32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பொதுநலன் கருதி விமர்சனம்

Dinesh R சேலம் Published: 09/02/2019 2 நிமிட வாசிப்பு Updated: 02/07/2019 சினிமா
எழுத்து அளவு:

podhu-nalankaruthi-movie-review

மக்களின் பொதுநலனில் அக்கறை உள்ளதால், கம்மியான வட்டிக்குப் பணம் தருகிறோம் எனத் தனக்குத் தொழில் கற்றுக் கொடுத்தவரைக் கொன்றுவிட்டுத் தொழிலுக்கு வருகிறார்கள் உத்திரமூர்த்தியும், பாபு சேட்டும். இருவரும் தங்களுக்கென ஓர் எல்லையை வகுத்துக் கொண்டாலும், வளரத் தொடங்கியதும் இருவரில் யார் பெரியவரென்ற போட்டியும் பொறாமையும் முளைவிடுகிறது. அவர்கள் தொழிலாலும், அவர்களுக்கிடையேயான போட்டியாலும், யார் யார் பாதிப்படைகிறார்கள் என்பதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

உத்திரமூர்த்தியிடம் வேலை செய்யும் நெப்போலியனாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகன் என்று சொல்லக்கூடிய கதாபாத்திர அம்சங்கள் அனைத்தையும் பெற்று ஒரு ரவுடியாக அனைவரையும் போட்டுப் பிளக்கிறார். அவரது உயரத்திற்கு ஏற்ற ரஃப்பான ஒரு பாத்திரத்தில் முதன்முறையாகத் தோன்றியுள்ளார். உத்திரமூர்த்தியாக யோக் ஜபீ. அவரை இது போல் பாத்திரத்தில் பலமுறை பார்த்திருந்தாலும், அவரது பாத்திரத்தினை ரசிக்கமுடிகிறது. இவர்களின் தொழில் அத்தியாயத்தோடு, கிளைக்கதைகளாக இன்னும் இரண்டு கதை வருகிறது படத்தில். ஆனால், பெரும்பான்மை கதை சந்தோஷ் பிரதாப், யோக் ஜபீயை மையப்படுத்தியே!

கருணாகரனின் அண்ணன் காணாமல் போய்விடுகிறார். அவரைப் பற்றி எந்த சிறு துப்பும் கிடைப்பதில்லை. அதனால் கருணாகரனுக்கு அவரது அப்பா தரும் மன அழுத்தத்தைச் சமாளிக்கமுடியாமல் தவிக்கிறார். கருணாகரனின் அப்பாவாக நடித்திருப்பவர் கக்கும் வன்மம் அச்சுறுத்துகிறது. இன்னொரு கிளைக்கதையில் ஒரு காதல் கதை போல் ஓர் அத்தியாயம் கோர்வையற்றும் தெளிவில்லாமலும் வருகிறது. மையக்கதையோடு இயைந்து வராமலும் பொருந்தாமலும் பொலிவிழுந்தும் போகிறது. இயக்குநர் சீயோன், மூன்று கதைகளுக்கும் பொதுவான ஒரு கண்ணியை யோசித்துள்ளதை யூகிக்க முடிந்தாலும், அவை சரி வர திரையேறவில்லை.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.