32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மரகதக்காடு – சமரசமில்லாப் படம்

Dinesh R சேலம் Published: 09/09/2018 3 நிமிட வாசிப்பு Updated: 13/09/2018 சினிமா
எழுத்து அளவு:

Maragathakaadu---a-film-about-forest-life

கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களைத் தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அஜய், ரஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கவிஞர் வெண்ணிலா பேசும்போது, “எனது நண்பன் இயக்குநர் மங்களேஸ்வரன், இயக்குனர் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பி இன்றோடு 20 வருடங்கள் கடந்துவிட்டது. இயக்குநர் பாரதிராஜாவைச் சந்திப்பதற்காக எழுத்தாளர் காந்தர்வன் அளித்த பரிந்துரைக் கடிதத்துடன் புறப்பட்ட அவர், இன்று தனது கனவை நனவாக்கித் தனது படத்தின் விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மிகப் பெருமையாக இருக்கிறது” என்றார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா, “இந்த விழாவில் பேசலாமா வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப் பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்துக் காட்டுக்கு சென்று, பறவைகள், பூச்சிகளோடு அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு. இந்தப் படத்தின் இயக்குநர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்தப் படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.

இந்தப் படத்தின் நட்சத்திரங்களைப் படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரைச் சப்பாணி கேரக்டருக்குத் தேர்வு செய்தேன். அழகாக இருப்பதைச் சற்று அழுக்காக்கிக் காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே, நாகேஷைப் போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தைக் கலரில் எடுத்ததால் கமலைத் தேர்வுசெய்தேன். அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.

எங்கங்கே செல்வதற்குக் கஷ்டமாக இருக்குமோ, அங்கேயெல்லாம் போய் இயற்கை அழகைத் தோண்டி எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இந்தத் திரையுலகின் சாலையைச் செப்பனிடப் போகிறவர்கள் இவர்களைப் போன்ற இளைஞர்கள் தான்.

மூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்து வைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கட்டும். அதற்குத் தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்கவேண்டும்.. அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்” என்றார் ‘மரகதக்காடு’ படத்தின் இசைத்தட்சினை வெளியிட்ட பாரதிராஜா.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.