Shadow

டிராகன் காதல்

Hiccup---Hidden-World

யூனிவர்சல் பிக்சர்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன், “ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: தி ஹிட்டேன் வேர்ல்ட் (How to train your Dragon: The Hidden World) படத்தினை மார்ச் 22 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

ஹிக்கப், டூத்லெஸ் மற்றும் அவர்களது வழக்கத்திற்கு மாறான நட்பின் புதிய அவதாரமான – இந்த வரிசையின் மூன்றாவது பாகமான இது. உலகம் முழுவதும், பல்வேறு வயதினரின் இதயத்தைக் கொள்ளை கொண்டதாகும். இந்தியாவில், இத்திரைப்படம் மார்ச் 22 அன்று, 2டி, 3டி மற்றும் ஐமேக்ஸ் (IMAX) வடிவங்களில் வெளியாகவுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

எதிர்பாராத ஆபத்தை எதிர்கொள்ளும் தைரியத்தைக் கண்டறிதல் தான் படத்தின் ஆச்சரியமூட்டும் மையக்கரு. இத்திரைப்படம், வளரிளம் பருவத்திலுள்ள வைக்கிங் ஹிக்கப் மற்றும் அவனது நைட் ஃபியூரி டிராகன் இடையிலான நட்பில் தொடங்கி, அவர்களது சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையைச் சொல்கிறது.

நாயகனின் நைட் ஃப்யூரி டிராகனுக்கு ஜோடியாக, திடீரென்று ஒரு பெண் லைட் ஃப்யூரி தோன்றுகிறது. டிராகன் ரொமான்ஸ், படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்று. ஹிக்கப் மற்றும் நைட்ஃபியூரி இதுநாள் வரை அவர்கள் அறிந்திருந்த ஒரே இல்லமான அவர்களது கிராமத்தை விட்டு வெளியேறி, கற்பனைக் கதைகளில் மட்டுமே அறிந்திருந்த ஒரு மறைந்த உலகை நோக்கிப் பயணிக்கின்றனர். டிராகன் மற்றும் ரைடர் இணைந்து போராடினால்தான் தங்களுடையவை அனைத்தையும் காக்கமுடியுமென்று அவர்களுக்குப் புரியவருகிறது.

Ratatouille போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவரான பிராட் லூயிஸ், இந்தப் பிரம்மாண்டமான சாகசப் பயணத்தில் இணைந்ததைப் பற்றிக் கூறியபோது, “இப்படியொரு காவிய நயமிக்க சாகசப் படத்தில் பங்கேற்பது மிக த்ரில்லிங்காக உள்ளது. பார்வையாளர்களை இப்படம் உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தும். முதல் இரண்டு டிராகன் படங்கள் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது. இத்தகைய எதிர்பாராத புதிய அத்தியாயத்தில் இணைவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இத்திரைப்படம் புதிதாய்ப் பார்ப்பவர்களுக்கு மட்டுமின்றி, முந்தைய பாகங்களின் ரசிகர்களையும் ஆழமாகத் திருப்திப்படுத்தும்” என்று கூறினார்.