32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

டெல்டாவின் உடனடி தேவை மனித சக்திதான் – நடிகர் திருமுருகன்

Dinesh R சேலம் Published: 22/11/2018 1 நிமிட வாசிப்பு Updated: 23/11/2018 காணொளிகள்
எழுத்து அளவு:

தமிழகத்தைச் சூறையாடிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் அதிக உயிர் பலிகளையும், பொருளாதார சேதங்களையும் செய்துள்ளதை அடுத்து, அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில், தங்கவும் பொங்கவும் வழியின்றித் தவித்து வருகின்றனர்.

அறுந்து விழுந்த மின் கம்பங்கள்; அழிந்துபோன கால்நடைகள்; உடைந்துபோன ஓடுகள்; சிதிலமடைந்த குடிசைகள்; இடிந்துபோன வீடுகள்; சிதைந்துபோன செல்வங்கள் என விவசாய பூமியான டெல்டாவைச் சுரண்டியெடுத்துள்ளது கஜா புயல்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சென்னையைப் போல் பெருநகரங்களில் மரபு சாரா மாதச் சம்பள வேலைகளைப் பணிபுரிபவர்கள், சென்னை வெள்ளத்திற்கு பிறகு இழந்தவற்றை கொஞ்சமேனும் மீட்டெடுத்ததைப் போல, பல வருடங்களாக வளர்த்த வாழை, தென்னை, வெளிநாடு போய் பல வருடங்கள் சம்பாதித்துச் சேர்த்த பொன் பொருட்களை முறையான மாதவருவாய் இல்லாத, எப்போதாவது சாகுபடி சமயத்தில் ஓரிரண்டு முறை பொருள் ஈட்டும் குடிமக்களால் மீட்டெடுக்க முடிவது அத்தனை சுலபம் அல்ல.

முன்பைப் போல் அல்லாமல் இம்முறை முன்னெச்சரிக்கையோடு நடந்துகொண்ட தமிழக அரசின் சேவை மதிப்பீடு செய்ய வேண்டியதுதான். எனினும் 1000 கோடி ரூபாய் நிவாரணத்தையும் தாண்டி, ஆக்கப்பூர்வமாக களத்தோடு களம் நின்று கைகோர்த்து தூக்கிவிடும் மனிதசக்திகள் இல்லாமல் தவிக்கும் தமிழக உள் மாவட்ட தோழமைகளுக்கு உதவ நடிகர் திருமுருகன் கூறும் சில யோசனைகளும்; அரசுக்கு அவர் வைக்கும் சில விண்ணப்பங்களும் அடங்கிய காணொளி!

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.