32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கூரன் – நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய்

Dinesh R சேலம் Published: 25/11/2024 2 நிமிட வாசிப்பு Updated: 28/11/2024 இது புதிது
எழுத்து அளவு:

நாய் மனிதன் மீது வழக்கு தொடர்ந்தால்?

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ‘கூரன்’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார். பொதுவாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று போராடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதி மன்றம் படி ஏறிப் போராடுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மனித உயிரும், விலங்குகள் உயிரும் ஒன்றுதான் என்றும், இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள் இவைகளுக்குமானது தான் என்ற கருத்தை இத்திரைப்படம் பேசுகிறது.

இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடித்திருக்கிறது. அதனுடன் இணைந்து எஸ்.ஏ. சந்திரசேகர், YG மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், இந்திரஜா ரோபோ ஷங்கர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப் பெயர் போன நாயை மையமாக வைத்துத் தமிழில் புதிய படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி. இவர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடித்தவர். சினிமா மீதுள்ள தீராக்காதலால் மருத்துவப் பணியை விட்டுவிட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்து பல குறும்படங்களை இயக்கி இப்பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

இப்படத்தில் தேசிய விருது பெற்ற பிரபல படத்தொகுப்பாளர் பீ.லெனின் மேற்பார்வையில், மாருதி படத்தொகுப்பு செய்துள்ளார், மற்றும் மாட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவில், சித்தார்த் விபின் இசையில், வனராஜின் கலை இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. விக்கி தயாரிப்பாளராகத் தனது கனா ப்ரொடக்சன்ஸ் மூலம் விபி கம்ப்பைன்ஸ்டன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

‘கூரன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நன்றாக இருப்பதாகவும் சுவாரசியமாக இருப்பதாகவும், இந்தக் கதை வித்தியாசமாக இருக்கிறது என்றும் பாராட்டியுள்ளார்.

இத்திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.