32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன்

Dinesh R சேலம் Published: 10/09/2018 2 நிமிட வாசிப்பு Updated: 11/09/2018 சினிமா
எழுத்து அளவு:

Pariyerum-Perumal-is-a-great-film

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இந்தப் படத்தில் என்னைத் தாக்கின விஷயம் மட்டும் சொல்கிறேன். பல வருஷங்களில் ஒரு சில இயக்குநர்கள் பெரிய அளவில் வருவார்கள். இது, மாரி செல்வராஜிடம் ஆரம்பத்திலேயே தெரிந்தது. இந்தப் படம் எனக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாக ஊர்ப்பக்கம் சென்று படம் எடுப்பதற்கு ஒரு அளவீடு இருக்கிறது. அதை எப்படி உடைப்பது பற்றி மாரி செல்வராஜ் என்னிடம் பேசியது எனக்குப் பிடித்தது. உலக சினிமா, பொதுமக்களுக்குப் பிடித்தது, நமக்குப் பிடித்தது என்று மூன்று விதமாக இருந்தது. அதை அவர் சொன்ன விதம் எனக்குப் பிடித்தது.

அவர் வாழ்க்கையில் நடந்ததைச் சுற்றிப் படமாக்கி இருக்கிறார். அந்த ஊர் மக்களை அப்படியே உருவாக்கி இருக்கிறார். எல்லாத் தரப்பு மக்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், ‘கருப்பி’ பாடல் பார்த்து என்னைப் பாராட்டினார்கள். மாரி என்ற இயக்குநர் தமிழ் சினிமாவை எப்படிக் கொண்டு போவார் என்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதை நீங்கள் உணர்வீர்கள். பாடல் காட்சிகளைப் பார்த்து ரஞ்சித் மகிழ்ந்தது எனக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் படம் தயாரிக்கும் போது இதுபோன்ற படைப்புகள் கண்டிப்பாக வரும்” என்று இயக்குநர் மாரி செல்வராஜை மிகவும் புகழ்ந்தார்.

பரியேறும் பெருமாள் திரைப்படம், செப்டம்பர் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.