதான். முள்ளை முள்ளால் எடுப்பது […]

25/06/2016 Dinesh R
ராஜா மந்திரி விமர்சனம் சினிமா

ராஜா மந்திரி விமர்சனம்

சூர்யா, கார்த்தி என பாசமிகு சகோதரர்கள் வாழ்க்கையில் நேரும் காதல் – கல்யாணக் குளறுபடிகள் தான் படத்தின் கதை. கல்யாணம் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் முதுமகன் (30 வயதைக் கடந்த ஆண்) சூர்யாவாக காளி வெங்கட். அவருக்குத் தம்பியாக கலையரசன் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தாலும், காளி வெங்கட்டுக்கே படத்தின் நாயகன் என்ற அந்தஸ்த்தைத் தர முடியும். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், ‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே!’ எனத் தொடங்கும் பாடலுக்கு காளி வெங்கட் காட்டும் முக […]

24/06/2016 Dinesh R
ரெமோ – ஏன்? யார்? எப்படி? சினிமா

ரெமோ – ஏன்? யார்? எப்படி?

“ஒரு நல்ல டைட்டில சொல்றவங்களுக்கு 20,000 என அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் கிட்டச் சொன்னோம். ஒண்ணும் தேறலை. ‘ஐ-ஃபோன் 6 எஸ்’ தர்றோம் என்று கூடச் சொல்லிப் பார்த்தாச்சு. ‘நெருப்புடா’ பாடின நம்ம அருண்ராஜா காமராஜ்தான் ரெமோ எனத் தலைப்பைச் சொன்னார். ‘நல்லாயிருக்கே ஏன்?’ எனக் கேட்டதுக்கு, “அந்நியன்ல ரெமோவும் காதலுக்காக வேஷம் போட்டுப் போவார்” எனச் சொன்னார். எங்களுக்கும் ரோமியோ போல் கேட்ச்சியா டைட்டில் தேவைப்பட்டது. அதுவுமில்லாம ரெமோ ஆல்ரெடி சக்சஸான ஒரு பெயர்” என்றார் சிவகார்த்திகேயன். […]

24/06/2016 Dinesh R
சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் விமர்சனம் அயல் சினிமா

சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் விமர்சனம்

நட்பைக் கொண்டாடும் நகைச்சுவைத் திரைப்படம். 20 வருடங்களுக்குப் பின், ஃபேஸ்புக் மூலமாக தன் நண்பனைச் சந்திக்கிறான் கால்வின் ஜாய்னர். அடுத்த நாள் காலை சி.ஐ.ஏ. கால்வின் வீட்டு வாசலில் நிற்கிறது. அவன் சந்தித்த நண்பனான பாபி ஸ்டோன் ஒரு கொலை செய்து விட்டு, செயற்கைக் கோள் சம்பந்தமான குறியீட்டு இலக்கங்களை தீவிரவாதிகளிடம் விற்கப் பார்க்கும் மோசமான நபர் என சி.ஐ.ஏ.வால் கால்வினுக்குச் சொல்லப்படுகிறது. பாபியோ மீண்டும் கால்வினை அணுகி உதவி கேட்கிறான். கால்வின் சி.ஐ.ஏ. பக்கமா? நண்பன் […]

19/06/2016 Dinesh R
எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம் சினிமா

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

அதீத ஹீரோயிசத்தையும், மாஸ் ஹீரோக்களையும், அப்படிப்பட்டவைகளை வியந்தோதிய படங்களையும் பகடி செய்யும் ‘ஸ்பூஃப்’ படமாக ரசிக்க வைக்கிறது இப்படம். தலைப்பே, அத்தகைய பகடியின் ஒரு வடிவம் தான். ‘நைனா’ எனும் அதீத அதிகாரத்தை வழங்கும் நாற்காலியில், உட்காரத் தகுதியான நபரைத் தேடுகிறான் தாஸ். ரத்தத்தைக் கண்டாலே வலிப்பு வரும் ஜானியை, கொலைகள் புரியும் பெரிய ‘மாஸ்’ வீரனென நினைத்து தெரியாத்தனமாக நைனாவாகத் தேர்வு செய்து விடுகிறான் தாஸ். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கலகலப்பான கதை. Cigarette […]

19/06/2016 Dinesh R
அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு கட்டுரை

அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு

‘ஆமை காட்டிய அற்புத உலகம்’ எனும் நல்லதொரு சிறுவர் நூலை எழுதியுள்ளார் எஸ்.பாலபாரதி. கதைக்குள் நுழையும் முன்பே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது, 7 வயதான சமர்சேந்தனின் நூல் பற்றிய மதிப்புரை ஆகும். சிறுவர் நூலொன்றை ஒரு சிறுவன் எப்படி உள்வாங்கிக் கொண்டான் என்று அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அச்சிறுவன் பொறாமைப்பட வைக்குமளவு மிகச் சிறந்த வாசகன். கடையில் வாங்கிய புத்தகத்தை, வீட்டுக்குப் போகும் வழியிலேயே படித்து முடிக்குமளவு அதி தீவிர புத்தகக் காதலன். அவனது […]

18/06/2016 Dinesh R
கிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும் கட்டுரை

கிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்

கிருஷ்ணன் நம்பி எழுதி பிரசுரமான முதல் சிறுகதை “சுதந்திர தினம்” என்கிற பதிவுகள் உள்ளன. இக்கதை 1951இல் வெளிவந்திருப்பதாக ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ நூல் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இவர் எழுத ஆரம்பித்த முதல் சிறுகதை இதுவல்ல. ‘நீலக்கடல்’ எனும் நீண்ட சிறுகதை தான் நம்பி எழுத ஆரம்பித்த முதல் சிறுகதை. வருடம் 1949. அப்போது நாங்கள் நாகர்கோவிலில் வசித்து வந்தோம். எனக்கு அச்சமயம் வயது ஒன்பது. ஒருநாள் இரவு எங்கள் பாட்டி (அப்பாவின் அம்மா) […]

16/06/2016 Dinesh R
மீண்டும் ‘இண்டிபெண்டன்ஸ் டே’ அயல் சினிமா

மீண்டும் ‘இண்டிபெண்டன்ஸ் டே’

1996 இல் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற படம் ‘இண்டிபெண்டன்ஸ் டே’. 75 மில்லியன் டாலர் பொருட்செலவில் உருவான அப்படம், 817 மில்லியன் டாலர் சம்பாதித்தது. அந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்பதோடு, சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதையும் வென்றது. 20 ஆண்டுகள் கழித்து அதன் அடுத்த பாகத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ரோலண்ட் எம்மெரிச். இம்முறை 200 மில்லியன் பொருட்செலவில் வரவுள்ளது ‘இண்டிபெண்டன்ஸ் டே: ரீசர்ஜன்ஸ்’. வேற்றுக் கிரகவாசிகளின் தாக்குதல்களில் […]

15/06/2016 Dinesh R
இறுதியாகச் சிலர் கட்டுரை

இறுதியாகச் சிலர்

மாயலோகத்தில் தொடரின் இறுதிப் பகுதிக்கு இப்போது வந்திருக்கிறோம். இதுவரை 21 பழம்பெரும் இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் வெளிவந்தன. இவர்கள் அனைவரும் நமது நினைவில் வாழ்பவர்கள். இவர்களைத் தவிர மேலும் சிலரும் இலக்கியத்தோடு, திரைத்துறைக்கும் பங்களித்துள்ளனர். இந்தப் பகுதியில் அவர்களில் சிலரைப் பற்றிய மிகச் சிறிய குறிப்புக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சாண்டில்யன் பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். இவர் ஒரு தீவிர வைஷ்ணவ பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர். கதைக்கும், கதை […]

15/06/2016 Dinesh R