32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைச் செய்தி

1066 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 71 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 71)
“இப்புடு ஹீரோ; ரேப்பூ வில்லன்” – ஆந்திரா மெஸ் சினிமா

“இப்புடு ஹீரோ; ரேப்பூ வில்லன்” – ஆந்திரா மெஸ்

சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது. அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மனமில்லாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்க்கை பயணமே ’ஆந்திரா மெஸ்’. “அனைவரும் அதென்ன ஆந்திரா மெஸ்னு தலைப்பு என்றே கேட்கிறாங்க. தலைப்பு ரொம்ப கவர்ச்சியாக இருக்கு. அப்புறம் சாப்பாடு. அனைவருக்கும் பிடிச்ச விஷயம். இதுல ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு சுவையைக் குறிக்கிறது. காரம், புளிப்பு, ஸ்வீட் என கதாபாத்திரங்களின் metaphor […]

17/02/2014 Dinesh R
‘தல’ ஹீரோயின் நயன்தாரா சினிமா

‘தல’ ஹீரோயின் நயன்தாரா

சூப்பர்ஹிட் ஹிந்திப் படமான ‘கஹானி’ தமிழில் ‘நீ எங்கே என் என்பே’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் இயக்கி வருகிறார் இயக்குநர் சேகர் கம்முலா. படத்தினை அப்படியே தழுவாமல் தனது பாணியில் திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கிறார். உதாரணத்திற்கு வித்யா பாலன் ஹிந்திப் படத்தில் கர்ப்பிணியாக நடித்திருப்பார். சேகர் கம்முலாவின் படத்தில் நயன்தாரா படத்தில் கர்ப்பவதி இல்லை. படத்தைப் பற்றி, ‘கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பது வாழ்நாளில் ஒருமுறை நிகழும் அதிசயம். […]

15/02/2014 Dinesh R
இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’ சினிமா

இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’

நம் அனைவருக்கும் இன்னொரு முகம் இருக்கும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் நல்ல முகமோ கெட்ட முகமோ வெளிப்படும். அப்படித் தேவைக்கேற்ப முகத்தைக் காட்டுபவன்தான் “மறுமுகம்” படத்தின் நாயகன். இப்பொழுது ட்ரெண்டில் இருக்கும்  ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகையைச் சார்ந்ததுதான் இப்படமும். ‘ஊமை விழிகள்’ படத்திற்குப் பிறகு ஃப்லிம் ஸ்டூடண்ட்ஸ் மாணவர்கள் இணைந்து உருவாக்கும் படம். படத்தின் இயக்குநரான கமல் சுப்ரமணியம் திரைப்படக் கல்லூரி மாணவர். படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் டேனியல் பாலாஜி அவருக்கு கல்லூரியில் சீனியர். இந்தப் படத்தின் […]

12/02/2014 Dinesh R
ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா சினிமா

ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா

கோலங்கள் புகழ் ஆதி என்கிற ஆதித்யா கதாபாத்திரத்தில் நடித்த அஜய்தான் ‘ஆதியும் அந்தமும்’ படத்தின் நாயகன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு முதன்முறை வந்திருப்பதாக மேடையில் அமர்ந்திருந்த சில பிரமுகர்கள் சொன்னார்கள். ஆனால் பிரியதர்ஷன் இயக்கத்தில் 1993 இல் வெளிவந்த “கர்டிஷ் (Gardish)” எனும் ஹிந்திப் படத்தில், ஜாக்கி ஷெரோஃப் தம்பியாக நடித்திருப்பார். மும்பைவாழ் பஞ்சாபிவாலாவான அவரது பெயர் அப்பொழுது கெளரவ் கபூர். தமிழில் கூட முரளி, ரோஜா நடித்த “ஊட்டி” படத்தில் வில்லனாக 1999 இலேயே […]

12/02/2014 Dinesh R
“பேய் இருக்கு!!” சினிமா

“பேய் இருக்கு!!”

சத்யா நாகராஜ், S.செல்லதுரை, சாமி.P.வெங்கட், பாலாமணி ஜெயபாலன் என நான்கு நண்பர்கள். குவைத்தில் வாழும் தமிழர்கள். ஒரு தொழில் தொடங்கும் யோசனையின் முடிவாக சினிமாவைத் தேர்ந்தெடுத்தனர். புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரணும் என்ற முடிவுடன், “வரம் கிரியேஷன்ஸ்” என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். சென்னையில் இருக்கும் பழம்பெரும் இயக்குநரான ஏ.கே.வேலனின் மகன் A.K.V.கலைஞானியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லியுள்ளனர். பின் படத்தில் பணி புரியும் ஒவ்வொருவரையும் சல்லடை போட்டு எடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு 60 கதைகளை வாங்கி, அதை […]

11/02/2014 Dinesh R
ஸ்டைலிஷான ‘பிரம்மன்’ சசிக்குமார் சினிமா

ஸ்டைலிஷான ‘பிரம்மன்’ சசிக்குமார்

ஆட்டோ டிரைவராக இருந்து படத் தயாரிப்பாளர் ஆனவர் K.மஞ்சு. கன்னடத்தில் 38 படங்கள் தயாரித்துள்ளார். அவர் தமிழில் தயாரித்திருக்கும் முதற்படம் “பிரம்மன்”. கமல ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மம்மூட்டி என பலரை தமிழில் முதன்முறையாக அறிமுகம் செய்தவர் இவர்தான். வாய்ப்புத் தேடிய இயக்குநர் சாக்ரடீஸின் கதை பிடித்துவிட, “ஹீரோ யார்” எனக் கேட்டுள்ளார். “சசிக்குமார்.” “அவரது கால்ஷீட் வாங்கிட்டு வாங்க. அதுவரை வெயிட் பண்றேன்” எனச் சொல்லி அனுப்பியுள்ளார் மஞ்சு. பம்மல் கே சம்பந்தம், நள தமயந்தி போன்ற […]

10/02/2014 Dinesh R
“என் மூலதனம்” – கமல் சினிமா

“என் மூலதனம்” – கமல்

‘தரமணியின் ஆன்மா (The Soul of Taramani)’ என்ற தனிப்பாடலை ஆங்கிலத்தில் எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரிமியா. இந்தப் பாடலை, இயக்குநர் ராமின் அடுத்த படமான “தரமணி”யின் பிரமோஷனிற்கு உபயோகிக்க அனுமதி அளித்துள்ளார் ஆண்ட்ரியா. படத்தின் இசையமைப்பாளரான யுவனும் சம்மதம் சொல்லிவிட, இந்த தனிப்பாடலை கமல் வெளியிட இயக்குநர் இமயம் பாரதிராஜா பெற்றுக் கொண்டார். “நல்லா பாடுவாங்கன்னு தெரியும். பல திரைப்படங்களில் நாயகிக்காக குரல் கொடுத்திருக்காங்கன்னு தெரியும். ஆனா தமிழ் பேசுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. […]

10/02/2014 Dinesh R
வீரம் – பத்திரிகையாளர் சந்திப்பு சினிமா

வீரம் – பத்திரிகையாளர் சந்திப்பு

“அஜித் சார், கிராமத்துப் பின்னணில படம் பண்ணி நாளாச்சு. இது மலையாளப் படத் தழுவலோ, ரஜினியின் முரட்டுக்காளை படத் தழுவலோ இல்லை. அஜித் சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவரோட அந்த முகத்தை இந்தப் படத்தில் காட்டியிருக்கோம். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாத் தரப்பினருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஃபேமிலி என்ட்டர்டெயினராக இருக்கும்” என்றார் இயக்குநர் சிவா.  “அஜித் சாரோடவும், ஷிவா சாரோடவும் இது எனக்கு முதல்படம்” என மகிழ்ச்சியில் இருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். படத்தின் […]

02/01/2014 admin
திருமணம் எனும் நிக்காஹ் – இசை வெளியீட்டு விழா சினிமா

திருமணம் எனும் நிக்காஹ் – இசை வெளியீட்டு விழா

‘திருமணம் எனும் நிக்காஹ்’ நகைச்சுவை கலந்த காதல் படம். இந்து மத மற்றும் இஸ்லாம் மத திருமணச் சடங்குகளும் கலாச்சாரங்களும் படத்தில் அதன் அழகியலோடு பதியப்பட்டுள்ளதாம். “படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சப்ப.. ‘நிக்காஹ் எனும் திருமணம்’ என்ற வீட்டிலிருந்த இன்விடேஷனில் பார்த்தேன். கொஞ்சம் உல்டா பண்ணி ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என மாத்திட்டேன். இந்தப் படத்தில் ஒரு அரசியல் வச்சிருக்கோம். அதாவது சகோதரத்துவத்துடன் இருவரும் இருக்கலாம் என்பதை.. ரொம்ப சிக்கலாக புனித நூல் கொண்டுலாம் சொல்லாமல் […]

25/12/2013 admin
“தூம்: 3” – அமீர், காத்ரீனா, அபிஷேக் சினிமா

“தூம்: 3” – அமீர், காத்ரீனா, அபிஷேக்

டிசம்பர் 20 அன்று உலகெங்கும் 4800 ஸ்க்ரீனில் வெளிவர இருக்கிறது. தமிழ்நாட்டிலும் 200 ஸ்க்ரீன்களுக்கு படம் திரையிடப்படுகிறது. தமிழில் ‘டப்’ செய்யப்படும் முதல் அமீர்கான் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நேரடி தமிழ்ப்படங்களான ‘என்றென்றும் புன்னகை’ மற்றும் ‘பிரியாணி’யுடன் களத்தில் இறங்குகிறது. படத்தின் பிரமோஷனுக்காக நேற்று சில மணி நேரங்கள் சென்னை வந்து சென்றனர் படக்குழுவினர். காத்ரீனா கைஃப் மற்றும் அபிஷேக் பச்சனுடம் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார் அமீர்கான். ‘கஜினி, 3 இடியட்ஸ்’ போன்ற முழு கமர்ஷியல் […]

18/12/2013 admin
பண்ணையாரும் பத்மினியும் – இசை வெளியீட்டு விழா சினிமா

பண்ணையாரும் பத்மினியும் – இசை வெளியீட்டு விழா

விழா தொடங்கும் முன், ஃபியட் கார் வைத்திருப்பவர் சிலரின் அனுபவங்களைக் காணொளியாகப் போட்டனர். ‘ஃபியட் கார்களுக்கு உயிருண்டு. நம்முடன் அவை ஒரு பந்தத்தை உருவாக்கி விடும்’ என காரின் மீதுள்ள காதலோடு அவர்கள் கண்கள் மலரப் பேசினார்கள். படத்தில் நான்கு பாடல்கள். இரண்டு பாடல்களை கவிஞர் வாலியும், மீதி இரண்டு பாடல்களை படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும் எழுதியுள்ளனர். இசையமைப்பாளரைப் பார்க்க பள்ளி மாணவனைப் போல உள்ளார். அடுத்த படத்திற்கும் தன்னை வந்து பார்க்கச் சொன்ன கவிஞர் […]

25/11/2013 admin
இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா சினிமா

இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா

“இன்னிக்கு (ஆகஸ்ட் 4) ஃப்ரெண்ட்ஸ் டே. லவ்வர்ஸ் டே மாதிரி இங்க ஃப்ரெண்ட்ஸ் டே கொண்டாடப்படலை. அதற்கு காரணம், செல்வராகவன் மாதிரி இயக்குநர்கள் தான். எனக்கும் அவருக்கும் நேரடி பழக்கம் இல்லை. அவருடைய ‘மயக்கம் என்ன’ படத்திலும், என் ‘கோ’ படத்திலும் ஹீரோ ஃபோட்டோக்ராஃபர். சோ ஃபோன் பண்ணி அரை மணி நேரம் கதை சொன்னேன். ஆனா அவர் தனுஷை வச்சு பிளான் பண்ணியிருந்த அடுத்த படத்தின் கதை இதுல இருந்தது. அவர் அந்தப் படத்தையே கை […]

06/08/2013 Dinesh R
கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா சினிமா

கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா

அறிமுக இசையமைப்பாளர் அரோரா புல்லாங்குழல் வாசித்து விழாவினைத் தொடங்கினார். அவர் 2000 பாடல்களுக்கு மேல் FLUTIST ஆகப் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு இவரை இசையமைப்பாளராகப் பரிந்துரைத்தது புஷ்பா கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது. “எனக்கு இவன் நவீன். சினிமாக்காக வச்சுக்கிட்ட பெயர்தான் அரோரா. எனக்கு அவனை எப்ப தெரியும்னா.. பிறந்ததில் இருந்தே தெரியும். நானும் இவனோட சித்தப்பா வி.எஸ்.குமாரும் 35 வருட நண்பர்கள். நாங்க கிரிக்கெட் விளையாடுறப்ப இவன் பார்த்துட்டு இருப்பான்.  ‘ராணா’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ம்யூசிக் போட்டிருந்தார். […]

03/08/2013 Dinesh R
“கமல் என் குரு” – பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் சினிமா

“கமல் என் குரு” – பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்

மு.கு.: “கேரள நாட்டிளம் பெண்களுடனே” – இசை வெளியீட்டு விழா பூ படத்தின் இசையமைப்பாளரான எஸ்.எஸ்.குமரன், “கேரள நாட்டிளம் பெண்களுடனே” என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். வைரமுத்துவின் வரிகளுக்கு அவரே இசையமைத்தும் இருக்கிறார்.  இந்தப் படத்தில் நாயகனுக்கு தந்தையாக நடித்திருக்கும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், “பேசிய அனைவரும் என் அருமை நண்பர் வைரமுத்துவை விழா நாயகன் என சொல்றாங்க. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனா உண்மையான நாயகன் எஸ்.எஸ்.குமரன் தான். குடும்பத்தோடு கொண்டாடும் விழாக்கள், இப்ப […]

08/06/2013 Dinesh R
“13 வருட காத்திருப்பு” – மரியான் தனுஷ் சினிமா

“13 வருட காத்திருப்பு” – மரியான் தனுஷ்

ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதல்முறையாக இணைகிறார் தனுஷ். அதைப் பற்றிக் குறிப்பிடுகையில், இது பதிமூன்று வருட காத்திருப்பு என்கிறார். 50 அடி ஆழக் கடலினுள் நடப்பது, நமீபியா பாலைவனங்களில் வெறும் காலுடன் நல்ல வெயிலில் நடப்பது என தனுஷை இயக்குநர் பரத்பாலா சக்கையாகப் பிழிந்துள்ளார்.    “எந்தப் படத்திற்கும் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. இனி பரத்பாலா படத்தில் நடிக்கவே கூடாது என முடிவு பண்ணேன். ஆனா இப்ப ரிசல்ட்டைப் பார்க்கிறப்ப, மீண்டும் அவர் படத்தில் நடிக்கணும்னு தோணுது. படத்தில் ஒரு சீனுல […]

15/05/2013 Dinesh R