32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைச் செய்தி

1062 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 69 / 71
செய்திகள் வரிசை (பக்கம் 69)
யுரேகாவின் தொப்பி சினிமா

யுரேகாவின் தொப்பி

மதுரை சம்பவம் எடுத்த இயக்குநரின் மூன்றாவது படம் தொப்பி. படத்தில் நாயகனாக முரளிராம் அறிமுகமாகிறார்; நாயகியாக மலையாள வரவான ரக்ஷா நடிக்கிறார்.  நியூசிலாந்தில் 25 வருடங்களாக ஹோட்டல் நடத்தி வரும் நாமக்கலைச் சேர்ந்த பரமராஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவர் பாக்கியராஜ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர். தனது சினிமா எடுக்கும் கனவை நனவாக்கியதோடு, தனது அபிமான நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜையே தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க வைத்திருந்தார். அதே போல், படத்தின் இசையமைப்பாளரான ராம்பிரசாத் […]

02/02/2015 Dinesh R
வில்லியாகும் ஷகிலா சினிமா

வில்லியாகும் ஷகிலா

பொய், ஊழல், பவர் (அதிகாரம்) தான் மக்களை ஆட்டுவிக்கும் சங்கதிகள். நம் நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர். தான் முற்றிலும் அழித்துக் காட்டுகிறேன் என்று கட்டை விரலை உயர்த்தி சவால் விடும் அரசியல்வாதி பதவிக்கு வந்தபின், தனது வார்த்தைகளை மறந்துவிட்டு அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்குச் செய்யும் ‘ஊழல்’தான் உண்மை படத்தின் கதை. ஊழலால் பாமர மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக எடுத்துள்ளனர். […]

18/09/2014 Dinesh R
“மக்கள் நல்லவர்கள்!” – சேரன் சினிமா

“மக்கள் நல்லவர்கள்!” – சேரன்

‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தினை சேரன் முடித்து எட்டு மாதங்கள் ஆகிறது. தன் படத்தை வெளியிட்டால், வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை நிலுவுகிறது என்பதால் மாற்றுவழியை யோசித்தார். 2013இல், 298 படங்கள் தணிக்கைச் சானிறிதழ் பெற்றுள்ளன. அவற்றில் 155 படங்கள்தான் வெளியாகியுள்ளன. மீதி படங்களுக்கு திரையரங்கு கிடைக்கவில்லை. இதற்குத் தீர்வு காண, கடந்த எட்டு மாதமாக மக்களை அணுகி, திரையரங்கிற்கு வராமல் ஏன் திருட்டு டி.வி.டி.களையும், இணையத்தில் தரவிறக்கம் செய்தும் படம் பார்க்கிறார்கள் என […]

15/07/2014 Dinesh R
ஆர்யா நிகழ்த்திய அமரவிழா சினிமா

ஆர்யா நிகழ்த்திய அமரவிழா

ஆர்யா தன் தம்பி சத்யாவை வைத்துத் தயாரிக்கும் ‘அமர காவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை, அமரத்துவம் வாய்ந்த விழாவாக நிகழ்த்திக் காட்டினார். பொதுவாக இசை வெளியீட்டு விழாவில், இசை குறுந்தகடை ஆண்கள்தான் வெளியிடுவார்கள். ஆனால் நடிகையில் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நடிகரான, நாயகி ஒருவரை இசை குறுந்தகடை வெளியிட வைத்து இன்னொரு நாயகியைப் பெற்றுக் கொள்ளச் செய்தார். இயக்குநர் பாலா முன்னிலையில், குறுந்தகடை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார். விழாவிற்கு வந்தவர்கள் படத்தைப் பற்றிப் […]

28/06/2014 Dinesh R
வெற்றிடத்தை நிரப்பும் திரைப்படம் சினிமா

வெற்றிடத்தை நிரப்பும் திரைப்படம்

நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற ‘ஆதாமிண்ட மகன் அபூ’ எனும் மலையாளப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரபி மொழியில் டப் செய்யப்படும் முதல் தென்னிந்தியப் படமென்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. மேலும் டர்க்கீ (துருக்கி), ஈரான், மலேசியா நாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 100 சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளது. கோவா ஃப்லிம் ஃபெஸ்டிவலில் ‘சில்வர் பீகாக்’ விருதினைப் பெற்றுள்ளது. இப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கிய மது அம்பட், மணிரத்னத்தின் […]

20/05/2014 Dinesh R
“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி சினிமா

“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி

‘யாமிருக்க பயமேண்’ எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருகிறது. எம்.ஜி.ஆர். படங்களைத் தவிர எந்தப் படத்தையும் பார்க்க விரும்பாத மயில்சாமியை, தினம் 5 நபர்களுக்குக் குறையாமல் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டி வருகின்றனராம். “எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் வருத்தப்படுறேன். ஹிந்தி பேசக் கூடத் தெரியாது. அதனால் வேதனைப்படுறேன். ஆங்கிலம் சுத்தமா வராது. அதனால் வெட்கப்படலை. ஏன் சொல்றேன் என்றால்.. தமிழ்நாடு தவிர வேற எங்கயும் ஷூட்டிங்குக்குப் போக மாட்டேன். பெரும்பாலும் தவிர்த்துடுவேன். ஆனா […]

18/05/2014 Dinesh R
மனித உரிமை பேசும் ‘யான்’ சினிமா

மனித உரிமை பேசும் ‘யான்’

R.S.Infotainment சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் “யான்” படம்தான் அந்நிறுவனத்தின் பெரிய பட்ஜெட் படம். படத்தின் முதல் பாடலை கவிஞர் வாலி அவர்கள் எழுதியுள்ளார். உடல் நலம் சரியில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்த்து வந்த வாலியை, அவரது வீட்டுக்கே சென்று ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் வரிகளை வாங்கியுள்ளார். ஹே லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா போட்டாலே பார்வையில்.. அம்பா எனத் தொடங்கும் யூத்ஃபுல்லான பாடலை எழுதியுள்ளார் வாலி. படத்தின் ஸ்க்ரிப்ட்டை இயக்குநர் […]

13/05/2014 Dinesh R
தலைவரில் தொடங்கி ‘தல’யில் முடிந்த மகிழ்ச்சி சினிமா

தலைவரில் தொடங்கி ‘தல’யில் முடிந்த மகிழ்ச்சி

“’என்னமோ நடக்குது’ நான் மியூசிக் பண்ற எட்டாவது படம். அஞ்சு தமிழ்ப்படம்; ஒரு கன்னடப் படம்; ஒரு தெலுங்குப் படம் பண்ணியிருக்கேன். அந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வந்தது.. ஒரு வாரத்திலேயே தியேட்டரில் இருந்து எடுத்துட்டாங்க. அதனால் நான் மியூசிக் பண்றேன் என மக்களுக்குத் தெரியாம போயிடுச்சு. இந்தப் படத்துலதான் நான் மியூசிக் டைரக்டராக ரீச் ஆகியிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ‘தல’க்கு ஹேப்பி பர்த் டே! இன்னிக்கு நைட் பார்ட்டியிருக்கும். நான் போவேன்” என்றார் மகிழ்ச்சியுடன் பிரேம்ஜி […]

01/05/2014 Dinesh R
“தூக்குடா சோலர் ஸ்டார!” சினிமா

“தூக்குடா சோலர் ஸ்டார!”

“’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்துல முக்கியமான ரோலில் நடிச்சிருக்காரு சோலர் ஸ்டார். அவர் யாருன்னா.. தேவயாணி மேடம் புருஷன் இராஜ்குமார் சார். எப்படி, ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா!’ல பவர் ஸ்டாரை நடிக்க வச்சோமோ அப்படி இந்தப் படத்தில் இவர் நடிச்சிருக்கார். வாயில ஜாங்கிரி வச்சுக்கிட்டு, சோலார் ஸ்டார் என படம் நூறு நாளும் நூத்தம்பது நாளும் போச்சுன்னு விளம்பரம் பண்ணியிருந்தார். சரி இவரை மாதிரி ஒரு ஆள் தேவைன்னு.. தூக்கு இவரன்னு சொன்னேன். அவரைத் தூக்கிட்டு […]

15/04/2014 Dinesh R
“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா சினிமா

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா

“சந்தானம் சார் நடிச்சா நல்லாயிருக்கும்னு கிரேஸி மோகன் சார் சொன்னார். அவர் டேட் கிடைக்காதுன்னு சொன்னாங்க. இரண்டு நாள் வந்து நடிச்சுக் கொடுத்தார். பார்த்ததும், அழகா இருக்காரே இவரை நடிக்க வச்சா ஏதாச்சும் பிரச்சனை ஆயிடுமோன்னு நினைச்சேன். இரண்டு நாளும், டைம்க்கு வந்து எப்படி டையலாகை இன்னும் அழகா பண்ணலாம்னு வொர்க் பண்ணிட்டு இருந்தார். அந்த க்வாலிட்டி ரொம்ப பிடிச்சிருந்தது. என்னோட ‘மரியாதை ராமண்ணா’ படத்தில் நடிக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஒரு சாதாரண மனுஷன் அசாதாரண […]

15/04/2014 Dinesh R
சைவத்தில் சேவல் சினிமா

சைவத்தில் சேவல்

இயக்குநர் விஜய் இயக்கும் ‘சைவம்’ படத்தில் நாசர், சாரா தவிர அனைவருமே புதுமுகங்கள். கூத்துப் பட்டறை கலைஞர்கள், விஞ்ஞானி வித்யா, ஹெலிகாப்டர் மெக்கானிக் விக்கி, நாசரின் மகன் பாஷா என கலந்து கட்டி கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் விஜய். இதற்கு உதவிய ஷண்முகராஜன், தங்கள் பாத்திரங்களை நடிகர்கள் உணர்ந்து நடிக்க ட்ரெயினிங் கேம்ப் ஒன்றும் நடத்தியுள்ளார். “இது என்னுடைய கதை இல்லை. நான் சின்ன பையனாக இருக்கிறப்ப எங்க அம்மா சொன்ன கதை. அவங்கதான் அன்-அஃபீஷியல் ரைட்டர், இந்தப் […]

06/04/2014 Dinesh R
தேவதை ஒருவரல்ல.. மூவர்! சினிமா

தேவதை ஒருவரல்ல.. மூவர்!

ஒரு சினிமா விழா போலில்லாமல் கல்யாண நிகழ்வு போல கலை கட்டியது ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா. விழாவிற்கான அழைப்பிதழுடன், காய்கறிகள் அடங்கிய கவர் ஒன்றினையும் கொடுத்து அசத்தியிருந்தார் இயக்குநர் விஜய். ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, குடும்பத்துடன் அனைவரும் வந்துள்ளார்களே என வந்திருந்த விருந்தினர் அனைவருமே வியந்தது குறிப்பிடத்தக்கது. சாராவுக்காக பின்னணி பாடியிருந்த உத்ரா உன்னிகிருஷ்ணன், அப்பாடலை மேடையில் பாடிக் காட்டியதும் விசிலும் கைதட்டலும் பிரமாதமாய் எழுந்தடங்கியது. சைந்தவிதான் உத்ராவைப் பாட வைக்கலாம் என […]

06/04/2014 Dinesh R
“என் குடும்பம் இது!” – நாசர் சினிமா

“என் குடும்பம் இது!” – நாசர்

சைவம் படத்தில் காரைக்குடி வாழ் செட்டியாராக நடித்துள்ளார் நாசர். ‘இந்தப் படம் தனக்கு இன்னொரு குடும்பத்தைத் தந்துள்ளது’ என நெகிழ்வுடன் ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா மேடையில் சொன்னார் நாசர். படத்தில் தன்னுடன் நடித்தவர்கள் ஒவ்வொருவரையும் அந்தக் கதாபாத்திரத்தின் உறவுமுறையை வாஞ்சையுடன் சொல்லி, சைவம் இசை வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்து வைத்தார். கண்ணு பட வைக்கும் அழகான பெரிய குடும்பம்தான் அது என்பதில் சந்தேகமில்லை. “எனக்கு மகள் இல்லாத குறை இந்தப் படத்தில்தான் தீர்ந்தது” என […]

06/04/2014 Dinesh R
“விஷால் கருப்பு மனிதன்தான!?” சினிமா

“விஷால் கருப்பு மனிதன்தான!?”

“விஷால் நடிக்கணும்னு ரொம்ப விருப்பப்பட்டது என் மனைவிதான். ‘அவன் இவன்’ பார்த்த பிறகு.. நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். நீ ரொம்ப நல்ல நடிக்கிறன்னு அவன்கிட்ட சொன்னேன். ஸ்டெப் பை ஸ்டெபாக அவன் கோலை (goal) அச்சீவ் பண்றான். அனைவரிடமும் நட்பாகப் பழகுகிறான். இவன் எல்லோரையும் லைக் பண்றான். இவனை மத்தவங்களுக்குப் பிடிக்குது. ரொம்ப சந்தோஷமான அப்பாவாக உணர்கிறேன். ‘நான் சிகப்பு மனிதன்’ என படம் பண்றேன்னு சொன்னான். “நீ எப்படி சிகப்பு மனிதன்? நீ கருப்பு மனிதன்தான?” […]

13/03/2014 Dinesh R
“என்னைப் பழிவாங்குகிறார் விஷால்” – இயக்குநர் பாலா சினிமா

“என்னைப் பழிவாங்குகிறார் விஷால்” – இயக்குநர் பாலா

‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார் விஷால். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் அதீத துக்கமோ, மகிழ்ச்சியோ, பயமோ ஏற்பட்டால் தூங்கி விழுந்து விடுவார் விஷால். “எனக்கு இந்த நோயோடு சீரியஸ்னஸ் தெரியும். ஏன்னா என்னுடைய அசிஸ்டென்ட்க்கு இந்தப் பிரச்சனை இருந்தது. போய் பேப்பர் எடுத்துட்டு வரச் சொல்லி அனுப்பினா.. அங்க போய் தூங்கிடுவான். டிஸ்கஷன்ல இருக்கும் பொழுது தூங்கிடுவான். இதனால அவன் ஒரு ஆக்ஸ்டென்ட்ல மாட்டி, 2 மாசம் […]

13/03/2014 Dinesh R